Published:Updated:

சனீஸ்வரபகவான் அவதரித்த திருக்கொடியலூரில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு!

27.12.2020 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகிலுள்ளது திருக்கொடியலூர். இந்த  ஊரில் ஶ்ரீ ஆனந்தவல்லி சமேத ஶ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது யமதர்மனும் சனீஸ்வர பகவானும் அவதரித்த தலம் என்பது விசேஷ தகவல். சூரிய பகவான் அவர்  மனைவியர்களான உஷாதேவி, சாயாதேவி ஆகிய மூவரும் கூடி ஈசனை ஆராதித்த தலம் இது என்பதால் திருக்கூடியலூர் என்றானது. அதுவே மருவி திருக்கொடியலூர் என்றானதாம். அகத்திய மாமுனி பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கத் திருமேனி என்பதால் சுவாமி அகத்தீஸ்வரர் என்றானார். இந்த தலத்தில் பரிவார தேவதைகளாக விளங்கும் யமதர்மனையும், சனிபகவானையும் வழிபட்டால் கால பயமும் சனி தோஷ துன்பங்களும் நீங்கி விடுவதாக ஐதிகம். 

ஒருமுறை இந்திரனைப் பீடித்த சனிபகவான் இங்கு வந்து ஒளிந்திருந்ததாகவும் ஈஸ்வர கிருபையால் அவன் தோஷம் விலகியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

அருள்மிகு அகத்தீஸ்வரர், அருள்மிகு ஆனந்தவல்லி
அருள்மிகு அகத்தீஸ்வரர், அருள்மிகு ஆனந்தவல்லி

வரும் 27-12-2020 முதல் தொடங்கவிருக்கும் சனிப்பெயர்ச்சியால் ஜீவன சனி - மேஷம், பஞ்சம சனி - கன்னி, 7 ½ சனி தொடக்கம் - கும்பம், ஜென்ம சனி - மகரம், பாத சனி - தனுசு, அஷ்டம சனி - 

மிதுனம், கண்ட சனி - கடகம், அர்தாஷ்டம சனி - துலாம் என வரவுள்ளது. மேற்கண்ட ராசிக்காரர்கள் சனிப்பெயர்ச்சி அன்று தோஷ பரிகாரங்கள் செய்து கொள்வது நல்லது. அதிலும் சனிபகவான் பிறந்த இந்த தலத்தில் செய்து கொள்வது சிறப்பிலும் சிறப்பானது.

சனியின் பாதிப்பால் ஏற்படும் சகலத் துன்பங்களையும் இந்த தலம் நீக்கும். இங்கு வந்து ஈசனுக்கும் இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால், அனைத்து பிரச்னைகளும் நீங்கும். இங்கு வந்து எள் தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் எல்லாவித தோஷங்களும் விலகும். இந்த ஆலயத்தில் சனிப்பெயர்ச்சியை ஒட்டி சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

இந்த ஆலயத்தில் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு ஆராதனைகளை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் நேரடியாக கண்டும் வேண்டிக் கொள்ளலாம்.

தொடர்புக்கு: 8754756418

சனீஸ்வர பகவான்
சனீஸ்வர பகவான்

சனிப்பெயர்ச்சி சிறப்புப் பரிகார ஹோமம்

சக்தி விகடனும் ஶ்ரீவிஜய விஸ்வமாதா ராஜராஜேஸ்வரி பீடமும் இணைந்து வழங்கும் இந்த ஹோமம், பாண்டிச்சேரி - கடலூர் மார்க்கத்தில், இடையார்பாளையம் கிராமம் அருகில் ஞானமேடு கிராமத்தில் (சப்தகிரி நகர்) உள்ள அருள்மிகு சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆலயத்தில் நடைபெறவுள்ளது.

பைரவ குருஜீ முத்து குருக்கள் தலைமையில் ஹோமபூஜைகள் நடைபெறவுள்ளன. இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜையும், தேய்பிறை அஷ்டமி பூஜையும் மிகவும் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக சிறப்பு ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

சனிப்பெயர்ச்சி பரிகார ஹோம வைபவத்தில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், கிரகங்களின் மூலமந்திர ஹோமம், ம்ருத்யுஞ் ஜய ஹோமம், சனிப்பெயர்ச்சி பரிகார ஹோமம் ஆகியன நடைபெற உள்ளன.

27.12.2020 ஞாயிறு அன்று காலை 10 மணி முதல் நடைபெறவுள்ள இந்த ஹோமத்தில் வாசகர்கள் சங்கல்பம் செய்து பயன் அடையலாம்.

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.250 மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படுவதுடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்- 6.1.2021 தேதிக்குள்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவைப் பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில் அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன.

ஆக, நேரில் தரிசிக்க இயலாத நிலையில்... வாசகர்கள் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் விரைவில் வீடியோ வடிவில் சக்தி விகடன் Youtube சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்!

நீங்களும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

மேலும் தகவல்களுக்கு: 89390 30246

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு