Published:Updated:

விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
விழாக்கள் விசேஷங்கள்!

விழாக்கள் விசேஷங்கள்!

தங்கத் தேரில் சமயபுரம் மாரியம்மன்

அம்மன் கோயில்களின் தலைமையகம் என்று போற்றப்படும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 10 ஆண்டுகளாகத் தடைப்பட்டிருந்த தங்கத் தேரோட்டம் மீண்டும் தொடங்கியது
தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இந்த ஆலயத்தில் பக்தர்கள் தங்க தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். கோயில் உள்பிரகாரம் மற்றும் ராஜகோபுரப் புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி 2011 ம் ஆண்டு முதல் இந்தத் தங்கத் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

அதன்பின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த இந்தத் தங்கத் தேரைத் தூய்மைபடுத்தி மின் விளக்குகள் பொருத்தி மீண்டும் தேரோட்டம் நடைபெறத் திட்டமிடப்பட்டு டிசம்பர் 15 ம் தேதி நடைபெற்றது. அமைச்சர் கே. என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்துத் தொடங்கி வைத்தனர்.

ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தங்கத்தேரில் தேவி பவனி வரும் அழகை தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.

தங்கத் தேரில் சமயபுரம் மாரியம்மன்
தங்கத் தேரில் சமயபுரம் மாரியம்மன்

ஶ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு


108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதசாமி திருக்கோயிலில் நடைபெறும் அத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசித் திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து, ராப்பத்து என 21 நாள்கள் நடைபெறும் இந்த வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் போது, மூலவர் ரங்கநாதர் முத்தங்கியுடன் சேவை சாதிப்பார்.
இந்தாண்டு டிசம்பர் 3-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா தொடங்கியது. ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசித் திருநாளைவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி டிசம்பர் 14 ம் தேதி நடைபெற்றது.

அன்று அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை, ரத்தின அங்கி, வைர அபயஸ்தம் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட, சரியாக அதிகாலை 4.45 மணிக்குப் பரமபத வாசல் திறக்கப்பட்டது. அடியார் திருக்கூட்டம் சூழ பரமபத வாசலைக் கடந்து சென்ற நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வின்போது பக்தர்களும் அடியார்களும் 'ரங்கா... ரங்கா' என்று உற்சாகத்தில் கோஷம் எழுப்பினர்.

சொர்க்க வாசல் திறப்பு
சொர்க்க வாசல் திறப்பு
DIXITH

சுமார் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றிருக்கிறது. காரணம் என்னவென்றால், ஸ்ரீரங்கம் கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான தைத் தேர் உற்சவம் இந்த ஆண்டு தை மாதம் நான்காம் தேதியே வந்து விடுகிறது. அப்போது அத்ய்யன உற்சவம் கொண்டாட முடியாது என்பதால் இந்த ஆண்டு கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்றே நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. ஶ்ரீரங்கம் அல்லாத பிற கோயில்களில் ஜனவரி 13 ம் தேதி வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா நடைபெறும்.