`ஆயிரம் ஆண்டு அதிசயம்; இருமொழிகளில் குடமுழுக்கு!'- தஞ்சைப் பெரிய கோயில் விழா கோலாகலம் #Video
இன்று காலை 9.30 மணிக்கு ராஜ கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்படுகிறது.
தஞ்சைப் பெரிய கோயிலில் குடமுழுக்கு விழா இன்று நடைபெறுகிறது. அதிகாலை முதலே பூஜைகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி குடமுழுக்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமல்லாது பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். இதற்காக சுமார் 250 சிறப்பு பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்களும் தஞ்சைக்கு இயக்கப்பட்டுள்ளன.
1000 ஆண்டுகள் கடந்த, உலகப் பிரசித்திபெற்ற கோயிலான தஞ்சைப் பெரிய கோயிலில் 23 ஆண்டுகள் கழித்து நடக்கும் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு தஞ்சை நகரமே கடந்த சில நாள்களாக விழாக்கோலம் பூண்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நிகழ்வைக் காணவருவார்கள் என்பதால், கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை 9.30 மணிக்கு ராஜ கோபுரத்துக்கு குடமுழுக்கு செய்யப்படுகிறது.