திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
தொடர்கள்
Published:Updated:

அதிகாலையில் போற்றுவோம் ஸ்ரீலலிதாம்பிகையை!

ஸ்ரீலலிதாம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீலலிதாம்பிகை

வேண்டும் வரங்கள் அருளும் கிரக தோஷங்களை அழிக்கும் ஸ்ரீலலிதா பஞ்சரத்னம் ஸ்தோத்திர மாலை!

திசங்கர பகவத்பாதாள் அருளிச்செய்த ஸ்தோத்திர மாலைதான் ஸ்ரீலலிதா பஞ்சரத்னம். பண்டாசுரனை வதம் செய்த அம்பிகையை, வாக்தேவியர் முதலான தேவர்கள் எல்லோரும் பணிந்து ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தைச் சமர்ப்பித்தனர். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் போலவே சகல நன்மைகளையும் அருளும் ஸ்தோத்திர மாலையே ஸ்ரீலலிதா பஞ்சரத்னம்.

அதிகாலையில் இந்த ஐந்து ஸ்லோகங்களையும் சொல்லி வணங்கினால், அன்னையின் அருள் நம்மோடு இருக்கும். குறிப்பாகக் குழந்தைகள் இந்த பஞ்சரத்னத்தை மனனம் செய்து தினமும் சொல்ல, நினைவாற்றல் கூடும். கல்வியில் மேன்மை கிட்டும்.

அதிகாலையில் போற்றுவோம்
ஸ்ரீலலிதாம்பிகையை!

ஐந்து ஸ்லோகங்களே என்றபோதும் அவை அருளும் அற்புத பலன்கள் அநேகம். ஆறாவது ஸ்லோகமாக அமையும் பல ஸ்துதி, ‘இந்த ஐந்து ஸ்லோகங்களையும் சொல்லிவர வளமிக்க வாழ்வு கிடைக்கும். மகிழ்ச்சி, கல்வி, செல்வம், குறைவற்ற சௌக்யம், புகழ் ஆகியவை கிடைக்கும்’ என்கிறது. இதோ அந்த அற்புத பஞ்சரத்னங்கள்...

1. ப்ராத: ஸ்மராமி லலிதாவதநாரவிந்தம்

பிம்பாதரம் ப்ருதுலமௌக்திக சோபிநாஸம் I

ஆகர்ணதீர்க்க நயனம் மணி குண்டயாட்யம்

மந்தஸ்மிதம் ம்ருகமதோஜ்வலபாலதேசம் II

கருத்து : இந்தக் காலைவேளையில் லலிதா தேவியின் தாமரைபோன்ற திருமுகத்தைத் துதிக்கிறேன். கோவைப் பழம்போன்ற அவளின் சிவந்த உதடுகள், முத்துகளால் ஆன மூக்குத்தி, மாணிக்கங்களால் ஆன குண்டலங்கள், புன்முறுவல் தவழும் இதழ்கள், கஸ்தூரி திலகம் திகழும் நெற்றி, இவற்றால் ஜொலிக்கும் அற்புதத் திருமுகம் அவளுடையது.

2. ப்ராதர் பஜாமி லலிதா புஜகல்பவல்லீம்

ரக்தாங்குலீயலஸதங்குலி பல்லவாட்யாம் I

மாணிக்யஹேம வல்யாங்கதசோபமாநாம்

புண்ட்ரேஷசாபகுஸுமேஷஸ்ருணீர்ததாநாம் II

அதிகாலையில் போற்றுவோம்
ஸ்ரீலலிதாம்பிகையை!

கருத்து : கற்பகக் கொடிபோலத் திகழும் அன்னை லலிதாம்பிகையை இந்தக் காலைவேளையில் சேவிக்கிறேன். ஒளிவீசும் துளிர்போன்ற விரல்களில் சிவந்த மோதிரம் அணிந்தவளாகவும், மாணிக்கம் பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளாகவும், தோள்வளைகளை அணிந்தவளாகவும் காட்சி கொடுக்கிறாள். திருக்கரங்களில் கரும்பு வில்லும், புஷ்ப பாணங்களும் ஏந்தியிருக்கிறாள்.

3. ப்ராதர் நமாமி லலிதாசரணாரவிந்தாம்

பக்தேஷ்டதாந நிரதம் பவஸிந்துபோதம்!

பத்மாஸநாதி ஸுரநாயக பூஜநீயம்

பத்மாங்குச த்வஜஸுதர்சனலாஞ்சநாட்யம் II

கருத்து : சம்சாரக் கடலைக் கடக்க உதவுபவளும் பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய் பவளுமான அன்னையை இந்தக் காலைவேளையில் வணங்குகிறேன். பிரம்மன் உள்ளிட்ட அனைத்து தேவர்களால் வணங்கப்படுபவளும் தாமரை, அங்குசம், கொடி, சுதர்சனம் ஆகிய லட்சினைகளைத் தாங்கி நிற்பவளுமான அன்னையின் தாமரைத் தாள்களைப் போற்றி வணங்குகிறேன்.

4. ப்ராத:ஸ்துவே பரசிவாம் லலிதாம்பவாநீம்

த்ரய்யந்த வேத்ய விபவாம் கருணாநவத்யாம்I

விச்வஸ்ய ஸ்ருஷ்டி விலயஸ்திதி ஹேது பூதாம்

வித்யேச்வரீம் நிகம வாங்கமநஸாநிதூராம் II

கருத்து : லலிதாம்பிகையின் மகிமையை உபநிஷத்துகளால் தெரிந்து தெளியலாம். அவள், மாசற்ற கருணை கொண்டவள். இந்தப் பூவுலகைப் படைக்கவும், காக்கவும் பின்பு அழிக்கவும் செய்பவள். வேதம், வாக்கு, மனம் அனைத்துக்கும் அப்பாற்பட்டவள். இத்தகைய சிறப்புகளையுடைய ஸ்ரீலலிதாம்பிகையை இந்தக் காலைவேளையில் வணங்குகிறேன்.

அதிகாலையில் போற்றுவோம்
ஸ்ரீலலிதாம்பிகையை!

5. ப்ராதர் வதாமிலலிதே தவபுண்ய நாம

காமேச்வரீதி கமலேதி மஹேச்வரீதி I

ஸ்ரீசாம்பவீதி ஜகதாம் ஜநநீபரேதி

வாக்தேவதேதி வசஸா த்ரிபுரேச்வரீதி II

கருத்து : அன்னையின் திருநாமங்கள் அனைத்தும் புண்ணியமானவை. காமேஸ்வரி, கமலா, மஹேஸ்வரி, சாம்பவி, வாக் தேவதை, த்ரிபுராம்பிகை என்று பல்வேறு நாமங்களைக் கொண்டவளும் உலகில் மிகவும் உயர்ந்தவளுமான அன்னையை இந்தக் காலைவேளையில் போற்றுகிறேன்.

பல ஸ்துதி:

6. ய:ச்லோக பஞ்சகமிதம் லலிதாம்பிகாயா:

ஸெளபாக்யதம் ஸுலலிதம்படதிப்ரபாதே I

தஸ்மை ததாதி லலிதா ஜடிதி ப்ரஸந்நர்

வித்யாம் ஸ்ரீயம் விமலஸெளக்ய மனந்தகீர்திம் II

கருத்து : ஸ்ரீலலிதாம்பிகையைத் துதிக்கும் இந்த ஐந்து ஸ்தோத்திரங்களையும்

சொல்பவர்கள் வளமிக்க வாழ்வை அடைவார்கள். சொல்வதற்கு எளிமையான இந்த ஸ்தோத்திரங்களைத் தினமும் காலையில் பாராயணம் செய்தால், கல்வி, செல்வம், சுகம், புகழ் ஆகியவற்றை அன்னை ஸ்ரீலலிதாம்பிகை அருள்வாள். இந்த நவராத்திரி தினங்களில் காலையில் இந்தப் பஞ்சரத்னங்களை நாமும் சொல்லி நம் குழந்தைகளையும் சொல்ல வைத்து, அன்னையின் அளவில்லாத அன்புக்குப் பாத்திரர்கள் ஆவோம்.