Published:Updated:

திருப்பதி பெருமாளுக்குத் தாடையில் பச்சைக்கற்பூரம் வைப்பது ஏன்? #Video

திருப்பதி பெருமாள்

திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு திருமலைக்கு வந்த அனந்தாழ்வார் தன் கர்ப்பிணி மனைவியின் துணையுடன், திருப்பதி மலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான `கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது

திருப்பதி பெருமாளுக்குத் தாடையில் பச்சைக்கற்பூரம் வைப்பது ஏன்? #Video

திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு திருமலைக்கு வந்த அனந்தாழ்வார் தன் கர்ப்பிணி மனைவியின் துணையுடன், திருப்பதி மலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான `கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது

Published:Updated:
திருப்பதி பெருமாள்
திருமலையில், பல நந்தவனங்களையும் அவற்றில் மலர்கள் பூத்துக்கிடப்பதையும் பார்த்திருப்பீர்கள். ஆனால் இதே திருமலையில் முதன்முதலில் நந்தவனம் அமைத்துப் புஷ்பகைங்கர்யம் செய்தவர் யார் தெரியுமா?

உடையவர் ஸ்ரீராமாநுஜர் இட்ட கட்டளையைச் சிரமேற்கொண்டு அப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவரின் சீடரான அனந்தாழ்வார். திருவரங்கத்தில் அரங்கனின் அழகை ஆராதித்து, பூஜை, வழிபாடுகள், வீதி உலா உற்சவங்கள் எனக் கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருந்த ராமாநுஜருக்கு, திருமலையிலும் அப்படி பூஜை வழிபாடுகள் நடக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன் பொருட்டே அவரின் தாய்மாமன் திருமலை நம்பியை ஏற்கெனவே திருமலைக்கு அனுப்பி வைத்திருந்தார்.

வேங்கடாசலபதி
வேங்கடாசலபதி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெருமாளுக்கு நித்யப்படி மாலை தொடுத்து அணிவிக்கும் பணியை எவரிடம் ஒப்படைப்பது என்று யோசித்தார். அவருடைய விருப்பத்தைச் செயல்படுத்துவதாகக் கூறினார் அனந்தாழ்வார். திருமலைக்கு வந்து நந்தவனம் அமைத்து பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்தார்.

தினந்தோறும் மலர்களைக் கொய்து, தானே அதை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவித்து, மகிழ்ந்து வந்தார். ஒருநாள், திருமலையில் தான் அமைத்த நந்தவனத்தில் பெருமாளுக்காக மலர்களைப் பறித்துக்கொண்டிருந்தார் அனந்தாழ்வான். அப்போது அந்த வனத்திலிருந்த பாம்பு ஒன்று அவரைத் தீண்டிவிட்டு அங்கிருந்து ஓடியது. ஆனாலும், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாமலும் சற்றும் பதற்றம் அடையாமல் பூக்களைச் சேகரித்துக்கொண்டிருந்தார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவருடன் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த அவரின் நண்பர்கள் பதறிப்போய், ''பாம்பின் விஷக்கடிக்கு பச்சிலை மருந்து வைத்துக் கட்டினால்தானே விஷமிறங்கும். அதைவிடுத்து நீங்கள் இப்படி செய்யலாமா?'' எனக் கேட்டனர்.

அதற்கு, அனந்தாழ்வார் சிறிதும் பதற்றமின்றி, ''கடித்த பாம்பு வலிமையற்றதாக இருந்தால், திருக்கோனேரியில் தீர்த்தமாடி, திருவேங்கடமுடையானை தரிசிப்பேன். வலிமையுள்ளதாக இருந்தால், விரஜா நதியில் நீராடி, வைகுண்ட வாசனை சேவிப்பேன்'' என பதில் சொன்னாராம் அனந்தாழ்வார்.

திருப்பதி
திருப்பதி
JAISEKHARQ

அந்த அளவுக்கு பக்தி கொண்டிருந்த அனந்தாழ்வார் திருமலையில் தன் திருப்பணியைத் தொடங்கிய காலத்திலேயே அவரின் பக்தியை மெச்சி இறைவன் அவரோடு திருவிளையாடல் புரிந்தார்.

திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு திருமலைக்கு வந்த அனந்தாழ்வார் தன் கர்ப்பிணி மனைவியின் துணையுடன், திருப்பதி மலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான `கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். அப்போது நிகழ்ந்த திருவிளையாடலையும் இன்றும் திருமலையில் நடைபெறும் மகிழடி சேவை குறித்தும் பெருமாளுக்குத் தாடையில் பச்சைக்கற்பூரம் சாத்தும் வழக்கம் எப்படி வந்து என்பதையும் அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism