Published:Updated:

கார்த்திகை சோமவார மகிமை!

முருகப்பெருமான்
பிரீமியம் ஸ்டோரி
News
முருகப்பெருமான்

மு.ராஜு, சென்னை-6

ஶ்ரீரமணர் ஒருமுறை அடியார்களின் வேண்டுகோளுக்காக, அருணாசல புராணத்தை விவரித்துக் கொண்டிருந்தார். பார்வதிதேவியானவள், சிவபெருமானின் இட பாகத்தைப் பெற்றதை விவரித்தபோது, ரமணரின் குரல் கம்மியது; கண்களில் நீர் பெருக்கெடுத்தது. அந்தப் புராணத்தை விவரித்ததும் ஆழ்ந்த மௌனத்துக்குச் சென்றுவிட்டார் ரமணர் (ஆதாரம்: சூரிநாகம்மாள் - ஶ்ரீரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள்- 30.7.1948).

கார்த்திகை 
சோமவார மகிமை!

ஆம்! சிலிர்ப்பூட்டும் திருக்கதை அது. உமையவள் சிவனில் பாதியாக இடம்பெற்ற நாள் கார்த்திகை மாத சோம வாரம் (திங்கள் கிழமை). பொதுவாகவே சோம வாரம் சிறப்பு மிக்கது; கார்த்திகை மாத சோம வாரம் மேலும் விசேஷம்!

கார்த்திகையில் முருகனை வழிபடுவதும் விசேஷம். கார்த்திகையில் கந்த விரதம் கடைப்பிடிப்பதால், சகல நலன்களையும் பெறலாம்; நாம் நினைத்த நற்காரியங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். இந்த விரதத்தின் மகிமையை கார்த்திகைப் பெண்களிடம் சிவனாரே விவரித்ததாகக் கந்தபுராணம் குறிப்பிடுகிறது:

`கந்தன்தனை நீர் போற்றிய கடனால் இவன் உங்கள்

மைந்தன் எனும் பெயராகுக மகிழ்வால் எவரேனும்

நுந்தப் பகலிடை இன்னவன் நோன்றாள் வழிபடுவோர்

தந்தம் குறைமுடித்தே பரம்தனை நல்குலம் என்றான்'

அதாவது, `கார்த்திகைப் பெண்களே! நீங்கள், கந்தனுக்குப் பாலூட்டிப் போற்றிய தால், அவன் கார்த்திகேயன் எனும் பெயர் பெறுவான். கார்த்திகை விரதம் இருந்து முருகனை வழிபடுபவர் எவராக இருந் தாலும், அவர்களின் குறைகள் நீங்கும்; வேண்டுதல்கள் நிறைவேறும்; அவர்களுக்கு முக்தி அளிப்பேன்' என்று அருளியுள்ளார் சிவபெருமான்!