அணு முதலாக அண்டபகிரண்டம் அனைத்தின் இயக்கத்துக்கும் மூலமானவர், அம்பலத்தில் ஆடும் ஸ்ரீநடராஜப்பெருமான். இனித்தமுடன் எடுத்த பொற்பாதம் தூக்கி அந்தப் பரமன் ஆடும் ஆட்டமே, இந்த உலகையும் உயிர்களையும் ஆட்டுவிக்கிறது. பெரியோர்களும் ஞான நூல்களும் சொல்வதற்கேற்ப, கண்மூடி தியானித்து ஊன்றிக் கவனித்தால் நமக்குள்ளும் அந்தத் தாண்டவம் அனவரதமும் நிகழ்வதை உணரமுடியும்.

அப்படி, உள்ளுக்குள் உணர்வது கடினம் எனும் நிலையிலான எளியோர் என்ன செய்வது. அனுதினமும் சிவாலயம் சென்று நடராஜரை தரிசித்து வணங்கவேண்டும். ஆட்டத்தால் ஐந்தொழில் புரியும் அவரின் அருளே நம் உயிர்த்துடிப்புக்கும் வாழ்க்கை நகர்வுக்கும் காரணம் என்று அறிந்து துதிப்பாடல்கள் பாடி அவரை வழிபட்டால், இம்மைக்கும் மறுமைக்கும் தேவையான சகலமும் ஸித்திக்கும்.
அவ்வண்ணம், நடராஜரைப் போற்றி வழிபடுவதற்கான துதிப்பாடல் ஒன்று இங்கே உங்களுக்காக. இப்பாடல், ஓவியர் பத்மவாசனின் தந்தையும் தில்லை ஸ்ரீநடராஜரின் பக்தருமான `நல்லைக்குமரன்’ ப.முத்துக்குமாரசாமி எழுதியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS1. ஆண்டவன் ஒருவன் அவனே தில்லை
தாண்டவன் சிதம்பரம் நடராஜன் - ஆண்டவன்
வேண்டுவோர்க்கருளும் வேத வேதியன்
வையம் படைத்தவன் ஆனந்தக் கூத்தன் - ஆண்டவன்
சிவகாமி நேசன் சிதம்பர வாசன்
சப்த சுர நாதன் சங்கீத லோலன்
தவத்தரும் விரும்பும் தாமரைப் பாதன்
தன்னிகரில்லாத் தனிமுதல்வன் அறிவாய் - ஆண்டவன்

2. அருளுகின்றான் கூத்தன் தில்லையிலே
அகிலம் தழைத்தோங்க ஆனந்தமாகவே - அருளுகின்றான்
உருளும் பூந்தார்மாலை, முடியிற்சூடி
உவந்து கங்கை மதியையும் தலையிற் தாங்கி - அருளுகின்றான்
விருப்புடன் சிவகாமி மகிழ்ந்திருக்க
விளக்கமாய் ஆனந்த நடனம் ஆடும்
கருத்தான கடவுள் கனக சபாநாதன்
கருணை புரிகின்றான் எமக்காக - அருளுகின்றான்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
3. ஆடும் அழகே அழகு நடராஜன்
தில்லையிலே இடது பதம் தூக்கி - ஆடும்
பாடும் இசையும் பாடலின் சுவையும்
பக்தர் மனத்தில் பதியும் வண்ணம் - ஆடும்
தோடுடைய செவியன் தூய வெண்மதி சூடி
தாரணி மகிழ்ந்திடச் சிவகாமி தேவியுடன்
பீடுடை நடனம் ஆடுகின்றான் - தினம்
ஆயிரம் அபிநயம் காட்டுகின்றான் - அவன் - ஆடும்...

4. முற்றா வெண்திங்கள் முடியிற் சூடிய
முதல்வன் சிதம்பரநாதன் பதம் பணிவோம் - முற்றா
கற்றாரும் முற்றாரும் கசிந்துருகித் துதிசெய்யும்
கனகசபாபதி தாளே நமக்கு கதி - முற்றா
நற்றாமரை முகச் சிவகாமி நேசன்
நல்லடியார்க்கென்றும் அருளும் குணசீலன்
வற்றாத பெருங்கருணை வள்ளல் சபேசனை
வாயாரப் பாடி மனமாரத் துதிசெய்வோம் -
தாண்டவனே தில்லை ஆண்டவனே
5. மகாதேவ சிவசம்போ நடராஜா
மலரடியே சரணம் சிவராஜா - மகா
தகாதன செய்யாமல் தடுத்தாளும்
தாண்டவனே தில்லை ஆண்டவனே சிவனே - மகா
வஞ்சிக் கொடியன்னை சிவகாமிநேயா
வையம் ஈரேழும் படைத்த பராபரனே
நெஞ்சினுள் வைத்தோம் உந்தனையே
நஞ்சணி கண்டனே நலம் தருவாய்
என்றும் நலம் தருவாய் - மகா...
பங்காரு காமாட்சி
அன்னைக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அதில் அருள் திருநாமம் காமாட்சி என்பது. காஞ்சிமாநகரில் அன்னை காமட்சியாய் அருள்கிறாள். அந்த ஆலயத்தில் அன்னை பிலாகாச காமாட்சி, ஸ்ரீ சக்ர காமாட்சி, தபஸ் காமாட்சி, பங்காரு காமாட்சி என்றும் காட்சிகொடுத்து அருளிவந்தாள். இதில் பங்காரு காமாட்சி என்பது பிரம்மனால் வழிபடப்பட்ட பொன்னால் செய்யப்பட்ட அம்மனின் திருவுருவம். 16 -ம் நூற்றாண்டில் விஜய நகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் அந்நியர் படையெடுப்பு அச்சத்தின் காரணமாக, பங்காரு காமாட்சியை காஞ்சியிலிருந்து பாதுகாத்து தஞ்சையில் ‘பிரதாப சிம்மர்’ என்பவரிடம் ஒப்படைத்தனர். அவர் அன்னைக்குத் தஞ்சையில் ஒருகோயில் எடுத்து வழிபட்டார். அந்த நாள் முதல் பங்காரு காமாட்சி தஞ்சையில் அருள்புரிந்துவருகிறாள்.

திருநெல்வேலிக்கு அருகே 25 கி.மீ தொலைவில் பராஞ்சேரி என்னும் ஊர் உள்ளது. அங்கு துர்கை பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறாள். வனத்தில் வழி தவறி வந்த குழந்தைக்கு அருள் செய்த இந்த வனதுர்கை குழந்தையைக் கொல்ல வந்த திருடனை சம்காரம் செய்தாள். எப்போதும் அந்தக் குழந்தையை பாதுகாப்பதாகக் கூறி, சயனக் கோலத்தில் குழந்தையை அருகில் வைத்து பாதுகாத்துவருகிறாள் என்பது ஐதிகம்.