Published:Updated:

சுயம்வர பார்வதி ஹோமம்: உங்களுக்கான இனிய துணையைத் தேடிக்கொள்ள இனியும் தாமதிக்காதீர், சங்கல்பியுங்கள்!

திருமணம்

பலன் தரும் இந்த சுயம்வர பார்வதி ஹோமம் வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற நடைபெற உள்ளது.

சுயம்வர பார்வதி ஹோமம்: உங்களுக்கான இனிய துணையைத் தேடிக்கொள்ள இனியும் தாமதிக்காதீர், சங்கல்பியுங்கள்!

பலன் தரும் இந்த சுயம்வர பார்வதி ஹோமம் வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற நடைபெற உள்ளது.

Published:Updated:
திருமணம்
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பார்கள். அதேபோல ஒரு திருமணம் சொர்க்கத்தையும் நிச்சயிக்க வேண்டும். அதுவே திருமணத்தின் பயன் என்கின்றன புனித நூல்கள். தொடர்ச்சியான தலைமுறைகள் உருவாக்க புனிதமான திருமணமே உதவும். ஒரு மனிதன் வாழ்வதன் அர்த்தமே திருமண பந்தத்தால் மட்டுமே நிறைவடைகிறது. தகுந்த துணை இல்லாது வாழும் வாழ்க்கை நிறைவில்லாமல் போய்விடுகிறது.

கல்யாண வரம் தரும் அற்புத வழிபாடு சுயம்வர பார்வதி ஹோமம். சக்தி விகடன் மற்றும் ட்ரீம் அலைன்ஸ் மேட்ரிமோனியல் இணைந்து வழங்கும் இந்த அற்புத ஹோம வைபவம், 23.7.22 சனிக்கிழமை (ஆடிக் கிருத்திகை) அன்று காலை 10:30 முதல் 2 மணி வரை நடைபெற உள்ளது.

சுயம்வர பார்வதி ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதனாலேயே நம் முன்னோர்கள் திருமண பந்தத்தை வெகு சிரத்தையோடும் விழிப்போடும் உருவாக்கித் தந்தார்கள். ரிஷி, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்களை நீக்கிட தகுந்த பரிகாரங்களைச் செய்து தெய்வ அருளால் நல்ல வரனைத் தேர்ந்தெடுத்து திருமணங்களை நடத்தி வந்தார்கள். ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. எல்லோரும் அதிகம் படிக்கிறார்கள், நல்ல வேலையில் அமர்கிறார்கள், வீடு; கார்; தோட்டம் என்று நல்ல நிலை உருவான பிறகே திருமணம் செய்து கொள்கிறார்கள். இது நல்லதுதான். எனினும் திருமணத்துக்கான வயதைக் கடக்கும் வரை திருமணத்தைத் தள்ளிப் போடுவது என்பது நல்லது அல்ல. இன்றும் முப்பது வயது கடந்த பலரும் திருமணம் ஆகாமல் சிரமப்பட்டு வருவதைக் கண்கூடாகப் பார்த்து வருகிறோம். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் நல்ல வரன் கிடைக்காமல் வருந்துவதை பார்க்கிறோம்.

சுயம்வர பார்வதி ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்

திருமணம் ஆகாமல் ஒரு ஆணோ, பெண்ணோ இருந்துவிட்டால் அவர்கள் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தாரும் உறவு மற்றும் சுற்றத்தாரால் பல கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகிறார்கள். உங்களுக்கு திருமண வேளை கூடிவரும் நேரத்தில் திருமண வரன் தேடி வரும்போதே திருமணம் செய்து கொள்ளவேண்டும். தேடிவரும் வரனை தவற விடும்போது திருமணத் தடைகள் உருவாகும். மேலும் விரும்பிய வரன் கிடைக்காமல் கிடைத்த வரனை ஏற்றுக் கொள்ளவேண்டிய நிலையும் உருவாகும். எனவே இனியும் தாமதிக்காதீர்கள். திருமண வரம் அருளும் பிரதான வழிபாடான சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டு உங்கள் மனதுக்கு இனிய வரனைத் தேடிக் கொள்ளுங்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பலன் தரும் இந்த சுயம்வர பார்வதி ஹோமம் வரும் ஜூலை 23-ம் தேதி (2022) ஆடி மாதம் கிருத்திகை நாளில் சனிக்கிழமை அன்று காலை 10.30 முதல் 2 மணி வரை, நம் வாசகர்கள் திருமண வரம் பெற, திருமண வாழ்வில் நலம் பெற நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தை வெள்ளிமேடுப்பேட்டை ஸ்ரீநாகேஸ்வரர் கோயில் நிர்வாகமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்த உள்ளோம். எனவே இந்த ஹோமத்தில் கலந்துகொண்டு பலன் பெறுங்கள்!

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

எல்லா வசதிகளும் இருந்தும் ஏனோ காரணத்தால் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கும் அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. ஒருவருக்குத் திருமணம் தடைபடுகிறது என்றால், பெரும்பாலும் ஜோதிட அமைப்பும் பித்ரு தோஷமுமே காரணம் என்பார்கள். இந்த இரண்டு வகை தோஷங்களையும் நீக்கி அருள் செய்யும் வரமாக நடக்க இருக்கிறது இந்த சுயம்வர பார்வதி ஹோமம். சுயம்வர பார்வதி ஹோமத்தில் கலந்து கொண்டால் ஜாதக, பித்ரு, சர்ப்ப, ருது, நவகிரஹ, களஸ்திர, மாங்கல்ய தோஷங்கள் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் என்கிறார்கள்.

சுயம்வர பார்வதி ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்

இந்த சுயம்வர பார்வதி ஹோமத்தில் பதிவு செய்து கொண்டு மானசீகமாக வேண்டிக்கொண்டாலே திருமணம் வரம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த ஹோமத்துக்குப் பிறகு அளிக்கப்படும் பஸ்பம், குங்குமத்தை ஒரு மண்டல காலத்துக்கு தினமும் தினமும் இட்டு வந்தால், திருமணத் தடை நீங்கி சீக்கிரமே நல்ல துணை கிடைக்கும் என்கிறார்கள் ஆன்றோர்கள்.

`வெள்ளிமேடுபேட்டை' என்ற இந்த ஊர் ஆதியில் ‘புத்தனந்தல்’ என்று அழைக்கப்பட்டது. 2500 ஆண்டுகள் பழைமையான இந்த ஆலயம், முற்காலப் பாண்டியர்களின் காலத்தில் உருவானது என்பதற்குச் சான்றாக மண்டப விதானங்களில் ஆங்காங்கே மீன் லட்சினை காணப்படுகிறது. இரண்டு நிலை விமானத்தின் கீழ் ஸ்ரீநாகேஸ்வரரும், ஒரு நிலை விமானத்தின் கீழ் திரிபுரசுந்தரி அம்மனும் அமர்ந்து ஆட்சி புரிகிறார்கள். மேலும் ஸ்ரீவிநாயகர் சந்நிதி, ஸ்ரீவள்ளி ஸ்ரீதெய்வயானை சமேத ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமி சந்நிதி, நால்வர் சந்நிதி, மேற்கு நோக்கிய ஸ்ரீசனீஸ்வரர் சந்நிதி ஆகியவையும் எழிலுற அமைந்துள்ளன. சூரியன், சந்திரன், ராகு ஆகியோரும் தனித்தனியே அருள்பாலிக்கிறார்கள்.

சுயம்வர பார்வதி ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்

திண்டிவனம் வெள்ளிமேடுப்பேட்டையில் உள்ள திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயத்தில் ஈசனுக்கும் சக்திக்கும் பூலோக ப்ரதிக்ஷ விவாஹம் நடைபெற்றது என்கிறார்கள் ஆன்றோர்கள். அப்போது ஈசனானவர் சப்த ரிஷிகளுக்கும் 'இங்கு வந்து பூஜித்தால், திருமணம் தொடர்பான சகல தோஷங்களும் விலகி, நல்ல வரன் அமைந்து, அவர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும்' என்று வரம் அருளினார் என்கிறது தலபுராணம்.

வரலாற்றுப் புகழும் புராணப் பெருமைகளும் கொண்ட இந்தத் தலத்தில் இந்த ஹோமம் ஆடி கிருத்திகை நாளில் நடைபெறுவது விசேஷத்திலும் விசேஷமானது என்கிறார்கள் பெரியோர்கள். எனவே இனியும் தாமதிக்காமல் இந்த ஹோம வைபவத்தில் கலந்து கொண்டு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீநாகேஸ்வரர் அருளால் இனிய இல்லற வாழ்வை அடையுங்கள்!
சுயம்வர பார்வதி ஹோமம்
சுயம்வர பார்வதி ஹோமம்

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (₹500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம் + குங்குமம்) அனுப்பி வைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாதவர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.