Published:Updated:

மகா ஸ்வாமிகள் சொன்ன கதை!

காஞ்சி மகாபெரியவர்
பிரீமியம் ஸ்டோரி
News
காஞ்சி மகாபெரியவர்

கே.முருகன், சென்னை-44

`ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற் காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது.

மகா ஸ்வாமிகள் 
சொன்ன கதை!

ர யானையைப் பரீட்சிப்பதற்காக அதன் அப்பாவான தச்சன் நெருங்கியபோது குழந்தை, ‘`அப்பா! யானைகிட்ட போகாதே... அது முட்டும்’’ என்று கத்தியது. தச்சன் குழந்தையிடம், ‘`இது மரப் பொம்மைதான்; முட்டாது!’’ என்று சொல்லிச் சமாதானம் செய்து, அதையும் யானைக்குப் பக்கத்தில் அழைத்துப் போனான்.

குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அது மரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடம் இருந்து மறைத்தது.

அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாத தற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து, அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.

மகா ஸ்வாமிகள் 
சொன்ன கதை!
Arnav Pratap Singh

`மரத்தை மறைத்தது மாமத யானை மரத்தில் மறைந்தது மாமத யானை’ என்று, இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த அடிகளைப் பார்த்தால் அது புரியும்.

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்;
பரத்தில் மறைந்தது பார்முதல் `பூதம்.


யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர்.

அதுசரி, இந்தக் கதை எல்லாம் என்னத்துக்கு என்று கேட்கலாம். நமக்கு வேண்டியது லோகத் தில் வசதியான வாழ்க்கை. அதற்குத் தேவை பணம், காசுதான். பரத்தைப் பற்றியும் பாரைப் பற்றியும் நமக்கென்ன கவலை என்று கேட்கலாம்.

சரி, எல்லாரும் பணக்காரராகிவிடுவதாகவே வைத்துக்கொள்வோம். நிம்மதியாக, சாந்தமாக இருக்க அது உதவுமா?

எல்லோரும் பணக்காரர்கள் ஆகிவிட்டாலும் கூட, ஒவ்வொருவனுக்கும் மற்றவனைவிட அதிகம் இருக்க வேண்டும் என்கிற ஆசையும், அதனால் போட்டியும், சச்சரவும் இருந்து கொண்டேதான் இருக்கும். இம்மாதிரி போட்டி இருக்கிற வரையில் மனநிறைவு யாருக்கும் உண்டாகாது.

போட்டி போக வேண்டுமானால், போட்டி போட இன்னொரு வஸ்துவே இல்லை என்ற ஞானம் வரவேண்டும். ‘இந்த உலகம் என்பது நாம் நினைக்கிறபடி இல்லை; இதுவே சிவமயமானது; அது வேறு- இது வேறு அல்ல’ என்ற எண்ணம் வரவேண்டும். அப்போது அமைதி நிறைந்த வாழ்வைப் பெறலாம்.