Published:Updated:

``பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி" - மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை

பட்டினப்பிரவேசம்

``பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி," - மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை.

``பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி" - மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை

``பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதி தந்த தமிழக அரசுக்கு நன்றி," - மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை.

Published:Updated:
பட்டினப்பிரவேசம்

பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு அனுமதியளித்த தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை  நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் நன்றி தெரிவித்துள்ளார்.

பட்டினப்பிரவேசம்
பட்டினப்பிரவேசம்

இதுபற்றி சேயோனிடம் பேசினோம். ``பாரம்பர்யமிக்க திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்தில் தருமபுர ஆதீன குருமுதல்வர் ஶ்ரீ குருஞானசம்பந்தர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு ,ஒவ்வொரு வருடமும் பட்டினப்பிரவே நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்வில் பக்தர்கள், குருமகாசந்நிதானம் அவர்களை பல்லக்கில் அமரவைத்து திருமடத்தின் நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது பல ஆண்டுகளாக நடைபெற்று வரக்கூடிய வரலாற்று நிகழ்வு. இந்நிகழ்வுக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னையைக் காரணம் காட்டி மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் கடந்த  27.04.2022 அன்று பட்டினப்பிரவேச நிகழ்வுக்குத் தடை விதித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உலகெங்குமுள்ள தருமபுர ஆதீன சீடர்கள் வேண்டுகோளை ஏற்று, பட்டினப்பிரவேச நிகழ்வின் வரலாற்றை ஆராய்ந்து, தமிழக முதல்வர் அவர்கள் சைவ ஆதீன குருமகா சந்நிதானங்களோடு கலந்துரையாடினார்கள். தற்போது  பட்டினப்பிரவேச நிகழ்வுக்கு தமிழக அரசால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க பட்டினப்பிரவேச நிகழ்வு தங்கு தடையின்றி தொடர்ந்து நடைபெற அனுமதியளித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

பட்டினப்பிரவேச நிகழ்வில் ஏற்பட்ட பிரச்னையைக் களைவதற்கு உரிய முயற்சிகள் எடுத்து, அதற்காக பாடுபட்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு,

சேயோன்
சேயோன்

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோருக்கும்  மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism