Published:Updated:

`நாளை ரத சப்தமியையொட்டி ஒரு நாள் பிரம்மோற்சவம்!'-திருப்பதியில் குடும்பத்துடன் முதல்வர் பழனிசாமி

TamilNadu Chief Minister Palanisaamy
TamilNadu Chief Minister Palanisaamy

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவர்தம் குடும்பத்தினரும் ஶ்ரீகிருஷ்ணா ரெஸ்ட் ஹவுஸில் ஓய்வெடுக்கிறார்கள். நாளை அவர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

திருப்பதியில் ரதசப்தமியையொட்டி ஒரு நாள் பிரம்மோற்சவம் நாளை சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த ஒரு நாள் பிரம்மோற்சவத்தில் மலையப்பசாமி நான்குமாட வீதிகளில் ஏழு வகையான வாகனங்களில் உலா வருகிறார்.

திருப்பதி
திருப்பதி
TTD PHOTO

கிடைத்ததற்கரிய பெரும் பேறான இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர். நாளை பிப்ரவரி 1-ம் தேதி சனிக்கிழமை என்பதால் ஏழுமலையான் பக்தர்கள் இதை உயர்வாகக் கருதுகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ய இன்று மாலை திருப்பதிக்கு வந்து சேர்ந்தார். அவரை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி வரவேற்றார்.

Garuda vakanam
Garuda vakanam
TTD_PHOTO

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அவர்தம் குடும்பத்தினரும் ஶ்ரீகிருஷ்ணா ரெஸ்ட் ஹவுஸில் ஓய்வெடுக்கிறார்கள். நாளை அவர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

ரதசப்தமியையொட்டி வாகன புறப்பாடு நேர அட்டவணை:

சின்னசேஷ வாகனம் - காலை 9 முதல் 10 மணிக்குள்

கருடவாகனம் - காலை 11 முதல் 12 மணிக்குள்

அனுமந்த வாகனம் - பிற்பகல் 1 முதல் 2 மணிக்குள்

சக்கரஸ்நானம் - மதியம் 2 முதல் 3 மணிக்குள்

Chakrasnanam
Chakrasnanam

கற்பக விருட்ச வாகனம் - மாலை 4 முதல் 5 மணிக்குள்

சர்வ பூபால வாகனம் - மாலை 6 முதல் 7 மணிக்குள்

சந்திர பிரபை வாகனம் - இரவு 8 முதல் 9 மணிக்குள்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இதற்காக விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு