Published:Updated:

அன்பின் வழியே நின்று உலகம் வளர்ச்சி பெறட்டும்... கிறிஸ்துமஸ் தின சிறப்புக் கட்டுரை!

கிறிஸ்துமஸ்

நித்தமும் பிறக்கிறார் ஏசுபிரான்... கிறிஸ்துமஸ் தின சிறப்புக் கட்டுரை!

அன்பின் வழியே நின்று உலகம் வளர்ச்சி பெறட்டும்... கிறிஸ்துமஸ் தின சிறப்புக் கட்டுரை!

நித்தமும் பிறக்கிறார் ஏசுபிரான்... கிறிஸ்துமஸ் தின சிறப்புக் கட்டுரை!

Published:Updated:
கிறிஸ்துமஸ்
எசாயாவின் தீர்க்கதரிசனத்தின் படி புனிதையான மரியாளுக்கும் அவரோடு மண ஒப்பந்தமான ஜோசப்புக்கும் இறைமகன் இயேசு 2020 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தார். அப்போது வானதூதர்கள் உலகின் மீட்பரின் வருகையை எளியோர்களுக்கு அறிவித்தார்கள்.

'அவரே ஆண்டவராகிய மெசியா!' என்று அறிந்துகொண்ட மேய்ப்பர்களும் அவரை ஆராதித்தார்கள். பெத்லஹேமின் ஒரு தொழுவத்தில் எளிமையாகப் பிறந்த இறைமகன், எளியோர்களிடமே முதலில் அறிமுகமானார். அவரது பிறப்பே இந்த உலகுக்கு மாபெரும் செய்திகளை உணர்த்தியது. எளிமை, அன்பு, பணிவு, மன்னித்தல், இறை வணக்கம், உண்மை, உறுதி என்ற இந்த ஏழு முக்கிய நற்குணங்களை ஏசுபிரானின் வாழ்க்கை நமக்கு உணர்த்தியது. பாவங்களால் கனத்திருந்த மனிதர்களின் இதயம் புனிதம் அடையவும், இழி செயல்களால் அழியவிருந்த உலகத்தை அன்பால் காக்கவும் அவதரித்தார் ஏசுபிரான். ஆனால் உண்மையில் அவர் வாழ்க்கை தத்துவம் நமக்கு வெறும் அடையாளங்கள் மட்டுமில்லை. ஏசுவைக் கொண்டாடுவதைப் போலவே அவருடைய போதனைகளை, நல்லொழுக்கங்களைக் கொண்டாட வேண்டும் என்பதே நன்மை விளைவிக்கும் மானுட தர்மம்.

கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எங்கே அன்பு தழைத்து சக உயிர் மதிக்கப்படுகிறதோ அங்கே ஏசுபிரான் தோன்றுகிறார். எங்கே வேற்றுமைகள் மறக்கப்பட்டு சகிப்புத் தன்மை மேலோங்குகிறதோ அங்கே ஏசுபிரான் பிறக்கிறார். மறக்கவே முடியாத துன்பங்களையும் மன்னித்து ஒருவனை எவன் ஏற்றுக்கொள்கிறானோ அவன் நெஞ்சில் இறைமகன் ஒளிர்கிறான். எங்கே துணிவோடு, உறுதியோடு சத்தியம் காக்கப்படுகிறதோ அங்கே தேவமைந்தன் வந்துவிடுகிறான். எங்கே கருணை சுரந்து ஒரு உயிர் காக்கப்படுகிறதோ அங்கே அழைக்காமலேயே ஆண்டவர் ஏசு தோன்றிவிடுகிறார். இதுவே உண்மை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காலகாலமாய் மரித்தவர் எல்லாம் மண்ணாகிப் போய்விடும்போது, மரித்தவர் உயிர்த்தெழுந்த உன்னத விஷயத்தை உலகுக்குக் காண்பித்தவர் ஏசுபிரான் மட்டுமே. அவருடைய தியாகங்களே உலகுக்கு முன்மாதிரியாக இருக்கும் பெரும் பாடங்கள். காய்க்காத அத்தி மரத்துக்கும் கருணை செய்த வள்ளல் ஏசுபிரான். மரணத்தின் வாயிலிலும் சத்தியத்தை கடைப்பிடித்த தேவசுதன் ஏசு. இறுதி நிமிடத்திலும் தன்னை இன்னலுக்கு ஆளாக்கியவர்களை மன்னிக்கச் சொல்லி தம் தந்தையிடம் பிரார்த்தித்த இணையில்லா அன்பு வடிவம் ஏசுபிரான். எனவே நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு காட்டுவதே ஏசுபிரானுக்கு நாம் செய்யும் ஆராதனை. இறைமகன் ஏசுபிரான் தோன்றிய இந்த நன்னாளில் ஒழுக்கம், கருணை, உண்மை, அன்பு, பிரார்த்தனை போன்ற நல்ல விஷயங்களை நம் நெஞ்சில் ஏந்திக் கொள்வோம்.

கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்

"சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்க நான் பிறந்தேன்" என்கிறார் ஏசுபிரான். அவர் வாழ்வே உலகை உய்விக்கும் ஒரு ஜீவஒளி எனலாம். "தம்மைப் போலவே பிறரை அன்பு செய்ய வேண்டும். அமைதிக்காக உழைப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், எளிமை கொண்ட எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பணிவுடைய எல்லோரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பிறரை எப்போதும் தாழ்வாகத் தீர்ப்பிட வேண்டாம், பகைவரையும் அன்பு செய்வதே ஆண்டவனுக்குப் பிரியமான செயல், உடல் இச்சையை விலக்குங்கள், திருமண உறவை முறிக்காதீர்கள், கடவுளை நம்பியோர் உலகப் பொருள்கள் மீது பற்று வைக்காதீர்கள்" என்று பலவாறு போதித்தார். எண்ணிப் பாருங்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் போதித்த அனைத்தும் உலக மக்களின் நல்வாழ்க்கைக்காக இன்றும் பொருந்துவதை. அதனால்தானே உலகின் மணிமுடிகள் எல்லாம் இன்றும் ஏசுவின் முள்முடியின் கீழே பணிந்து நிற்கின்றன.

"என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" என்பதன் அர்த்தமே ஒருவனது அன்பும் தியாக வாழ்வும் அவனை என்றென்றும் மக்கள் மறந்து போகாமல் செய்துவிடும் என்பதுதானே. ஏசுவின் வார்த்தைகள் பொய்ப்பதில்லை, அது இறைவனின் வாக்கு. "மற்றவரை நீங்கள் மன்னிக்காவிடில், உங்கள் தேவ தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்!" என்பதை எல்லோரும் கடைப்பிடித்தாலே போதும். உலகில் பல பூசல்கள் தீர்ந்துவிடுமே. இறைமகன் பிறந்த இந்நாளில் உலகத்துக்கு ஒரு செய்தியாய் அன்பை வலியுறுத்துவோம். அதுவே கிறிஸ்துவுக்கு நாம் செய்யும் பெரும் காணிக்கை.

கிறிஸ்துமஸ்
கிறிஸ்துமஸ்

எங்கே ஓரிருவர் கூடி என்னை ஆராதித்தாலும் அங்கே தோன்றி அருள் செய்வேன் என்று கூறிய இறைவன் ஏசு, அன்பு மயமானவன். அவனை இந்நாளில் அன்பாலேயேக் கொண்டாடுவோம். வேற்றுமைகள் கொண்ட இந்த உலகில் ஒற்றுமையோடு சகிப்புத் தன்மையோடு உள்ளார்ந்த அன்போடு தேவன் ஏசுவைக் கொண்டாடுவோம்! ஆண்டவரே, அற்புதங்கள் நிகழ்த்தும் எங்கள் தூயவரே... நீவிர் பிறந்த இந்த மகத்தான நாளிலும் இனி எதிர்வரும் புத்தாண்டிலும் எங்களை ஆசீர்வாதமாக வழி நடத்துவீராக! உலகம் அன்பின் வழியே நிலைபெற்று வளர்ச்சி பொங்க வழி செய்வீராக... ஆமென்!