Published:Updated:

பசுபதீஸ்வரருக்கு ஆலயம் எழுப்புவோம்!

பசுபதீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
பசுபதீஸ்வரர்

ஆலயம் தேடுவோம்

பசுபதீஸ்வரருக்கு ஆலயம் எழுப்புவோம்!

ஆலயம் தேடுவோம்

Published:Updated:
பசுபதீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
பசுபதீஸ்வரர்

`கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்
செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு
இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்
அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே!'

திருவாசகத்தின் குலாப்பத்து பதிகத்தில் தான் மாணிக்கவாசகர் இவ்வாறு பாடிப் பரவுகிறார். சிவாலயத் திருப்பணிகளுக்கு உதவுவோரின் குடும்பமும் அவர்களின் ஏழேழ் தலைமுறைகளும் சீரும் சிறப்புமாக வாழும் என்பது இப்பாடலின் சுருக்கம்.

பசுபதீஸ்வரருக்கு 
ஆலயம் எழுப்புவோம்!

ம் தென்னகத்தின் பொக்கிஷங்களாகத் திகழ்பவை ஆலயங்களே. அவை வழிபாட்டு இடங்களாக மட்டுமின்றி, நம் பாரம்பர்யத்தை, வரலாற்றைக் கூறும் இடங்களாகவும் உள்ளன. அப்படியோர் ஆலயத்தைக் கொண்டுள்ள ஊர்தான் வீரசம்பனூர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து தேவிகாபுரம் செல்லும் வழியில், சேத்துப்பட்டு வட்டம் தும்பூரை அடுத்துள்ளது வீரசம்பனூர். இந்த ஊரில் அன்னை பார்வதி தேவியுடன் பசுபதீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டு எழுந்தருளி உள்ளார் இறைவன்.

மகிமைமிக்க தேவிகாபுரத்துச் சிவாலயத் தைச் சுற்றிலும் 10 புகழ்பெற்ற சிவாலயங்கள் இருந்ததாகவும் அவற்றில் இந்த ஆலயமும் ஒன்று எனவும் சொல்கிறார்கள் ஊர் மக்கள். 32 சென்ட் அளவுக்குப் பிரமாண்டமாக இருந்த ஆலயம் இது. பிற்காலத்தில் அந்நியர் படையெடுப்பு மற்றும் தாக்குதல்களால் சிதைவுற்றுக் கவனிப்பார் யாருமின்றி போய் விட்டது என்கிறார்கள்.

தற்போது அந்த ஊராட்சித் தலைவரும் ஊர் மக்களும் இணைந்து ஆலயத்தைக் கட்டி வருகிறார்கள். ஆலயத்தைச் சுற்றிலும் பழங்கால கற்தூண்களும் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. தேய்ந்து சிதைந்து போயுள்ள அந்தக் கல்வெட்டுகளில் எத்தனை எத்தனை சரித்திரத் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றனவோ என்று சிந்தித்த வண்ணம் ஆலயத்தைச் சுற்றி வந்தோம்.

பசுபதீஸ்வரருக்கு 
ஆலயம் எழுப்புவோம்!
பசுபதீஸ்வரருக்கு 
ஆலயம் எழுப்புவோம்!

எவரோ சித்த புருஷர் ஒருவர் இங்கு ஜீவ சமாதி ஆனதாகவும், அவர் யாரென்று தற்போது வரை தெரியவில்லை என்றும் ஒரு தகவலைப் பகிர்கிறார்கள் உள்ளூர் மக்கள்.அந்த மகானின் சூட்சும சக்தியால் இங்கு வந்து வழிபடும் மக்களின் பல பிரச்னைகள் தீர்ந்துள்ளனவாம். இறையருளால் அந்தச் சித்தப் புருஷர் பற்றிய விவரமும் விரைவில் தெரிய வரும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.

இந்த ஆலயத்தின் அம்பிகை கல்யாண வரம் அருளும் தேவியாக விளங்குகிறாள். பசுபதீஸ்வரரோ, சகல வரங்களையும் அருளும் வள்ளலாகவும் குறிப்பாக கால்நடை களின் நலம் காக்கும் தெய்வமாகவும் அருள் கிறார். இங்கு வந்து கடன் பிரச்னைகள், தோஷங்கள் போன்றவற்றிலிருந்து நிவர்த்தி பெற்றவர்கள் அநேகம். மட்டுமன்றி சட்ட ரீதியான பிரச்னைகள், சொத்து சம்பந்தமான வழக்குகளால் பாதிப்புற்றவர்களும் இங்கு வந்து வழிபட்டு வெற்றி பெற்றுள்ளனராம்.

இந்த ஊருக்கு அருகிலுள்ள தும்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இந்த சுவாமி யைப் பற்றி கேள்விப்பட்டு வழிபட வந்தா ராம். ஏறக்குறைய வழக்கு ஒன்றில் தோற்கும் நிலையிலிருந்த அவர், சுவாமியின் அருளால் மிக எளிதாக வெற்றி பெற்றாராம்!

தற்போது சுவாமியின் சந்நிதி, அம்பாள் சந்நிதி மட்டுமே எழும்பியுள்ளன. இன்னும் மகா மண்டபம், மதில், தரை வேலைகள், சிறிய சந்நிதிகள், உற்சவர் சிலைகள், வாகனங் கள் போன்ற பல பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது.

பசுபதீஸ்வரருக்கு 
ஆலயம் எழுப்புவோம்!

பெரும்பாலும் விவாசாயக் கூலி வேலை மட்டுமே செய்யும் எளிய மக்கள் வாழும் ஊர் இது. அவர்களால் முடிந்தவரை திருப் பணிகள் செய்துவிட்டார்கள். மீத வேலைகள் அப்படியே உள்ளன. அவர்களின் பணியில் நாமும் கைகோக்கவேண்டும். செல்வத்தின் சிறப்பு அதைச் செலவு செய்யும் வழியில் உள்ளது என்பார்கள். நாம் நம்மால் இயன்ற பங்களிப்பை இந்தச் சிவாலயத் திருப்பணிக்கு வழங்குவோம். திருப்பணி கைங்கர்யம் சிவன ருளைப் பெற்றுத் தரும். இறையருள் நம்மையும் நம் சந்ததியையும் வாழ்வாங்கு வாழவைக்கும்.

எப்படிச் செல்வது?: ஆரணியிலிருந்து தேவிகா புரம் செல்லும் பேருந்தில் செல்லலாம். தும்பூர் பேருந்து நிலையத்தில் இறங்கி ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம்.

வங்கிக் கணக்கு விவரம்:

A/c No : 194321010000053

Bank name: union bank of India

IFSC Code: UBIN0919438

Branch: Arani kalambur

தொடர்புக்கு: 90954 32704

பசுபதீஸ்வரருக்கு 
ஆலயம் எழுப்புவோம்!

லட்சுமி தாண்டவம்!

பாண்டிய நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று, சிவகங்கை மாவட்டம்- திருப்பத்தூரில் உள்ள திருத்தளிநாதர் ஆலயம். சுந்தரமூர்த்தி நாயனார் கோயிலை வடிவமைத்து, தேவாரமும் பாடி அருளிய தலம் இது.

திருப்பத்தூரில் கௌரி தாண்டவத்தில் காட்சி தந்து நம்மைச் சிலிர்க்கச் செய்கிறார் நடராஜப் பெருமான். கௌரியான உமையவளுக்காக ஆடிய தாண்டவம் என்பதால் கௌரி தாண்டவம் எனப் பெயர் அமைந்தது.

பின்னாளில், மகாலட்சுமி இந்தத் திருநடனத்தைத் தரிசிக்க விருப்பம் கொண்டாள். இந்தத் தலத்துக்கு வந்து கடும் தவம் மேற்கொண்டாள். இறைவன், அவளுக்குத் தாண்டவக் கோலத்தில் காட்சி தந்தருளினார். எனவே, லட்சுமி தாண்டவம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கேயுள்ள இறைமூர்த்தங்கள் தவநிலையில் இருப்பதாகச் சொல்கிறது ஸ்தல புராணம். இங்கே, சந்நிதி கொண்டிருக்கும் யோக பைரவரும் சிறப்பு வாய்ந்தவர். எனவே, இந்தத் தலத்தை யோக பூமி எனப் போற்றுகின்றனர் பக்தர்கள். ஒருமுறை இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டாலே, வாழ்வில் நல்ல திருப்பங்கள் அமையும் என்பது நம்பிக்கை.

- எம்.சக்திவேல், தென்காசி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism