Published:Updated:

"நோய் தீர்க்கும்... வளம் சேர்க்கும்... பரிகாரமாகும் பதிகங்கள்!" - ரேவதி சங்கரன் #Video

பரிகாரப் பதிகங்கள்

பரிகாரங்களாக விளங்கும் பதிகங்கள் குறித்து விளக்குகிறார் ரேவதி சங்கரன்.

Published:Updated:

"நோய் தீர்க்கும்... வளம் சேர்க்கும்... பரிகாரமாகும் பதிகங்கள்!" - ரேவதி சங்கரன் #Video

பரிகாரங்களாக விளங்கும் பதிகங்கள் குறித்து விளக்குகிறார் ரேவதி சங்கரன்.

பரிகாரப் பதிகங்கள்

இருளில் தவிப்பருக்கு வெளிச்சமாகத் திகழ்வதே பக்தியின் வேலை. இஷ்டமான தெய்வங்களை வேண்டிக் கவலை, பயத்திலிருந்து விடுபட உதவுவதுதான் ஆன்மிகத்தின் சாரம். குறிப்பாக ஆன்மிகத்தின் சிறந்த பணியே துக்கத்தை விலக்குவதுதான். துக்கம் நம் அறியாமையால் நிகழ்கிறது. முன்வினைப் பயன்களாலேயே நாம் துயருருகிறோம் என்கிற தெளிவு இல்லாமல் வருந்தும் ஆன்மாக்களின் துக்கத்தைப்போக்கி அவர்கள் வேண்டும் வரம் தரும் வழிபாடாகத் திகழ்பவையே திருமுறைப் பதிகங்கள்.

திருமுறைகள் இறைவனின் சொற்கள் என்கிறார்கள் முன்னோர்கள். அப்படிப்பட்ட திருமுறைகளைப் பாடும்போது நமக்குள் பக்தி உணர்வு பெருகுவதோடு நற்பலன்களும் கைகூடும்.

சிவபெருமான்
சிவபெருமான்

சமயக்குரவர்களால் பாடப்பட்ட திருமுறைகள் மந்திரங்களுக்கு நிகரானவை. இறைவனே விரும்பி எழுதியும் கேட்டும் மகிழ்ந்தவை. இப்படிப்பட்ட திருமுறைகளுக்குள்ளேயே நம் வாழ்வுக்குத் தேவையான பரிகாரங்கள் இருக்கின்றன என்கிறார்கள் பெரியோர்கள். குறிப்பாக நோய் தீர்க்கும் பதிகமாகக் கருதப்படும் திருநீற்றுப் பதிகத்தைப் பாடினால் நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. இதற்கு ஆதாரமாக ஞானசம்பந்தர் வாழ்வில் நிகழ்ந்த சம்பவத்தைக் கூறுவர் ஞானிகள். நோய் மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்வில் நமக்குத் தேவையாக இருப்பது செல்வம். நல்ல வளமான வாழ்க்கை. நல்ல மனநலம் என்று இந்த உலகில் வாழத் தேவையான சகலத்தையும் நமக்கு வாரி வழங்குபவை.

இன்று பரிகாரங்கள் என்று மக்கள் பலரும் பொருட் செலவில் அலைந்து திரிகிறார்கள். வீட்டிலேயே மிக எளிதாகச் செய்யும் பரிகாரங்களாக விளங்குகின்றன பதிகங்கள் என்கிறார் ரேவதி சங்கரன். சொல்ல எளிதான பதிகங்களையும் அவை தரும் பலன்களையும் நமக்கு விளக்கும் ரேவதி சங்கரன் அதைப் பாடியும் காட்டுகிறார். அற்புதமான அவரின் விளக்கத்தைக் கேட்கக் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.