ஓர் ஆலயத்தில், பக்தி பிரசங்கம் நடந்தது. ஏராளமா னோர் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்தின் நடுவே கிராமத்துப் பாட்டி ஒருவரும் உட்கார்ந்திருந்தார்.
பிரசங்கம் முடிந்து வீட்டுக்குத் திரும்பும்போது, அந்தப் பாட்டி, இன்னொரு பெண்ணிடம் சொன்னார்: ``அந்தப் பெரியவர் நரகத்தைப் பற்றி எவ்வளவு பிரமாதமா பேசினார் பார்த்தியா... என்னமோ அங்கேயே பிறந்து, வளர்ந்தது மாதிரி!''
நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பற்றி தெரிந்த வரையில்தான் பேச முடியும். தெரியாத விஷயங்களைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதனால்தான், கடவுளைப் பற்றி அதிகமாகப் பேசிக் கொண்டிருக் கிறோம்.
அவர், பெரிய ஞானி. ஒரு நாள் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அவரின் ஒரு கையில்- தீப்பந்தம். மறு கையில்- ஒரு வாளி தண்ணீர். எதிரே வந்தவர்களுக்கு இது வேடிக்கையாக இருந்தது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
``என்ன இது?'' என்று கேட்டனர்.
``தண்ணீரும் நெருப்பும்!''
``தெரிகிறது... அதுதான் எதற்கு என்று கேட்கிறோம்!''
ஞானி கூறினார் ``நரகத் தீயை, தண்ணீரால் அணைக்கப் போகிறேன். அப்படியே, சொர்க்கத் தையும் கொளுத்தப் போகிறேன்!''
கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஞானி தொடர்ந்தார்... ``அப்போதுதான் நரக பயமோ, சொர்க்க ஆசையோ இல்லாமல், மக்கள் சத்தியத்தை நாடி கண்டுகொள்ள முடியும்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சொர்க்கத்துக்குப் போக வேண்டும் என்று ஆசைப்படும் மனிதர்கள், நரகத்துக்குப் போய்விடக் கூடாது என்றும் விரும்புகிறார்கள். இந்த ஞாபகத்தி லேயே வாழும் இன்றைய பக்தர்கள் சத்தியத்தை அடையாளம் கண்டுகொள்ளாமலேயே காலத்தைக் கழித்துவிடுகின்றனர்.
`கத்தினால்தான் கடவுள் கண்ணைத் திறந்து பார்ப்பார்.தட்டினால்தான் கதவு திறக்கும்!'- இது இன்றைய பக்தனது நம்பிக்கை.''
அந்த ஞானியிடம் ஒருவர் சொன்னார் ``ஒருவன் விடாமல் கதவைத் தட்டிக் கொண்டே இருந்தால், அந்தக் கதவு ஒரு நாள் அவனுக்காகத் திறக்கத்தானே செய்யும்?''
ஞானியின் முகத்தில் சிரிப்பு!
அவர் சொன்னார்: ``இப்படியே எவ்வளவு காலம் சொல்லிக்கொண்டிருக்கப் போகிறீர்கள்? கதவு எப்போது மூடியிருந்தது, இப்போது திறப்பதற்கு?''
8.1.2008 இதழிலிருந்து...