Published:Updated:

'ராம நாமம் சொல்லுவோம்'

ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமன்

ராம நாமம்

'ராம நாமம் சொல்லுவோம்'

ராம நாமம்

Published:Updated:
ஶ்ரீராமன்
பிரீமியம் ஸ்டோரி
ஶ்ரீராமன்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்!

ராம நாமம்
ராம நாமம்


பீர்தாசரின் மகன் கமல்தாஸ். தந்தையைப் போலவே ராமபிரான் மீது அதீத பக்தி கொண்டவன். ஒருநாள் ராமபஜனைக்குச் சென்றவன் மிக அற்புதமாக பஜன் செய்தான்.

அதைக் கேட்டு மகிழ்ந்த வணிகர் ஒருவர், அவனுடைய மேல்துண்டின் நுனியில் தங்க மோதிரத்தை முடிந்துவிட்டார். இது கமல்தாஸுக்குத் தெரியாது. பஜன் முடிந்து வீட்டுக்கு வந்ததும், துண்டு முடிப்பில் இருந்த மோதிரத்தைக் கண்ட கபீர்தாசர் மிகவும் கோபம் கொண்டார்.

``எதற்கு இதைப் பெற்றுக்கொண்டாய்?’’ என்று மகனைக் கடிந்துகொண்டார்.

கமல்தாஸ் அப்போதுதான் மோதிரத்தைக் கவனித்தான். ``இதுபற்றி எதுவும் எனக்குத் தெரியாது. நாம் ராமநாம பஜனில் லயித்திருந்தேன். ராமநாமத்தைச் சொன்னதற்குப் பரிசாக எவரோ இதை எனக்குத் தர விரும்பி துண்டு முடிப்பில் முடிந்துவைத்திருக்கலாம் அல்லவா?’’ என்றான்.

கபீர்தாசர் உண்மையை உணர்ந்தார். ``விலை மதிப்பற்ற ராம நாமத்தை ஒரு தங்க மோதிரத்துக்காக விற்றுவிட்டாயோ என்று கருதிதான் வருந்தினேன். இப்போது உண்மையை உணர்ந்தேன்’’ என்றார்.

உண்மைதான்! ராமநாமம் மிகவும் புனிதமானது; வல்லமை மிக்கது. ஆஞ்சநேயர் ராமநாம மகிமையால்தான் பல காரியங்களை சாதித்தார். தியாகபிரம்மம் 96 கோடி முறை ராமநாமத்தை ஜபித்து திருவருள் பெற்றார் என்கின்றன ஞானநூல்கள். நாமும் அனுதினமும் ராமநாமம் சொல்வோம்; நல்லருள் பெறுவோம்.

- கே.மதுமிதா, பொன்மலை

நிவேதனம்!

க்திக்கு ஆடம்பரம் தேவையில்லை. பூஜையின்போது தடபுடலாக பதார்த்தங்கள் செய்துதான் சமர்ப்பிக்க வேண்டும் என்றில்லை. வீட்டில் உள்ள எளிய பதார்த்தங்களையே நைவேத்தியமாகச் சமர்ப்பிக்கலாம். கல்கண்டும் உலர்திராட்சையும் எளிய நிவேதனங்கள். பசும்பால், வாழைப்பழம், தேன் மூன்றும் கலந்தது சிறந்த நிவேதனமாகும். இதை திரிமதுரம் எனப் போற்றுவர்.

எதுவும் இல்லையென்றாலும் மனமார ஸ்லோகம் சொல்லி வழிபடுங்கள்; இறையருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

-அருள்வேலன், தென்காசி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism