Published:Updated:

கனக மழைப் பொழியும் கமலவாஸினியைப் போற்றும் ஸ்ரீசூக்த ஹோமம்... நீங்களும் சங்கல்பிக்கலாம்!

ஸ்ரீசூக்த ஹோமம்
ஸ்ரீசூக்த ஹோமம்

செல்வவளம், சொல்வாக்கு, செல்வாக்கு அருளும் இந்த ஸ்ரீசூக்த ஹோமம் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு விருத்தி ஹோமம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எக்காலத்திலும் நிறைந்திருக்கும் மகாசக்தியே கமலாத்மிகா என்று வேதங்களும் உபநிஷத்துக்களும் போற்றும் தேவி மகாலட்சுமி. ஒவ்வொரு மன்வந்தரத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிப்பவள் திருமகள். திருப்பாற் கடலில் அமிர்தம் கடைந்தபோது அதிலிருந்து மகாலட்சுமியாக வெளிப்பட்டாள். ஸ்ரீம் பீஜத்தில் உறைபவள்; செல்வாக்கு, அழகு, செல்வம், சந்தோஷம், புகழ், அதிகாரம், தனம், தான்யம், மழலைப்பேறு என 16 விதமான செல்வங்களையும் வழங்கும் தாய் இவள். இதன்பொருட்டு 16 விதமான லட்சுமியராக உருவெடுத்து ஒவ்வொரு செல்வங்களையும் நமக்கு தடையின்றி வழங்குபவளும் இவளே.

திருமார்பில் உறையும் திருமகளின் அருளின்றி திருமாலுக்குப் பெருமைகள் இல்லை என்பதால் ‘ஹரி வக்ஷஸ்தல வாஸினி’ என்று மகாலட்சுமி அழைக்கப் படுகிறாள். 'வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற மங்கை’ என பெரியாழ்வார் தாயாரை நெகிழ்ந்து பாடுவார். ஸ்ரீஸூக்தத்தின் பதினைந்து ரிக்குகளிலும் தேவி மகாலட்சுமி துதிக்கப்படுகிறார்.

சாம்ராஜ்ய லட்சுமி
சாம்ராஜ்ய லட்சுமி

நறுமணம் மிகுந்த இடத்தில் இவள் விரும்பி உறைவாள். அதனால் பரிமள வாஸினி என்றும் பரிமளப் பிரியை என்றும் போற்றுவர். லட்சுமி கடாட்சம் உள்ளவர்கள் எங்கும் எதிலும் வெற்றி பெறுவார்கள் என்பது உலக வாக்கு. அதிலும் 16 லட்சுமியரில் சாம்ராஜ்ய லட்சுமிக்கு ஒரு தனிப்பெருமை உள்ளது. அதிகாரம், பதவி, செல்வாக்கு, சொல்வாக்கு, செல்வபோகம் இதையெல்லாம் விரும்பாதவர்கள் இருப்பார்களா? இந்த அதிகார போகத்துக்கு உரியவள் சாம்ராஜ்ய லட்சுமியே.

எங்கும் எப்போதும் முந்தி இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இவளை போற்றி வழிபட வேண்டும் என்று ஆன்மிக நூல்கள் கூறும். அதிகார பாக்கியத்தை வழங்கும் இந்த சாம்ராஜ்ய லட்சுமியை வெள்ளிக்கிழமை நாள்களில் வழிபடுவது சிறப்பானது. அதிலும் பௌர்ணமி நாள் இன்னும் விசேஷமானது. வில்வம், தாமரை, மல்லிகை, விசேஷ சமித்துகள், சுகந்த பரிமள திரவியங்கள் கொண்டு ஸ்ரீசூக்த ஹோமம் செய்து வழிபட்டால் செல்வவளம், கடன் நிவர்த்தி, வியாபார அபிவிருத்தி, பதவி உயர்வு என சகலமும் அருள்வாள் என்கிறது ஆன்மிகம்.

செல்வவளம், சொல்வாக்கு, செல்வாக்கு அருளும் இந்த ஸ்ரீசூக்த ஹோமம் விருப்பங்களை நிறைவேற்றும் ஒரு விருத்தி ஹோமம் என்று பெரியோர்கள் சொல்வார்கள். இந்த சிறப்பு வாய்ந்த ஹோமம் வரும் புரட்டாசி மாத பௌர்ணமி (20-9-2021) திங்கள்கிழமை நாளில், உமாமகேஸ்வரீ விரத தினத்தில் ஸ்ரீசூக்த ஹோமம் நடைபெற உள்ளது. தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்துள்ள ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடத்தில் இந்த வைபவம் நடைபெற உள்ளது.

ஸ்ரீசூக்த ஹோமம்
ஸ்ரீசூக்த ஹோமம்

சிறப்பாக இந்த பீடத்தில் எழுந்தருளி இருக்கும் பிரகலாத வரத ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹர் அழகே வடிவானவர், ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பவர். அதைப்போலவே திருமாலின் திருமார்பில் அமர்ந்து கொண்டிருந்தால் திருமாலின் திவ்ய முகத்தை தரிசிக்க முடியவில்லை என்பதால் திருமகள் நரஸிம்ஹ மூர்த்தியின் மடியில் அமர்ந்து இங்கு சேவை சாதிக்கிறாள். இந்த சாம்ராஜ்ய லட்சுமி நவநிதிகளையும் கம்பீர வாழ்வையும் அருளக் கூடியவள்.

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: நந்தனாருடன் திருக்குளம் வெட்டிய கணபதி... திருமுறைகள் கூறும் அதிசயம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறப்புமிக்க இந்த ஹோமத்தை ஸ்ரீசாம்ராஜ்ய லட்சுமி நரஸிம்ஹ பீடமும் உங்கள் சக்தி விகடனும் இணைந்து நடத்தித் தர உள்ளார்கள். வியாபாரம் செழிக்க வேண்டும்; தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும்; கடன் தீர வேண்டும்; சொத்து சேர வேண்டும்; வெளிநாட்டு வாய்ப்பு கிட்ட வேண்டும்; பதவி உயர்வு-சம்பள உயர்வு வேண்டுபவர்கள்; குடும்பத்தில் தானே தலைமை ஏற்க வேண்டும் என்று விரும்பும் அன்பர்கள் யாவரும் இந்த ஹோமத்தில் சங்கல்பிக்கலாம். குறிப்பாக மழலை வரம் வேண்டும் பெண்களுக்கு இந்த ஹோமம் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இந்த ஸ்ரீசூக்த ஹோமத்தில் சங்கல்பித்துப் பிரார்த்தித்தால் நிச்சயம் உயர்வும் பெருமையும் அடைவர் என்பது நிச்சயம்.

ஆதிசங்கரருக்கு கனக மழைப் பொழிவித்தவள்; ஸ்ரீதேசிகருக்கு பொன் கொடுத்தவள்; ஸ்ரீவித்யாரண்யருக்கு சாம்ராஜ்யம் உருவாக்கும் அளவுக்கு செல்வம் கொடுத்தவள் உங்களுக்கும் சகல செல்வங்களையும் அருளி அருள் பொழியட்டும் என வேண்டிக் கொள்கிறோம்.

வாசகர்கள் கவனத்துக்கு:

ஸ்ரீசூக்த ஹோமம்
ஸ்ரீசூக்த ஹோமம்
இந்த ஹோமத்தில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு ஹோமப் பிரசாதம் (ஹோம பஸ்மம்) மற்றும் ரட்சை அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்).

தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி ஹோம வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, ஹோம வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, ஹோம-வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு