Published:Updated:

அதர்மத்தை அழிக்க சங்குசக்கரம் ஏந்தி அவதரித்த குழந்தை... கிருஷ்ண ஜயந்தி மகிமைகள்!

Lord Krishna
Lord Krishna ( Kesev )

மற்ற எந்தக் கடவுளையும் அவர்களுக்குரிய ஜயந்தி தினங்களில் குழந்தையாகப் பாவித்து வழிபடுவதில்லை. ஆனால், கிருஷ்ண ஜயந்தி அன்று பகவான் கிருஷ்ணரை குழந்தையாகவே பாவிக்கிறோம். அது ஏன் தெரியுமா?

கடவுள் இந்த பூமிக்கு வந்து அவதரித்த தினங்களையே ஜயந்தி விழாவாகக் கொண்டாடுகிறோம். 'விநாயகர் சதுர்த்தி', 'நரசிம்ம ஜயந்தி', 'ராம நவமி' என்று கொண்டாடப்படும் ஜயந்திப் பண்டிகைகளுள் மாறுபட்டது, 'கிருஷ்ண ஜயந்தி'.

Vikatan

மற்ற எந்தக் கடவுளையும் அவர்களுக்குரிய ஜயந்தி தினங்களில் குழந்தையாகப் பாவித்து வழிபடுவதில்லை. ஆனால், கிருஷ்ண ஜயந்தி அன்று பகவான் கிருஷ்ணரை குழந்தையாகவே பாவிக்கிறோம். அது ஏன் தெரியுமா?

குழந்தைகள், நம் இல்லங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருபவர்கள். நம் கவலைகளை எல்லாம் மறக்கச் செய்பவர்கள். நமக்கு எவ்வளவு கவலைகள் இருந்தாலும், வீட்டில் இருக்கும் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்கிறபோது, அவை நொடியில் மறந்துபோய்விடும்வா. அப்படித்தான், இந்த உலகின் கவலைகளை மறக்க அந்த இறைவனையே குழந்தையாக்கி நம் இல்லத்தில் தவழவிடுகிறோம்.

Lord Krishna
Lord Krishna

கிருஷ்ண ஜயந்தி அன்று, இறைவன் தன் பாதங்கள் பதித்து நம் வீடுகளுக்குள் வருவதுபோன்று கோலமிடுகிறோம். சின்னச் சின்ன மாக்கோலங்களைக் காணும்போதே, அதில் ஒரு சிறு குழந்தை தத்தித்தத்தி நடந்துவந்த தடயம் தெரியும். வீட்டின் வாசலில் இருந்து பூஜை அறைவரை நீளும் அந்த காலடித் தடம் முடியும் இடத்தில் பால கிருஷ்ணன், விக்ரஹமாகவோ திருவுருவப் படமாகவோ நிற்பான்.

கிருஷ்ண ஜயந்திக்கு, 'கோகுலாஷ்டமி' என்றும் பெயர். பிற ஜயந்திகள் கடுமையான விரதங்களைக் கோருபவை. ஆனால் ஜன்மாஷ்டமியோ, கொண்டாட்டத்தைக் கொண்டுவருவது. கண்ணன் பிறந்ததும் கோகுலமே கொண்டாடி மகிழ்ந்தது. கோகுலாஷ்டமி நாளில் நாம் கொண்டாடும் கிருஷ்ணன், கம்சனை சம்ஹரித்த கிருஷ்ணனாக அல்ல, கீதையை உபதேசித்த கிருஷ்ணனாக அல்ல...

Lord Krishna
Lord Krishna

எல்லோர் மனத்தையும் கொள்ளைகொண்ட பால கிருஷ்ணனாகவே வழிபடுகிறோம். அதனால்தான் கோகுலவாசிகள் அன்று கொண்டாடியது போல இன்றும் பக்தர்கள், கோகுலாஷ்டமியைக் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாளில் பக்தர்கள் கூடி உரியடிப்பதும், நடனமாடுவதும், சறுக்குமரம் ஏறுவதும் கொண்டாட்டத்தின் வெளிப்பாடுகள்தான்.

தேவகியின் மைந்தனாக கிருஷ்ணன் நள்ளிரவில் அவதரித்தார். 'தமத்புதம் பாலகம் அம்புஜேக்ஷணம் , சதுர்ப்புஜம் சங்க கதார்யுதாயுதம்' என்று ஶ்ரீமத் பாகவதம், கிருஷ்ணரின் அவதார கணத்தை வர்ணிக்கிறது. கிருஷ்ணர், பாலகராகத் தோன்றுகிறபோது, 'ஒரு முழுநிலவு போல சங்குசக்ர கதாதரனாகத் தோற்றமளித்தார்' என்கிறது பாகவதம்.

Lord Krishna
Lord Krishna

கிருஷ்ணன் பிறப்பதற்கு முன்பாகவே, அதர்மம் எச்சரிக்கப்பட்டுவிட்டது. கம்சனுக்கு கிருஷ்ணாவதாரம் குறித்த எச்சரிக்கை செய்யப்பட்டபோதும், அவன் தன் மமதையால் அசட்டையாக இருந்தான். பிழைகளைச் சரிசெய்ய மேலும் பிழைகள் செய்வதுபோல, 'தேவகிக்குப் பிறக்கும் குழந்தைகளைக் கொல்வதன் மூலம்தான் பிழைத்திருக்கலாம்' என்று நினைத்தான். ஆனால், கிருஷ்ணர் அவதரித்த முதல் நாளிலேயே அவன் பிரயத்தனங்கள் எல்லாம் வீணாயின. பகவான், ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் கோகுலத்தில் வளர ஆரம்பித்தார்.

கோகுலம், தன் தவத்தின் பலனாய் கிருஷ்ணனை அடைந்தது. கோபியர்கள் கிருஷ்ணனைத் தாலாட்டினர். அவன் அன்பிற்கு தங்களை அர்ப்பணித்துக்கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரை, 'பிருந்தாவனம் பொய்; வைகுந்தம் பொய். மோட்சம் பொய்; கண்ணன் மட்டுமே உண்மை. அவன் மட்டுமே சாஸ்வதம்.'

Vikatan
சரணாகதியினால் பக்தியின் சிறப்பை விளக்குவது ராமாவதாரம் என்றால், பிரேம பக்தியின் சிறப்பை விளக்குவது கிருஷ்ணாவதாரம். கோபியர், கலியுக பக்தர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக விளங்கினர். கிருஷ்ணரும் பாகவதோத்தமர்களையே தன் சகாக்களாகக் கருதினார். பாகவதர்களின் சிறப்பையே பாகவதம் விதந்தோதுகிறது.

கிருஷ்ணனுக்கு உகந்தது, நாம சங்கீர்த்தனம். கிருஷ்ணனுக்கு உயர்ந்த பூஜையும் அதுவே. கிருஷ்ண ஜயந்தி நன்னாளில் அவனை பாடித் துதித்துப் போற்றி மகிழலாம். மேலும், இந்த நாள் குழந்தைகளுக்கானது. அதனால்தான், வீடுகள்தோறும் பட்சணங்களும் பலகாரங்களும் செய்து குழந்தைகளுக்குத் தந்து அவர்களை மகிழ்விக்கிறோம். அவர்களுக்கு கண்ணனின் வேடமிட்டு மகிழ்கிறோம். கண்ணன் அவர்கள்மூலம் நம் இல்லத்தில் அன்பையும் கருணையையும் எப்போதும் பொழிவான்.

கிருஷ்ண ஜயந்தி கொண்டாடுவது ஏன்? #KrishnaJayanthi படங்கள் : கேஷவ், வீடியோ : சைலபதி, சி.வெற்றிவேல்.

Posted by Sakthi Vikatan on Thursday, August 22, 2019
அடுத்த கட்டுரைக்கு