Published:Updated:

திருப்புகழ் மகாமந்திர பூஜை! தமிழ் புத்தாண்டில் எண்ணியது நிறைவேற நீங்களும் சங்கல்பியுங்கள்!

திருப்புகழ் மகாமந்திர பூஜை

திருப்புகழ் முதலான ஞானநூல்கள் குறித்த ஆய்வுகள் செய்தவரும், சிறந்த சொற்பொழிவாளருமான திருப்புகழ் திலகம் மதிவண்ணன் நடத்தும் இந்த வழிபாட்டு வைபோகத்தில் அனைவரும் கலந்துகொண்டு அருள் பெற வேண்டுகிறோம்.

Published:Updated:

திருப்புகழ் மகாமந்திர பூஜை! தமிழ் புத்தாண்டில் எண்ணியது நிறைவேற நீங்களும் சங்கல்பியுங்கள்!

திருப்புகழ் முதலான ஞானநூல்கள் குறித்த ஆய்வுகள் செய்தவரும், சிறந்த சொற்பொழிவாளருமான திருப்புகழ் திலகம் மதிவண்ணன் நடத்தும் இந்த வழிபாட்டு வைபோகத்தில் அனைவரும் கலந்துகொண்டு அருள் பெற வேண்டுகிறோம்.

திருப்புகழ் மகாமந்திர பூஜை
தமிழ் புத்தாண்டான 14-4-2023 அன்று சக்திவிகடனும் மேலக்கோட்டையூர் ஸ்ரீமேகநாதேஸ்வரர் கோயில் நிர்வாகமும் இணைந்து திருப்புகழ் மகாமந்திர பூஜையை நடத்த இருக்கிறோம்.

காலை 10 மணி முதல் 12 மணி வரை சென்னை வண்டலூர் மேல்கோட்டையூரில் உள்ள மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் அவர்கள் இந்த பூஜையை நடத்தவுள்ளார். அனைவரும் சங்கல்பம் செய்து பயன்பெற வேண்டுகிறோம்.

திருப்புகழ் மகாமந்திர பூஜை
திருப்புகழ் மகாமந்திர பூஜை

எல்லா வளங்களையும் அள்ளித் தரப்போகும் சோபகிருது ஆண்டில் முருகனை வழிபடுவது சிறப்பானது என்கின்றன புனித நூல்கள். குறிப்பாக தமிழ் புத்தாண்டில் திருப்புகழ் மகாமந்திர பூஜை செய்ய உலகின் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

திருப்புகழ் மகா மந்திர பூஜையின் மகிமை: முருகன் அடியெடுத்துக் கொடுக்க, அருணகிரிநாதர் பாடி அருளியது திருப்புகழ். அற்புதமான இந்தப் பாடலில் முருகனை மட்டுமன்றி சைவ, வைணவ, சாக்த பேதங்கள் எல்லாம் பார்க்காம, சகல தெய்வங்களையும் உளமாரப் போற்றிப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.

அவ்வகையில் மகிமைகள் நிறைந்த திருப்புகழில் ஸ்ரீவிநாயகர், சிவபெருமான், அம்பாள், முருகன், மகாவிஷ்ணு, ஐயப்ப ஸ்வாமி, அனுமன் ஆகிய ஏழு தெய்வங்களைப் போற்றும் பாடல்களைப் பாடி, ஏழு தெய்வங்களுக்கும் உரிய ஏழு வித மலர்களைச் சமர்ப்பித்து, ஏழு வித நைவேத்தியங்களைப் படைத்து வழிபடுவது இந்தப் பூஜையின் தனிச் சிறப்பு. இப்படி ஏககாலத்தில் ஏழு தெய்வங்களை ஏகாந்தமா பூஜை செய்யும்போது கிடைக்கக்கூடிய பலன் பன்மடங்கு அதிகம்.

 திருப்புகழ் மகாமந்திர பூஜை
திருப்புகழ் மகாமந்திர பூஜை

கடன் தொல்லையால் தவிப்பவர்கள், அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கஷ்டப்படுவோர், பையனுக்கோ பெண்ணுக்கோ `இன்னும் கல்யாணமாகலையே' என்று வருந்துவோர், சொந்தமா வீடு வாசல் அமையலையேனு அல்லாடுவோர், பூர்வீகச் சொத்துப் பிரச்னையில் சிக்கி, கோர்ட்டு கேஸ்னு அலைகிறோமே என்று புலம்பித் தவிப்பவர்கள்... இப்படியான பிரச்னைகளில் இருப்பவர்கள் ஒரே ஒருமுறை இந்தப் பூஜையைச் செய்தாலே போதும் அல்லது இந்தப் பூஜையில் சங்கல்பித்துப் பிரார்த்தனை செய்யலாம். அதன் பலனாக சகல பிரச்னைகளும் விரைவில் தீரும்; அன்பர்கள் நினைப்பது நிச்சயம் நடந்தே தீரும் என்பார்கள் முருகன் அடியார்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

மந்திரங்களில் மிகவும் வலிமையானது திருப்புகழ். அப்படிப்பட்ட திருப்புகழைக் கற்க, திருப்புகழைக் கேட்க, திருப்புகழை நித்தமும் ஜபிக்க, திருப்புகழ் பூஜையை அனுதினமும் அர்ச்சிக்க... முக்தி எளிதாகும்னு சொல்லுது திருப்புகழ் சிறப்புப் பாயிரம் பாடல். அந்தத் திருப்புகழை, மகா மந்திரத்தை ஜபித்து, பூஜித்து வந்தால் எண்ணியது கிடைக்கும் என்பது நிச்சயம். குறிப்பாக தமிழ் புத்தாண்டு தினத்தில் திருப்பகழின் உச்சமான திருப்புகழ் மகாமந்திர பூஜை செய்து சங்கல்பம் செய்து கொண்டால் எண்ணியவை யாவும் நிறைவேறும் என்பது நிச்சயம்.

காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!
காஞ்சி புராணம் கண்டெடுத்த திருப்புகழ் கோயில்!

அதிலும் வருணனும் இலங்கை வேந்தன் ராவணனின் திருமகன் மேகநாதனும் வழிபட்ட மேகநாதேஸ்வரர் ஆலயத்தில் இந்த மகாபூஜையை நடத்துவது இன்னும் சிறப்பு. ஆயுள் விருத்தியை அளிக்கும் இந்த ஆலயத்தில் திருப்புகழ் மகாமந்திர பூஜையை நடத்துவது கூடுதல் பலன் அளிக்கும். உடல் மற்றும் மனப்பிணிகள் யாவும் தீர இந்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள். விரயங்கள் தீரவும், வேதனைகள் அகலவும் நிச்சயம் கந்தன் துணையிருப்பான். கல்வியில் தேர்ச்சி, நல்ல வேலை வாய்ப்பு, வெளிநாட்டு யோகங்கள் யாவும் கிட்ட இந்த பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.

அன்பான வாசகர்களே ... நம் வாசகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் அனைத்து செல்வங்களும், சகல சௌபாக்கியங்களும் பெற்று, வாழ்வில் சிறந்தோங்கவேண்டும் என்கிற நோக்கத்தில், சக்தி விகடன் மற்றும் மேலக்கோட்டையூர் மேகநாதேஸ்வரர் கோயில் நிர்வாகம் இணைந்து பெருமைமிக்க இந்த திருப்புகழ் மகாமந்திர பூஜையை நடத்தவுள்ளது. திருப்புகழ் முதலான ஞானநூல்கள் குறித்த ஆய்வுகள் செய்தவரும், சிறந்த சொற்பொழிவாளருமான திருப்புகழ் திலகம் மதிவண்ணன் நடத்தும் இந்த வழிபாட்டு வைபோகத்தில் அனைவரும் கலந்துகொண்டு அருள் பெற வேண்டுகிறோம்.

திருப்புகழ்
திருப்புகழ்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், பூஜை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு விபூதிப் பிரசாதம்  அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி பூஜை வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, பூஜை வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, பூஜை-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.  https://www.facebook.com/SakthiVikatan

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.