தைப்பூசத்தில் தரிசித்தால் தோஷங்கள் நீங்கும்!

கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில், சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடைமருதூர். ஸ்ரீபிரஹத் சுந்தர குஜாம்பிகையுடன் மகாலிங்க ஸ்வாமி கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலத்தில் தைப்பூசம் சிறப்பாகக் கொண்டாடப்படும். இங்கே இவ்விழா வரகுணபாண்டியனின் கதையோடு தொடர்பு கொண்டுள்ளது.

ஒருமுறை, வரகுண பாண்டியனின் குதிரை மிதித்ததால், அந்தணர் ஒருவர் பலியானார். அதனால் பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளானான் பாண்டியன். மிகவும் பாதிக்கப்பட்ட மன்னன் சொக்கநாதரின் அருளால் திருவிடைமருதூரின் சிறப்பை அறிந்து, அங்கு சென்றான்.

திருவிடைமருதூரின் சித்தா தீர்த்தத்தில் அவன் நீராடிவிட்டு, ஆலயத்தின் 2-வது வாயிலுக்குச் சென்றபோது, அவனைப் பிடித்திருந்த தோஷம் விலகியது. இங்ஙனம் மன்னன் தோஷத்திலிருந்து விடுபட்ட நாள் தைப்பூசம். ஆகவே, இங்கு இந்த விழா சிறப்புற நடைபெற ஏற்பாடுகள் செய்தானாம் வரகுணன்.

அவனைப்போலவே, ஹம்சத்துவன் என்ற மன்னனும் ஒரு தைப்பூச நாளில் இங்கு வந்து தோஷம் நீங்கப் பெற்றான் என்கிறது தலவரலாறு. ஆக, திருவிடைமருதூர் மகாலிங்கம் ஸ்வாமியை தைப்பூசத்தில் தரிசித்தால் தோஷங்கள் விலகும் என்பது ஐதிகம்.

ஊதி மலையில் மூலிகை அபிஷேகம்!

ஈரோடு அல்லது திருப்பூரிலிருந்து காங்கேயம் வந்தால், அங்கிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலுள்ள பொன்னூதி எனும் ஊதி மலையை அடையலாம். கொங்கணச் சித்தர் போற்றிய தலம் இது. இங்குள்ள இறைவன், அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி.

மூலிகைகள் நிறைந்த அபூர்வ மலை இது; கொங்கணகிரி என்று இத்தலத்தைப் பாடுகிறார் அருணகிரியார். மலைக்கு நடுவே கொங்கணர் உருவாக்கிய முருகன் ஆலயமும், மலைக்கு மேலே கொங்கணச் சித்தர் கோயிலும் அமைந்துள்ளன. தைப்பூச நாளில் இங்கு 108 மூலிகைகளை இடித்துக் காய்ச்சி வடித்து கொங்கணவருக்கு அபிஷேகிக்கிறார்கள்.

பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தரப் படும் இந்தத் தீர்த்தம் சகல நோய்களையும் நீக்கவல்லதாம். இது, இனிப்பு நீங்கலாக ஐந்து வகை ருசிகளைக் கொண்டது என்பது சிறப்பு!

வள்ளியூரில் ஞான ஸ்கந்தன்!

நெல்லை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நெல்லையிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலைவிலுள்ளது வள்ளியூர். வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திரகிரிக்குக் கிழக்கில் உள்ள இவ்வூருக்கு வந்து குடியேறியதால், இவ்வூர் வள்ளியூர் என்று பெயர்பெற்றதாம். போரின் போது தகர்க்கப்பட்ட கிரெளஞ்ச மலையின் சிதறல்கள் விழுந்து உருவான மலையே இத்தலத்தின் வள்ளி மலை என்கிறது புராணம்.

அகத்தியருகு பிரம்ம ஞான உபதேசம் அருளியதால் இவ்வூர் முருகன், ‘ஞானஸ்கந்தன்’ என்று போற்றப்படுகிறார். முருகன் வள்ளியை மணந்த தகவல் அறிந்து கோபம் கொண்டாள் தெய்வானை. அகத்தியர் அவரைச் சமாதானம் செய்து, இரு தேவியரின் முற்பிறப்பு கதையை விளக்கினார்.

தெய்வானை உண்மையை உணர்ந்து கோபம் தணிந்து கந்தனைச் சரணடைந்தாள். இது நிகழ்ந்ததும் தைப்பூச நன்னாளில் என்கிறார்கள் பக்தர்கள். ஆகவே, இவ்வூரில் தைப்பூச உற்சவம் விசேஷம்.

தாமிரபரணியில் தீர்த்தவாரி!

நெல்லுக்கு வேலியிட்டு, பக்தனுக்கு சிவனார் அருள் செய்த தலம் திருநெல்வேலி. கயிலையை நீங்கிய உமையவள், காந்திமதி அன்னையாய் தாமிரபரணி தீரத்துக்கு வந்து தவம் செய்தாள். தவத்தில் மகிழ்ந்த ஈசன், அவளுக்குக் காட்சி தந்து தன்னுடன் சேர்த்துக்கொண்டது தைப்பூச புண்ணிய நாளில்தான். ஆகவே நெல்லையில் தைப்பூசத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

நெல்லுக்கு வேலியிட்ட ஐதிக விழா, தாமிர பரணி தீர்த்தவாரி, செளந்திர சபாநடராஜர் தாண்டவ தரிசனம் ஆகிய வைபவங்கள் இவ்விழாவின் சிறப்பம்சங்கள்!

முதல் தாண்டவம் தில்லையில்!

தில்லை சிதம்பரம் சிவனடியார்கள் போற்றும் அற்புதத் தலம். தேவர்களுக்கும் பதஞ்சலி மற்றும் புலிக்கால் முனிவருக்கும் மண்ணுலகில் - சிதம்பரத்தில் ஈசன் முதன்முதலாக ஆனந்த தாண்டவம் ஆடி அருளிய நாள் தைப்பூசம். எனவே சிதம்பரத்தில் தைப்பூசம் விசேஷம்.

மேலும் இரண்யவர்மன் என்னும் அரசன் சிவ தொண்டுகள் செய்து தில்லையில் ஈசனை நேரடியாக தரிசித்ததும் ஒரு தைப்பூச நாளில்தான்!