Published:Updated:

புரட்டாசி மகிமைகள்: புண்ணியம் தரும் பெருமாளின் திருநாமங்கள் - விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதன் பயன்கள்!

புரட்டாசி மகிமைகள் - விஷ்ணு சஹஸ்ரநாமம்

சின்னக் கண்ணாடியில் மலை தெரிவது போல கல்யாண குணங்கள் கொண்ட திருமாலின் திவ்ய நாமங்களின் வழியே அந்த பரந்தாமனையே உணர்ந்து கொள்ளலாம் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை.

புரட்டாசி மகிமைகள்: புண்ணியம் தரும் பெருமாளின் திருநாமங்கள் - விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதன் பயன்கள்!

சின்னக் கண்ணாடியில் மலை தெரிவது போல கல்யாண குணங்கள் கொண்ட திருமாலின் திவ்ய நாமங்களின் வழியே அந்த பரந்தாமனையே உணர்ந்து கொள்ளலாம் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை.

Published:Updated:
புரட்டாசி மகிமைகள் - விஷ்ணு சஹஸ்ரநாமம்
மகாபாரதப் போர் நடந்த சமயத்தில் பிதாமகரான பீஷ்மர், தர்மனுக்கு சர்வவியாபியான மகாவிஷ்ணுவின் திருநாமங்களைத் தொகுத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று போதித்தார். சஹஸ்ரம் என்றால் ஆயிரம் என்று பொருள். நாமம் என்றால் திருப்பெயர் என்று பொருள். இது மகாபாரதத்தின் ஆனுசாசன பர்வத்தில் உள்ள 149-ம் அத்தியாயமாக உள்ளது.

"சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம்

பிரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சா’ந்தயே"

என்று தொடங்கும் இந்த ஸ்லோகங்களைக் கேட்டாலே மனம் அமைதி பெறும். எல்லா துன்பங்களும் விலகி ஓடும்.

பீஷ்மர் அம்புப்படுக்கை
பீஷ்மர் அம்புப்படுக்கை

பீஷ்மர், தனது மரணப்படுக்கையில் பாண்டவர்களுக்கு இந்த மண்ணுலகில் கடைப்பிடிக்க வேண்டிய தர்ம நியாயங்களை விரிவாக எடுத்துக் கூறினார். அறத்தோடு நிம்மதியாக வாழவும், கலியின் துன்பங்களைப் போக்கவும் எல்லோருக்கும் பயன்தரும் வகையில் தேவரகசியமான ஒரு ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். அதுதான் விஷ்ணு சஹஸ்ரநாம ஸ்தோத்திரம். விஷ்ணுவின் திருநாமங்களின் மகிமைகளை பாண்டவர்களுக்கு உபதேசித்த பீஷ்மர், 'அந்த பகவான் உங்களுக்கு சதாசர்வ காலமும் உற்ற துணையாக இருக்கும் கிருஷ்ணரே' என்றும் 'அவரைப் பற்றிக் கொண்டால் இன்பமே, இனி துன்பமே இல்லை' என்றும் விளக்கினார்.

அந்த 1008 நாமங்களில் 25 திருநாமங்களும் அவற்றின் பொருள்களும் இதோ...

* பூதகிருதம் - பிரபஞ்சத்தில் உள்ள உயிரினங்களைப் படைத்தவர்

* யோக விதாம் நேதா - யோகம் அறிந்த அனைவருக்கும் தலைவர்

* கேசவா - அழகான முடியை உடையவர்

* பாவனா - ஒவ்வொரு பொருளையும் கொடுப்பவர்

* ஆதித்யா - எல்லாவற்றிலும் ஒளி வீசுபவர்; ஒருவராக இருந்தாலும் வித்தியாசமாகத் தோன்றுபவர்

* பிரபூதா - செல்வமும் அறிவும் நிறைந்தவர்

* வேதாங்கா - வேதங்களை உடலின் பாகங்களாக கொண்டவர்

* அதிந்திரா - இந்திரனுக்கு மேல் இருப்பவர்

* மாதவ - அறிவின் அதிபதி

* அமேயாத்மா - அளவிட முடியாத அறிவு உடையவர்.

கிருஷ்ண தரிசனம்
கிருஷ்ண தரிசனம்

* சாந்திமான் - தன்னை அனுபவிப்பவர்களை எல்லாம் தன்னோடு சேர்த்துகொள்பவன்

* நியாயா - நீதியாக இருப்பவன்

* சமீரனா - காற்றின் வடிவில் உயிர்களை அசையச் செய்பவன்

* பிரசன்னத்மா - என்றென்றும் தெளிவாக இருக்கும் தலைவன்

* சித்தார்த்தா- விரும்பிய அனைத்தையும் உடையவர்

* மகேந்திரா- தெய்வங்களுக்குக் கடவுளாக இருப்பவர்

* பிரதிதா- புகழ்பெற்றவர்

* காரணா - உலக படைப்புக்குக் காரணமானவர்

* துருவா - நிரந்தரமாக இருப்பவர்

* ரத்ன கர்பா - முத்துக்களை தன்னுள் வைத்திருக்கும் சமுத்திரம்

* வேதாச - படைப்பவர் அல்லது தன் பக்தர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியும் செல்வத்தையும் அளிப்பவர்

* கோப்தா - உலகை கவனித்துக் கொள்பவர்

* நிவ்ருத்தாத்மா - எங்கும் எப்போதும் இருப்பவர்

* குமுதா - பூமியை மகிழ்விப்பவர்

* மகாகர்மா - பெரிய வல்ல சாதனைகளை புரிபவர்

விஷ்ணு
விஷ்ணு

சின்னக் கண்ணாடியில் மலை தெரிவது போல கல்யாண குணங்கள் கொண்ட திருமாலின் திவ்ய நாமங்களின் வழியே அந்த பரந்தாமனையே உணர்ந்து கொள்ளலாம் என்பதுதான் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் பெருமை. வைத்ய சாஸ்திரமான சரக சம்ஹிதை விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ஒருவர் 3 முறைகள் சொல்லி வேண்டினால் உடல் பிணிகள் தீரும் என்கிறது. தினமும் சகஸ்ர நாமப் பாராயணம் செய்யும் வீட்டில் சண்டை, சச்சரவு வரவே வராது என்கின்றன ஞான நூல்கள்.

'ஸசங்க சக்ரம் ஸகிரீட குண்டலம் ஸபீத வஸ்த்ரம்,

ஸரஸீருஹேக்ஷணம் ஸஹார வக்ஷஸ்தல சோபி கௌஸ்துபம்

நமாமி விஷ்ணும் சிரஸா சதுர்புஜம்!'

'ஹே பிரபோ, ஸ்ரீகிருஷ்ணா, சங்கு சக்கரம் ஏந்தி, கிரீடமும் குண்டலமும் அணிந்து, பட்டும் பீதாம்பரமும் தரித்த தாமரைக் கண்ணனாய், கௌஸ்துப மாலை ஜொலிக்க, நான்கு புஜங்களுடன் விளங்கும் மஹா விஷ்ணுவே, உம்மை தூய்மையான பக்தியுடன், தலை வணங்கி நமஸ்கரிக்கின்றேன்!'

இந்த ஸ்தோத்திரத்தை தினமும் சொல்லும் ஒருவர், வாழ்க்கையில் எல்லா சுகங்களும் அடைந்து வாழ்வில் வெற்றிகள் பல பெற்று உயர்வை அடைவார் என்பது நம்பிக்கை.