Published:Updated:

அத்தி மர ஐயப்பன், பூரண புஷ்கலா சாஸ்தா திருக்கல்யாணம் - வைபோகத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

இதில் கலந்து கொண்டால் வியாபார விருத்தி, நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும்.

கலியுக வரதன் ஸ்ரீஐயப்பன்

ஐயப்பனை தரிசித்து வேண்டினால் கலியுக தோஷங்கள் எல்லாம் விலகி வாழ்வில் ஏற்றம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால்தான் ஆண்டுதோறும் ஐயப்பமார்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகிறது. சரணகோஷப் பிரியனான சபரிமலை சாஸ்தாவின் திருவிளையாடலோ என்னவோ இந்த ஆண்டு சபரிமலைக்கு எல்லோரும் போகக் கூடிய வாய்ப்பு கிட்டவில்லை. இருந்தாலும் என்ன! என்னை நீங்கள் தேடி வராவிட்டாலும், உங்களை நோக்கி நான் வருகிறேன் என்று அந்த காந்தமலை ஜோதி நம்மிடம் வரவிருக்கிறான்.

ஆம், வரும் டிசம்பர் 26-ம் நாள் (சனிக்கிழமை) தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள 'அருள்மிகு சுந்தர விநாயகர் - ஸ்ரீதர்ம சாஸ்தா' ஆலயத்தில் அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை அநேக வைபோகங்கள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம் என்பதும் விசேஷம்.

சாஸ்தா
சாஸ்தா

ஆண்டுதோறும் தஞ்சையில் ஐயப்பனுக்கு விசேஷ ஆராதனைகள் நடத்தி எல்லோரின் நலனுக்காகவும் வேண்டிக்கொள்ளும் விழா அமைப்பினரின் சார்பாக அன்பர் கணேஷ் கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பேசினோம்.

"12 ஆண்டுகளாக இந்த ஐயப்ப வைபோகத்தை லோக க்ஷேமத்துக்காக நடத்தி வருகிறோம். இந்த ஆண்டும் விசேஷமாக திருமண யோகமளிக்கும் வேண்டுதல் பூஜையாகவே நடத்த உள்ளோம். இந்த வைபவத்தின் விஷேசம் என்னவென்றால் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை, நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த படியில் வைத்து, படி பூஜை நடத்தவுள்ளோம்.

இந்த அத்தி ஐயப்பனை ஆண்டுக்கு ஒருமுறை இந்த வைபவத்தில் மட்டுமே காண முடியும் என்பது சிறப்பு. அதுமட்டுமா, இந்த பூஜையை சபரிமலை சந்நிதான வழக்கப்படியே நடத்தித் தர சபரிமலையின் சென்ற ஆண்டு மேல்சாந்தி ஸ்ரீசுதீர் நம்பூதிரி, குருவாயூர் - சபரிமலை மேல்சாந்தி ஸ்ரீகிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோர் வருகை தர உள்ளார்கள்.

26-12-2020 (சனிக்கிழமை) அன்று கீழ்க்காணும் நிகழ்வுகள் ஐயப்பன் அருளால் நடைபெற உள்ளன. ஐயனின் அருள்வேண்டி நீங்கள் இங்கு உங்கள் விருப்பத்தைச் சொல்லி இருந்த இடத்திலேயே சங்கல்பமும் செய்து கொள்ளலாம். உங்கள் சக்தி விகடன் இந்த நிகழ்வுகளை முகநூலில் நேரடி ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள். லோக க்ஷேமத்துக்காகவும். உங்கள் நல்வாழ்வுக்காகவும், விரும்பிய வரன் கிடைக்கவும், தொழில் செல்வ விருத்திக்காகவும் ஸ்ரீஐயப்பனை உங்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம். எல்லாம் அய்யன் ஐயப்பன் அருள்!" என்றார்.

ஐயப்பன்
ஐயப்பன்

26-12-2020 (சனிக்கிழமை) அன்று ஐயப்ப வைபோகத்தின் நிகழ்ச்சி நிரல்கள்:

காலை 6 மணிக்கு - மகாகணபதி ஹோமம், கலச பூஜை

காலை 9 மணிக்கு - தம்பதிகளின் ஒற்றுமையை ஒங்கச் செய்யும் உமா மகேஸ்வர பூஜை.

அதைத்தொடர்ந்து கிருஷ்ண பூஜை. பித்ருக்களின் ஆசியைப் பெற்றுத்தரும் இந்த விஷ்ணு பூஜை உங்களின் சகல தோஷங்களையும் நீக்கவல்லது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

10 மணிக்கு ஸ்ரீஐயப்பனுக்கு கேரள முறைப்படி களபாபிஷேகம். தூய சந்தனத்தால் செய்விக்கப்படும் இந்த அபிஷேகத்தால் உங்கள் வாழ்வில் இனிமை சூழும்.

10.30 மணிக்கு ஸ்ரீபூரண புஷ்கலா தேவியர்களோடு சாஸ்தா திருக்கல்யாண வைபோகம். அரிதினும் அரிதான இந்த வைபவத்தைக் கண்டாலே உங்கள் திருமண வாழ்வும் நலமாகும். வேண்டிய வரன் கிட்டும்; மாங்கல்ய பலம் கூடும்.

இதைத்தொடர்ந்து வெட்டுக்கோடு ஸ்ரீநாகராஜா கோயில் கோவிந்தசர்மா நம்பூதிரி தலைமையில் 'நூறும் பாலும்' என்ற சர்ப்ப தோஷ வழிபாடு நடைபெறும். இந்த வழிபட்டால் நாக தோஷம் விலகி விரும்பிய வரன் கிடைக்கும்.

சபரிமலை ஐயப்பன்
சபரிமலை ஐயப்பன்

மாலை 5.30 அளவில் ஸ்ரீஐயப்பனுக்கு 1008 தாமரை மலர் அர்ச்சனை. 108 தேங்காய் உடைத்து நீராஞ்சனம். சனிப்பெயர்ச்சியை ஒட்டி நவகிரக பூஜை. விளக்கு பூஜை நடைபெறும்.

பிறகு, கண்டாலே மோட்சம் அளிக்கும் அத்தி மர ஐயப்பனுக்கு படி பூஜை செய்விக்கப்படும். இதில் கலந்து கொண்டால் வியாபார விருத்தி, நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும்.

அரிதினும் அரிதான இந்த ஐயப்ப வைபோகத்தில் நீங்களும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற சங்கல்பித்துக் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு - கணேஷ் கிருஷ்ணமூர்த்தி: 9677277277

நீங்களும் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு