Published:Updated:

தஞ்சை: ஆண்டுக்கு ஒருமுறை தோன்றும் அத்தி மர ஐயப்பன்; விசேஷ படி பூஜை, விஷ்ணு பூஜை!

அத்தி மர ஐயப்பன் ( ம.அரவிந்த் )

டிசம்பர் 1 தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள சுந்தர விநாயகர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஆலயத்தில் காலை 6 மணி - 9 மணி வரை ஐயப்பனை ஆராதிக்கும் வைபோகங்கள் நடைபெற உள்ளன

தஞ்சை: ஆண்டுக்கு ஒருமுறை தோன்றும் அத்தி மர ஐயப்பன்; விசேஷ படி பூஜை, விஷ்ணு பூஜை!

டிசம்பர் 1 தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள சுந்தர விநாயகர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஆலயத்தில் காலை 6 மணி - 9 மணி வரை ஐயப்பனை ஆராதிக்கும் வைபோகங்கள் நடைபெற உள்ளன

Published:Updated:
அத்தி மர ஐயப்பன் ( ம.அரவிந்த் )
டிசம்பர் 01-ம் நாள் (2022) தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் அநேக வைபோகங்கள் நடைபெற உள்ளன.
அத்தி மர ஐயப்பன்
அத்தி மர ஐயப்பன்
ம.அரவிந்த்

இன்று கார்த்திகை 1: உலகில் உள்ள ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் மாலை அணிந்து விரதம் தொடங்கும் நாள். கலியுக தெய்வமாம் ஐயனை விரதம் இருந்து தரிசித்து வேண்டினால் துன்பங்கள் எல்லாம் விலகி வாழ்வில் ஏற்றம் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஐயப்பன் மட்டுமல்ல, விரதமிருந்து ஐயனைத் தொழப்போகும் ஒவ்வொரு அன்பரும் 'சாமி' என்று உயர்ந்த நிலை பெறுவது ஐயப்பனை ஆராதிக்கும்போது மட்டுமே என்பதும் ஐயப்பனின் சிறப்பு எனலாம்.

ஆண்டுதோறும் ஐயப்பனையும் அவர்தம் பக்தர்களையும் ஆராதிக்கும் நிகழ்வைச் செய்து வருகிறார்கள் தஞ்சை அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா ஆலய நிர்வாகிகள். அதேபோல இந்த ஆண்டும் வரும் டிசம்பர் 01-ம் நாள் (2022) தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை ஸ்ரீஐயப்பனை ஆராதிக்கும் அநேக வைபோகங்கள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம் என்பதும் விசேஷம்.

14 ஆண்டுகளாக இந்த ஐயப்ப வைபோகத்தை ஐயப்ப பக்தர்களின் நலனுக்காகவும் லோக க்ஷேமத்துக்காக நடத்தி வரும் இக்குழுவினர், இந்த ஆண்டும் விசேஷமாகத் திருமண மற்றும் தொழில் அபிவிருத்தி யோகமளிக்கும் வேண்டுதல் பூஜையாகவே நடத்த உள்ளார்கள். அதிலும் இந்த திருமேனி நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த திருப்படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளார்கள்.

அத்தி மர ஐயப்பன்
அத்தி மர ஐயப்பன்
ம.அரவிந்த்

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த அத்தி ஐயப்பனை இந்த வைபவத்தில் மட்டுமே காண முடியும் என்பது சிறப்பு. இந்த சிறப்பு மிக்க ஐயப்ப பூஜையை சபரிமலை சந்நிதான வழக்கப்படியே நடத்தித் தர சபரிமலை முன்னாள் மேல்சாந்தி பிரம்மஸ்ரீ தந்தரத்னம் இடமன பாலமுரளி நம்பூதிரி, பிரம்மஸ்ரீ கே.என்.நம்பூதிரி, பால சிவாத்மஜன் குருக்கள் ஆகியோர் வருகை தர உள்ளார்கள்.

01-12-2022 அன்று கீழ்க்காணும் நிகழ்வுகள் ஐயப்பன் அருளால் நடைபெற உள்ளன. ஐயனின் அருள்வேண்டி நீங்கள் நேரில் வந்து இங்கு உங்கள் விருப்பத்தைச் சொல்லி சங்கல்பமும் செய்து கொள்ளலாம். உங்கள் சக்தி விகடன் இந்த நிகழ்வுகளை முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் உள்ளார்கள். லோக க்ஷேமத்துக்காகவும். உங்கள் நல்வாழ்வுக்காகவும், விரும்பிய வரன் கிடைக்கவும், தொழில் செல்வ விருத்திக்காகவும் ஸ்ரீஐயப்பனை உங்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.

01-12-2022(வியாழன்) அன்று ஐயப்ப வைபோகத்தின் நிகழ்ச்சி நிரல்கள்:

காலை 6 மணிக்கு - மகாகணபதி ஹோமம், கலச பூஜை

காலை 9 மணிக்கு - தம்பதிகளின் ஒற்றுமையை ஒங்கச் செய்யும் உமா மகேஸ்வர பூஜை. அதைத்தொடர்ந்து கிருஷ்ண பூஜை. பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும் இந்த விஷ்ணு பூஜை உங்களின் சகல தோஷங்களையும் நீக்கவல்லது.

அத்தி மர ஐயப்பன்
அத்தி மர ஐயப்பன்

10 மணிக்கு ஸ்ரீஐயப்பனுக்கு கேரள முறைப்படி களபாபிஷேகம். தூய சந்தனத்தால் செய்விக்கப்படும் இந்த அபிஷேகத்தால் உங்கள் வாழ்வில் இனிமை சூழும்.

மாலை 5.30 அளவில் ஸ்ரீஐயப்பனுக்கு 1008 தாமரை மலர் அர்ச்சனை. 108 தேங்காய் உடைத்து நீராஞ்சனம். பிறகு, கண்டாலே மோட்சம் அளிக்கும் அத்தி மர ஐயப்பனுக்கு படி பூஜை செய்விக்கப்படும். இதில் கலந்து கொண்டால் வியாபார விருத்தி, நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும்.

அரிதினும் அரிதான இந்த ஐயப்ப வைபோகத்தில் நீங்களும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற சங்கல்பித்துக் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு - கணேஷ் கிருஷ்ணமூர்த்தி: 9677277277