Published:Updated:

கோபம் தீர்ந்த சரஸ்வதி, வரம் அருளும் விஷ்ணு... திருப்பாற்கடல் திவ்ய தேச மகிமைகள்! #Video

திருப்பாற்கடல்
திருப்பாற்கடல்

திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து பிறந்தவர் பிரம்மா; படைப்புக்கு அதிபதி என்ற ஆணவம் தலை தூக்கியது பிரம்மாவுக்கு. ஆணவம் அதிகமானால் இறைவனிடமிருந்து நாம் விலகிவிடுவோம் அல்லவா... அப்படித்தான் ஆணவம் பிரம்மாவைத் திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டத்தில் உள்ளது திருப்பாற்கடல் திருத்தலம். சென்னை - வேலூர் சாலையில் சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ளது காவேரிப்பாக்கம். இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.

திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து வந்தவர் பிரம்மா; படைப்புக்கு அதிபதி என்று மகா பெருமையுடன் திகழும் ஸ்ரீபிரம்மாவுக்கு, ஆணவம் தலை தூக்கியது. ஆணவம் அதிகமானால் இறைவனிடமிருந்து நாம் விலகிவிடுவோம் அல்லவா... அப்படித்தான் ஆணவம் அவரைத் திருமாலிடம் இருந்து சற்றே அவரைப் பிரித்தது.

பிரம்மா
பிரம்மா

கர்வம் என்பது நமக்கெல்லாம் அலட்டல். ஆனால் இறைவனின் கர்வத்தில், உலக உயிர்களுக்கான பாடம் அரங்கேறும் விளையாட்டு நிகழும். ஒருகட்டத்தில், உண்மையை உணர்ந்து கொண்ட ஸ்ரீபிரம்மா, தற்போதைய காஞ்சியம்பதிக்கு வந்து திருமாலை மனதில் நிறுத்தி, யாகம் ஒன்றை நடத்துவது என முடிவு செய்தார்.

மனைவியை அருகில் வைத்துக் கொண்டு யாகமும் பூஜையும் செய்வதுதானே மரபு! எனவே, ஸ்ரீசரஸ்வதி தேவியை யாகத்துக்கு வரும்படி அழைத்தார். ஆனால், சரஸ்வதி கல்விக்கு அதிபதி. கல்வி என்பதே பணிவோடு நடந்துகொள்வதுதானே. 'கர்வத்துடன் திரிவது கணவனேயானாலும் மன்னிக்க மாட்டேன்’ என்று சொல்லி, யாகத்துக்கு வர மறுத்தாள். உடனே, பிரம்மதேவன் சாவித்திரியையும் காயத்ரியையும் அழைத்துக் கொண்டு, யாகத்துக்குப் புறப்பட்டார். இதில் ஆவேசமானாள் சரஸ்வதி. அவளும் பூமிக்கு வந்தாள். நதியாக உருவெடுத்து, யாகம் நடைபெறும் இடத்தையே வெள்ளத்தால் மூழ்கச் செய்யத் திட்டமிட்டாள்.

மகாவிஷ்ணு
மகாவிஷ்ணு

மனம் ஒன்றிய கணவனும் மனைவியும் இணைந்து வாழ்வதுதானே சிறப்பு. அதைவிடுத்து ஒருவருக்கொருவன் சண்டை இட்டுக்கொண்டிருந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? பிரம்மா சரஸ்வதி இருவருக்கிடையில் இருக்கும் பிணக்கை நீக்க விஷ்ணு மனமிரங்கினார். அதன் பின் நடந்த திருவிளையாடல் இன்றளவும் உலக மக்களின் நன்மைக்கானது.

இதுகுறித்து மேலும் அறிந்துகொள்ளவும் கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்க செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அறிந்துகொள்ளவும் கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு