Published:Updated:

ஒரே இடத்தில் ஆயிரம் சிவலிங்கங்களை தரிசித்த புண்ணியம் பெற வேண்டுமா? சோழர் உலா வழிகாட்டுகிறது!

சோழர் உலா

சகஸ்ர லிங்கத்தின் அற்புத வடிவைக் காணவும் திருவாசியின் பெருமைகளை அறியவும் 'சோழர் உலா!' எனும் சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

ஒரே இடத்தில் ஆயிரம் சிவலிங்கங்களை தரிசித்த புண்ணியம் பெற வேண்டுமா? சோழர் உலா வழிகாட்டுகிறது!

சகஸ்ர லிங்கத்தின் அற்புத வடிவைக் காணவும் திருவாசியின் பெருமைகளை அறியவும் 'சோழர் உலா!' எனும் சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

Published:Updated:
சோழர் உலா
திருப்பாச்சிலாச்சிராமம் என்றும் திருவாசி என்றும் சைவ உலகில் பெரிதும் போற்றப்படும் திருத்தலம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ளது. இந்த ஆலயத்தின் பெருமைகளை அத்தனை எளிதாகக் கூறிவிட முடியாது. சிற்ப அழகுக்கும், சரித்திரப் புகழுக்கும், சமயப் பெருமைக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் இந்த ஆலயம் பெரும் சான்றாக இன்றும் விளங்கி வருகிறது.

ஒருமுறை அம்பிகையின் கேள்விக்கு பதில் கூறிய ஈசன், 'வேதங்களும் வேத விற்பன்னர்களும் தவமியற்றும் இந்த திருப்பாச்சிலாச்சிராமமே என் விருப்பத்துக்குரிய தலம்' என்று கூறினார் என தலவரலாறு கூறுகிறது.

'துணி வளர் திங்கள் துலங்கி விளங்க’ என்ற திருஞான சம்பந்தர் பதிகம் பாடப்பெற்ற இடம் இதுவே. வலிப்பு நோயையும் குழந்தைகளுக்கு வரும் நோய்களையும் தீர்த்துவைக்கும் திருத்தலமாக இது விளங்குகிறது. தேவாரத் தலங்களுள் 62-வது தலம் இது.

சோழர் உலா
சோழர் உலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சோழர் உலா
சோழர் உலா

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 97909 90404, 73974 30999

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

அருள்மிகு பாலாம்பிகை சமேத மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் சுமார் 1600 ஆண்டுகள் பழைமையானது. பின்னர் இது ஹொய்சாள சோழ நாயக்கர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. சுவாமி கிழக்கு நோக்கியிருக்க, அம்பாள் அவருடைய வலக்கை பாகத்தில், அக்னி மூலையில் மேற்கு நோக்கி ஒருவரையொருவர் நோக்கியதைப் போல அமைந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்பம்சம்.

கர்ப்பக்கிரகத்தில் ருத்திராட்சப் பந்தலின் கீழே சுயம்புநாதராகக் காட்சி தருகிறார் மூலவர். நாகத்தைக் காலடியில் போட்டு அதன்மேல் நின்று ஆனந்தக் கூத்தாடும் நடராஜர் உற்சவர் சிலை இங்கே மட்டும்தான் இருக்கிறது.

கொல்லிமழவன் எனும் அரசனின் மகளுக்குப் பிடித்திருந்த வலிப்பு நோயை இங்குதான் சம்பந்த பெருமான் நீக்கினார். இங்குள்ள ஆவுடையாப்பிள்ளை மண்டபத்தில் கொல்லி மழவன் மகளுக்குச் சம்பந்தர் நோய் நீக்கிய வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

திருவாசி
திருவாசி

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு தாம் கொடுத்த தங்கத்தை உரைத்துக் காட்டியதால் இங்குள்ள ஈசனுக்கு ‘மாற்று உரை வரதர்’ அல்லது ‘மாற்று உரைத்த ஈஸ்வரர்’ என்ற பெயர் உண்டானதாம்.

திருவானைக்கா போன்றே அச்சு அசலாக இந்த ஆலய அமைப்பும் அமைந்து உள்ளது. அங்கு போலவே அம்பிகைக்கு எதிரே கணபதி காணப்படுகிறார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வன்னி மரம் இங்கு தல விருட்சமாக விளங்குகிறது. இக்கோயிலில் அர்த்தஜாம பூஜையின்போது, அம்பாளுக்கே முதலில் வழிபாடு செய்யப்படுகிறது. பிறகுதான் சுவாமிக்கு நடக்கிறது. வன்னி மர வனத்தில் உள்ளவராதலின் சுவாமி சமீவனேஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.

அம்பிகை சந்நிதிக்கு எதிரே உள்ள 'அன்னமாம் பொய்கை' என்ற தீர்த்தம் திருமணமாகாத ஆண் பெண் இருபாலரும் வரம் அளிக்கக் கூடியது. வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் காலை 7 மணிக்குள் அன்னமாம் பொய்கையில் நீராடி, புத்தாடை உடுத்தி, அம்பாளுக்கு 11 நெய் தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். இது போல 5 வாரங்கள் செய்துவர, திருமணம் வெகு சீக்கிரம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

திருவாசி
திருவாசி

அம்பிகை கருவறைக்கு முன்புள்ள துவாரபாலகிகளின் முன் தொட்டில் கட்டி வழிபட்டால் பிள்ளை வரம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.

ஆன்மிகத்தில் மட்டுமல்ல, வரலாற்றுச் சுவடுகளிலும் இந்த ஆலயம் பெரும் அடையாளங்களைக் கொண்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இக்கோயிலுக்கு முதலாம் ராஜராஜன், சுந்தர பாண்டியன், முதற் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் ஆகியோர் இந்த கோயிலுக்குத் திருப்பணிகள் செய்துள்ளனர்.

முதற் பராந்தக சோழரின் கல்வெட்டுகளில் 'பாச்சிலைச் சேர்ந்த திருவாச்சிராமமாக அழைக்கப்பட்ட இந்த ஊர், முதலாம் ராஜராஜ சோழரின் 5-ம் ஆட்சியாண்டு வரை அப்பெயரிலேயே அழைக்கப்பட்டது. பிறகு அம்மன்னரின் 11-ம் ஆட்சியாண்டில் 'பாச்சிலை ராஜாச்ரய வளநாட்டின் கீழிருந்த கூற்றமாக' கூறுகிறது. 13-ம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, 'மழநாடாகிய ராஜாச்ரய வளநாட்டுப் பாச்சில் கூற்றத்து மீபிலாற்றுப் பாச்சில்' என்று தெரிவிக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாற்றுரை வரதீசுவரர் கோயிலில் நந்தா விளக்குகளும், சந்தி விளக்குகளும் ஏற்றப்பட்டன. இக்கோயிலில் தீபமாலை ஏற்றப்பட்டுள்ளது. அந்த தீபமாலையில் நாளும் உரி எண்ணெயால் 20 விளக்குகள் ஏற்றக் 'கூத்தாடி' என்பவர் 2 அரை கழஞ்சுப் பொன்னளித்தார். அதைப் பெற்றுக்கொண்ட இந்த கோயில் சிவ பிராமணர்கள் கௌசிகன் பட்டாலகன், காசியபன் நாகன் மாகாணி, கௌசியன் அப்பிக் குன்றுடையான், சிவலோகன் பொற்கிழவன் ஆகியோர் பொன்னின் வட்டியாக வந்த கால் பொன் கொண்டு இந்த அறக்கட்டளையை நிறைவேற்றினர் என்றும் கல்வெட்டு கூறுகின்றது.

மாற்றுரை வரதீசுவரர் கோயில்
மாற்றுரை வரதீசுவரர் கோயில்

கி.பி. 1253-ல் சமயபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹொய்சள மன்னனான, வீரசோமேஸ்வரன் காலத்தில் இக்கோயிலுக்கு பதினாயிரம் கலம் நெல் கிடைத்து வந்ததாக கல்வெட்டு கூறுகின்றது.

ஈசன் சந்நிதியில் சுந்தர மூர்த்தி நாயனாருக்குப் பொற்கிழி தந்த ஸ்தபன மண்டபம் உள்ளது. இவ்விடத்தைக் கல்வெட்டு ஒன்று "கிழி கொடுத்தருளிய திருவாசல்" என்ற பெயரால் குறிக்கிறது. மேலும் முதலாம் ராஜராஜன், ராஜராஜ விடங்கன் எனும் சிவலிங்க மூர்த்தம் ஒன்றை நிறுவியதாக கல்வெட்டு தெரிவிக்கிறது.

முதலாம் ராஜராஜனின் அரண்மனை பெரிய வேளத்துப் பணிப்பெண்ணாக இருந்த நக்கன் கற்பகவல்லி என்பவள் தம்மைத் திருவாசிக் கோயில் ஈசனின் மகளாக எண்ணி வாழ்ந்தவர். இவர் தம் ஊதிய சேகரிப்பிலிருந்து 201 கழஞ்சுப் பொன்களை இக்கோயிலுக்கு வழங்கி, அதோடு ஆண்டுக்கு16 கலம் நெல் விளையக்கூடிய இரு நிலத்தையும் சேர்த்தளித்தார் என்றும் இங்குள்ள கல்வெட்டுக் கூறுகின்றது.

அதுபோலவே ராஜராஜர் காலத்தில் இந்த கோயில் சிறப்பாக விளங்கி தலைக்கோலிகளும், தேவரடியார்களும், கந்தர்வர்களும், இசைக்கருவி கலைஞர்களும், சோதிடர், தச்சர், வேட்கோவர் உள்ளிட்டதொழில் வல்லுநர்களும், சிவாச்சாரியார்கள், பரிசாரகர்கள் முதலிய பலரும் இருந்ததை அறியமுடிகிறது. அப்பம் எப்படிச் செய்யப்பட்டது என்பதை விளக்குவதோடு விழாக்காலப் பணியாளர்களின் பட்டியலும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஊதிய விகிதங்களும் இங்குள்ள கல்வெட்டுகள் விளக்குகின்றன.

திருவாசி
திருவாசி

இந்த அற்புத தளத்தில்தான் பூவுலகின் முதல் சகஸ்ர லிங்கம் முதன்முதலாகத் தோன்றியது எனக் கூறப்படுகிறது. 1000 லிங்கங்கள் ஒன்று சேர்ந்த ஒரே லிங்க வடிவமே சகஸ்ர லிங்கம் எனப்படும். இங்கு 1000 ரிஷிகள் ஒன்று கூடி ஈசனை வழிபட்டு இறுதியில் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி ஈசனுள் கலந்து உருவான சகஸ்ர லிங்கமே இங்கு அபூர்வ சகஸ்ர லிங்கமானது. இந்த அற்புத வடிவைக் காணவும் திருவாசியின் பெருமைகளை அறியவும் 'சோழர் உலா!' எனும் சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு: 97909 90404, 73974 30999

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism