Published:Updated:

பங்குனியில் சூரிய பூஜை!

சூரிய பூஜை
பிரீமியம் ஸ்டோரி
சூரிய பூஜை ( Keshav Yadav )

பங்குனி சூரிய பூஜை

பங்குனியில் சூரிய பூஜை!

பங்குனி சூரிய பூஜை

Published:Updated:
சூரிய பூஜை
பிரீமியம் ஸ்டோரி
சூரிய பூஜை ( Keshav Yadav )

சிவபெருமானை சூரியன் தனது ஒளிக்கதிர்களால் பங்குனி மாதத்தில் பூஜிக்கும் சிறப்பு பெற்ற திருத்தலங்கள் பல உண்டு. அவற்றுள் சில:

சூரிய பூஜை
சூரிய பூஜை


கும்பகோணம்-திருவையாறு சாலையில் உள்ளது திங்களூர். இங்குள்ள கயிலாசநாதர் சமேத பெரியநாயகி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று காலை 6 மணி அளவில் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது படுகிறது. அன்று சூரிய பூஜை நடைபெறுகிறது.

தஞ்சைக்கு அருகில் உள்ள திருத்தலம் திருப்பரிதி நியமம். இங்கு அருள் புரியும் பரிதியப்பர் சுயம்பு மூர்த்தி. வருடா வருடம் பங்குனி மாதம் 17,18,19 ஆகிய நாட்களில் சூரியக் கதிர்கள் பரிதியப்பர் மீது விழுகிறது.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் உள்ளது கயிலாச நாதர் திருக்கோயில். இங்கு பங்குனி 9,10,11 தேதிகளில் சூரியக்கதிர்கள், நந்தியின் இரு கொம்புகளின் வழியாகச் சென்று சிவலிங்கத்தை வழிபடும் காட்சியை தரிசிக்கலாம்.

திருவையாறுக்கு அருகில் கண்டியூருக்குக் கிழக்கே உள்ளது திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் கோயில். இங்கு பங்குனி 13,14,15 ஆகிய நாட்களில் சூரியக் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழும்!

திருச்சி திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15,16,17,18 ஆகிய நான்கு நாட்கள் சூரிய பூஜை மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும் திருச்சி தாயுமான சுவாமி, திருமீயச்சூர் முயற்சிநாதேஸ்வரர் சுவாமி, சேறை செந்நெறியப்பர், கண்டியூர் வீரட்டேஸ்வரர், நெடுங்களம் நித்திய சுந்தரர், திருவாய்மூர் வாய்மூர்நாதர், திருவாவடுதுறை மாசிலாமணி ஈஸ்வரர் ஆகியோரையும் பங்குனி மாதத்தின் குறிப்பிட்ட மூன்று நாட்களில் சூரியன் தனது ஒளிக்கதிர்களால் வழி படுகிறான்.

_ ராதா பரிமளம், திருச்சி-21