Published:Updated:

மகா ஸ்கந்த ஹோமம்: பிணியும் அச்சமும் நீக்கும்,செல்வமும் புகழும் சேர்ந்தே அளிக்கும்! சங்கல்பிக்கலாம்!

மகா ஸ்கந்த ஹோமம்
News
மகா ஸ்கந்த ஹோமம்

மகா ஸ்கந்த ஹோமம்: ஆரோக்கியம் பெருகவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும் இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

முருகன் என்றால் அழகு, இனிமை, இளமை, தெய்வீகம், மணம், மகிழ்ச்சி என்ற ஆறு பொருள்கள் உண்டு. இவை அனைத்தையும் கொண்டவன் என்பதால் முருகன் எனப்படுகிறான் நம் தமிழ் கடவுள். தேவர்களில் அவனே உயர்வானவன், அதனாலேயே முருகன் மலையின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறான். நாமாவளிப் பிரியனான முருகப்பெருமான் ஒவ்வொரு முறை 'முருகா' என்று அழைக்கும்போதும் அவர்களுக்கு ஆயுளை நீட்டிக்கிறான் என்பார்கள். அதுமட்டுமா முருகா என்று ஓதுவார் எல்லோரும் மும்மை நலங்களும் பெற்று உயர்வு கொள்வார்கள் என்று ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

'குறிஞ்சிக்கிழான்' எனும் மலைகடவுளான முருகப்பெருமான் தென் தமிழகத்தின் பல்வேறு தலங்களில் எழுந்தருளி இருக்கிறான். அதில் முக்கியமான திருத்தலம் தோரணமலை. தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை. அகத்தியர், தேரையர், வாலை சித்தர் என தொடங்கி ஆதிநாராயணன் போன்ற சித்தர்களும் ஞானியரும் வாழ்ந்த திருத்தலம் இது. ஸ்ரீராமர் தொடங்கி மகாகவி பாரதியார் வரை பலரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு உள்ளனர் என தலவரலாறு கூறுகிறது.

64 புனித சுனைகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளும் கொண்ட எழில் வாய்ந்த மலை இது. இங்கு தான் மலை அடிவாரத்தில் மலையின் மேலும் கோயில் கொண்டிருக்கிறான் தோரணமலை முருகப்பெருமான். மலையின் கீழே ஸ்ரீவல்லப விநாயகர், நவகிரக சந்நிதி,ஸ்ரீகுருபகவான்,ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, சப்த கன்னியர், ஸ்ரீகன்னிமாரம்மன், நாகர்கள் சந்நிதிகளும் உள்ளன. ஆண்டுதோறும் இங்கு சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், தைப்பூசம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.ஞானிகளும் சித்தர்களும் போற்றிய இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது. தை பூசத்தன்று முருகபெருமான் தருகாசுரனை வதம் செய்த நாள் எனப்படுகிறது. இதனால் ஒரு விழாவாக முருகப்பெருமான் தலங்களில் எல்லாம் அனுஷ்டிக்கப்படுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தோரணமலை
தோரணமலை

இந்த ஆண்டு தைப்பூச நன்னாளான ஜனவரி-18 ம் தேதி (2022) தோரணமலை குகை முருகப்பெருமான் கோயிலில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மகாஸ்கந்த ஹோமம் தொடங்கி, மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாணம், வீதி உலா, போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. விழாவின் சிறப்பாக இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உழவர் பெருமக்கள், சாதனை புரிந்த நல்லோர் என விசேஷமான அன்பர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் அன்னதானமும் நடைபெற உள்ளன.

சிறப்புகள் வாய்ந்த இந்த தைப்பூச விழாவை சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் ஆயுள் ஆரோக்கியம் கூடும். நிலைத்த மங்கல வாழ்வு, விரும்பிய எண்ணங்கள் கைகூடும். வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி, செல்வவளம் யாவும் கிட்டும். மேலும் அச்சமற்ற நிலை, நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். ஆரோக்கியம் பெருகவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும் இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

மகா ஸ்கந்த ஹோமம்
மகா ஸ்கந்த ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.