Published:Updated:

வளம் பெருக வாழ்க்கை மகிழ்ச்சியாக மாற, வேண்டுவன எல்லாம் தரும் மகா ஸ்கந்த ஹோமம்! சங்கல்பியுங்கள்!

மகா ஸ்கந்த ஹோமம்
News
மகா ஸ்கந்த ஹோமம்

நிலவளமும் நீர்வளமும் பெருகி இருந்த பண்டையத் தமிழகத்தில் மலையும் மலைசார்ந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த குறிஞ்சி நில மக்களிடையே முருகப்பெருமான் வழிபாடு சிறந்து விளங்கியுள்ளது

பழங்காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வரும் விழா தைப்பூசம். உலகில் முதன்முதலாக நீர் தோன்றியதும் அதில் முதல் உயிரினம் தோன்றியதும் ஒரு தைப்பூச நன்னாளில் தான் என்கின்றன ஞான நூல்கள். தமிழ் மாதத்தின் 10-ம் மாதமான தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நாளே தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளிலேயே அன்னை சக்தியிடம் முருகப்பெருமான் ஆசி பெற்று அசுரரர்களை அழித்தார் எனப்படுகிறது. 'தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த' என்ற ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் இந்த விழாவின் தொன்மையையும் சிறப்பையும் கூறுகிறது.

முருகப்பெருமான்
முருகப்பெருமான்

தமிழரின் தனிப்பெரும் கடவுளான முருகப்பெருமான் இந்நாளில் மனம் மகிழ்ந்து வரம் அளிப்பார் என நம்பப்படுகிறது. இந்நாளிலேயே முருகப்பெருமான் - வள்ளியம்மை திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தைப்பூசத்தன்று முருகப்பெருமானின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் வளம் பெருகும், சகல பாவங்களும் தீரும் என்கிறார்கள். மேலும் இந்த நாளில் தான-தர்மங்கள், ஜபதபங்கள், ஹோமங்கள் போன்ற சுப காரியங்கள், செய்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறும் என்கிறார்கள்.

நிலவளமும் நீர்வளமும் பெருகி இருந்த பண்டையத் தமிழகத்தில் மலையும் மலைசார்ந்த நிலப்பகுதிகளில் வாழ்ந்த குறிஞ்சி நில மக்களிடையே முருகப்பெருமான் வழிபாடு சிறந்து விளங்கியுள்ளது. முருகப்பெருமானின்

அறுபடை வீடுகள், முருகப்பெருமான் சூடிக்கொள்ளும்

செங்காந்தள் மலர், கடம்ப மரம், முருகப்பெருமானின் அம்சமாக விளங்கும் அவனின் கைவேல், முருகனின் வாகனமாகத் திகழும் மயில், வெற்றிக்கொடியாக விளங்கும் சேவல், முருகப்பெருமானின் நேசத்துக்குரிய வள்ளியம்மை என அனைத்துமே குறிஞ்சி நிலத்தின் அடையாளமாக விளங்குபவை. குறிஞ்சி நிலத்தின் தலைவனாகவும் கடவுளாகவும் இன்றும் என்றும் விளங்குபவன் முருகன். அதனால்தான் குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் குடி கொண்ட ஆலயமாகத் திகழ்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முருகப்பெருமான்
முருகப்பெருமான்

அதில் முக்கியமானது தென்காசி மாவட்டத்தில் உள்ள தோரணமலை. முருகப்பெருமான், நந்தியெம்பெருமான், அகத்தியர், தேரையர், வாலை சித்தர், ஆதிநாராயணன் என தொடங்கி சித்தர்களும் ஞானியரும் வாழ்ந்த திருத்தலம் இது. ஸ்ரீராமர் தொடங்கி மகாகவி பாரதியார் வரை பலரும் இங்கு வந்து முருகப்பெருமானை வழிபட்டு உள்ளனர் என தலவரலாறு கூறுகிறது.

அற்புத உயிரினங்களும், 64 புனித சுனைகளும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளும் கொண்ட எழில் வாய்ந்த மலை இது. இங்கு தான் மலை அடிவாரத்தில் மலையின் மேலும் கோயில் கொண்டிருக்கிறான் தோரணமலை முருகப்பெருமான். மலையின் கீழே ஸ்ரீவல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, ஸ்ரீகுருபகவான், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, சப்த கன்னியர், ஸ்ரீகன்னிமாரம்மன், நாகர்கள் சந்நிதிகளும் உள்ளன. ஞானிகளும் சித்தர்களும் போற்றிய இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது.

இந்த ஆண்டு தைப்பூச நன்னாளான ஜனவரி-18 ம் தேதி (2022) தோரணமலை குகை முருகப்பெருமான் கோயிலில் தைப்பூச விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், மகாஸ்கந்த ஹோமம் தொடங்கி, மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாணம், வீதி உலா, போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. விழாவின் சிறப்பாக இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உழவர் பெருமக்கள், சாதனை புரிந்த நல்லோர் என விசேஷமான அன்பர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் அன்னதானமும் நடைபெற உள்ளன.

மகா ஸ்கந்த ஹோமம்
மகா ஸ்கந்த ஹோமம்

சிறப்புகள் வாய்ந்த இந்த தைப்பூச விழாவை சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து மகாஸ்கந்த ஹோமம் ஒன்றை நடத்துகிறது. இந்த ஹோமத்தில் சங்கல்பித்துக் கொண்டால் ஆயுள் ஆரோக்கியம் கூடும். நிலைத்த மங்கல வாழ்வு, விரும்பிய எண்ணங்கள் கைகூடும். வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி, செல்வவளம் யாவும் கிட்டும். மேலும் அச்சமற்ற நிலை, நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். ஆரோக்கியம் பெருகவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும் இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்பம்+விபூதி+குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.