Published:Updated:

வேண்டியதை நிறைவேற்றும் தோரணமலை முருகப்பெருமானுக்கு மகா ஸ்கந்த ஹோமம்... நீங்களும் பங்கு கொள்ளுங்கள்!

மகா ஸ்கந்த ஹோமம்
News
மகா ஸ்கந்த ஹோமம்

ஜனவரி-18 ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி, மகா ஸ்கந்த ஹோமம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம், ஆன்மிக கொண்டாட்டங்கள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன.

ஆரோக்கியமும் ஆன்மிகம் ஒருசேர விளங்கும் திருத்தலம் தோரணமலை. நாவலந்தீவு என்று சிறந்து விளங்கிய நம் நாட்டில் தென்னகம் சித்தர் பெருமக்களால் நிலைத்தப் புகழைக் கொண்டிருந்தது. குறிப்பாக சிவ -பார்வதி திருமணத்தின் பொருட்டு தென்னகத்தை சமன் படுத்த இங்கு வந்த அகத்தியப் பெருமான் தோரணமலையின் அழகையும் வளத்தையும் கண்டு இங்கேயே தங்கிவிட்டார். ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகைகளைக் கண்ட அகத்தியர் முருகப்பெருமானின் வழிகாட்டலின்படி இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். அகத்தியருக்குக் காட்சி தந்த குகை முருகப்பெருமான் அவ்வப்போது ஆலோசனை தந்து அந்த இடத்தில் மாபெரும் கலாசாலையை நிறுவச் செய்து 72 விதமான பாட வகுப்புகளையும் சொல்லித் தந்தார் என தலவரலாறு கூறுகின்றது.
தோரணமலை குகை முருகப்பெருமான்
தோரணமலை குகை முருகப்பெருமான்

மருத்துவத் துறையில் மட்டும் 1 லட்சத்து 24 ஆயிரம் கிரந்தங்கள் எழுதிய அகத்தியரின் ஆற்றல் அறிந்த பல்வேறு தேசத்தைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து பாடம் பயின்றனர். பட்டங்கள் பெற்றனர் என்று தோரணமலை வரலாறு தெரிவிக்கிறது. அகத்தியரோடு இணைந்து அவரது சீடரான தேரையரும் இங்கு தங்கி இருந்து மருத்துவ ஆய்வுகள் பல செய்து புதிய மருந்துகளைக் கண்டறிந்தார். 700 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்து சேவை புரிந்த தேரையர், பின்னர் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. முருகப்பெருமானின் அருளால் பல கலைகளும் வளர்ந்த இந்த இடம் பல ஞானியர், ரிஷிகள் தவம் இருக்கவும் பயன்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பல காலம் சித்தர்களின் தாயகமாக விளங்கிய இந்த மலை, பிறகு காலப்போக்கில் யாராலும் அறியப்படாமல் வழிபாடுகள் இன்றி புகழ் மங்கிப்போனது என்கிறார்கள். வனவாசிகள் மட்டுமே உலாவி வந்த இந்த மலையைப் பற்றி ஆதிநாராயணன் என்ற அன்பரின் மூதாதையர் காலத்தில் தெரிய வந்ததாம். அப்போது அவர்கள் கனவில் தோன்றிய முருகப்பெருமான், மலைமீது குகையில் இருப்பதாக வெளிப்படுத்த, அங்கு மீண்டும் வழிபாடுகளும் விழாக்களும் உருவாகின. பிறகு ஆதிநாராயணன் காலத்தில் இந்த மலையும் ஆலயமும் பிரசித்தி பெற ஆரம்பித்தது. மலைமீது அபூர்வமான குகை முருகப்பெருமான் ஆலயமும், மலையடிவாரத்தில் வேறொரு முருகப் பெருமாம் ஆலயமும் உள்ளது. மேலும் ஸ்ரீவல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, ஸ்ரீ குருபகவான்,ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீ கன்னிமாரம்மன், நாகர்கள் போன்ற பரிவார தெய்வ சந்நிதிகளும் உள்ளன. ஆண்டுதோறும் இங்கு பங்குனி உத்திரம், சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய நாள்களில் வெகு விமரிசையாக திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.குறிப்பாக ஞானிகளும் சித்தர்களும் போற்றிய இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது என்கிறார்கள் ஊர் மக்கள்.

தோரணமலை
தோரணமலை

இந்த ஆண்டு தைப்பூச நன்னாளான ஜனவரி-18 ம் தேதி (2022) இங்கு தைப்பூச விழா நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் தொடங்கி, மகா ஸ்கந்த ஹோமம், மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வீதி உலா, திருக்கல்யாணம், ஆன்மிக கொண்டாட்டங்கள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. இந்த விழாவின் விசேஷமாக இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உழவர் பெருமக்கள், சாதனை புரிந்த நல்லோர் என விசேஷமான அன்பர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் அன்னதானமும் நடைபெற உள்ளது. இந்த தைப்பூச விழாவைக் கொண்டாட உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகா ஸ்கந்த ஹோமம் எனும் சிறப்பான வேள்வியை நடத்த உள்ளது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் நோய்கள் தீரும், தோஷ நீங்கும், குழந்தைப்பேறு உண்டாகும். மேலும் ஆரோக்கியம், ஆயுள், செல்வம், மணப்பேறு, புகழ் உள்ளிட்ட சகல நன்மைகளும் கிட்டும். நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் நீங்கும், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். செல்வவளம் பெருகவும், நிம்மதி கொண்ட நீண்ட வாழ்வு பெறவும் இந்தச் சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்றும் சித்தர்கள் அரூபமாக உலாவும் இந்த மலையில் பல அபூர்வ மூலிகைகளும், நோய் தீர்க்கும் சுனைகளும், அரியவகை உயிரினங்களும் காணப்படுகின்றன. இங்கு வந்து சென்றாலே எல்லா வகை உடல்-மன வியாதிகளும் நீங்குவதாக பல அன்பர்கள் கூறுகிறார்கள். இங்கு வந்து குகை முருகப்பெருமானை தரிசித்தால் திருமண வரன் உடனே கிடைப்பதாகவும் பலரும் கூறுகிறார்கள். கடுமையான மூட்டு வலி கொண்டவர்கள் கூட இங்கு வந்தால், நெட்டுக்குத்தாக அமைந்துள்ள இந்த மலை மீது ஏறத்துவங்கி விடுகிறார்கள் என்று ஆச்சர்யமாக சொல்கிறார்கள் இந்த ஊரார். இங்கு வந்து எந்த வேண்டுதலை வேண்டிக் கொண்டாலும் அவை உடனே நிறைவேறி விடுவதாகவும், அந்த அன்பர்களே இந்த கோயிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள். கும்பிட்ட கை கீழிறங்கும் முன்னே வேண்டியதைக் கொடுப்பவன் தோரணமலை முருகன் என்பது இங்கு வந்தவர்களின் சத்திய வாக்கு. எனவே ஆன்மிக அன்பர்கள் இந்த சிறப்பு ஹோமத்தில் கலந்து கொண்டு பலன் பெற வேண்டும், அவர்கள் எல்லாவித வளங்களையும் அடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம்.

மகா ஸ்கந்த ஹோமம்
மகா ஸ்கந்த ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.