Published:Updated:

`ஞானச் சோறு!'

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

தத்துவ ரகசியம் சொல்லும் ஞானநூல் -பி.சந்திரமெளலி

`ஞானச் சோறு!'

தத்துவ ரகசியம் சொல்லும் ஞானநூல் -பி.சந்திரமெளலி

Published:Updated:
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்

அருளாளர்களும் மகான்களும் அருளிய நூல்கள், அவர்கள் நமக்காக விட்டுச்சென்ற பொக்கிஷங்களாகும். அவற்றுள் ஒன்றுதான் `திருப்போரூர் சந்நிதி முறை’ எனும் நூல். இதை அருளியவர் சிதம்பர ஸ்வாமிகள். இதில் ஒரு பாடல், சோறு சமைப்பது குறித்து அழகாக விளக்குகிறது.

`ஞானச் சோறு!'

முந்தைய தலைமுறைகளில் வீடுகளில் விறகு அடுப்புதான் உண்டு. மூன்று கற்களை வைத்து, அல்லது ‘ஃ’ போன்ற மூன்று குமிழ் முனைகளை வைத்து அமைக்கப்பட்ட அடுப்பில்தான் சமைப்பார்கள். அப்படியான சமையலில் பங்குபெறும் அடுப்பு, விறகு, தீ, பாத்திரம், உலை, சாதம் ஆகியவற்றை வைத்து சிதம்பரம் ஸ்வாமிகள் அற்புதமான ஒரு தத்துவத்தை விளக்குகிறார்.

மூன்று கற்களாலான அடுப்பு - அன்பு, பொறுமை, ஆசையின்மை எனும் மூன்று குணங்கள். விறகு - ஆணவம் முதலான தீய குணங்கள். தீ - ஞானக்கனல். பாத்திரம் - உயிர். உலை - அருள். சாதம் - சிவானந்தம்.

அதாவது... அன்பு, பொறுமை, ஆசையின்மை எனும் நற்குணங் களைக் கொண்டு, ஆணவம் முதலான தீயகுணங்களை நீக்கி, தெளிந்த அறிவைக் கொள்ளவேண்டும். அன்பின் முதிர்ந்த நிலை யான அருள்மயமான வாழ்க்கை வாழ வேண்டும். அப்புறம் என்ன..? மங்களகரமான, இடையீடே இல்லாத ஆனந்தம் பொங்காதா?

இதோ... சிதம்பர ஸ்வாமிகள் சொல்லும் ஞானச் சோறு பாடல்:

அடியார் நிமலத் திருவகத்துள்
அன்பு பொறுமை அவாவறுத்தல்
அடுப்பு ஆங்கு அமைத்து மலக் காட்டத்து
அதிக ஞானக் கனல் மூட்டி
மடியாது இருந்த உயிர்க்கலசம்
வழிய அருள் பேருலை வார்த்து
மாறாப் பெருமைச் சிவானந்த
மதுரச் சோறு தினம் பொங்கி
விடியாச் சீவ போத இருள்
வீய மவுனச் சுடர் விளக்கு
விளக்கி இருந்த படி இருந்து
மேலாம் சிற்றில் விளையாடும்
செடி தீரகத்தோர் புகழ்வாலை
சிறுவா! சிற்றில் சிதையேலே!
தேரூர் வீதிப் போரூரா!
சிறியேஞ் சிற்றில் சிதையேலே!


‘திருப்போரூர் சந்நிதி முறை’யில் சிதம்பர ஸ்வாமிகள் அருளியபடி ‘ஞானச்சோறு’ பொங்கி உண்ண முயல்வோம். திருப்போரூர் முருகன் திருவருள் புரிவார்.