அரனருள் அமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் சென்னையில் நடைபெறும் பன்னிரு திருமுறை இசைவிழா பதினேழாம் ஆண்டாக இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றது.

மார்ச் 9-ம் முதல் மார்ச் 20-ம் தேதிவரை இந்த நிகழ்ச்சி சென்னை, தி.நகர், தருமை ஆதினத் திருமடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான சைவ அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விழாவின் ஒவ்வொரு நாளும் காலை 8 முதல் மாலை 8 மணி வரை திருமுறை இசை அரங்கம், கந்த புராணத் தொடர் சொற்பொழிவு என அருந்தமிழ்த் திருமுறைகளின் சிறப்பினையும் சைவத்தின் மேன்மையையும் எடுத்துச் சொல்லும் நிகழ்வுகள் நடைபெற்றன.

அரனருள் அமைப்பின் முக்கியமான குறிக்கோள் சைவத் திருமுறைகளை இளம் தலைமுறையினரிடையே கொண்டுசேர்ப்பது. அந்த இலக்கை மனதில் கொண்டாற்போல ஒருநாள் நிகழ்வு அமைந்தது.

மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் ‘திருஞான சம்பந்தர்’ என்னும் இசைநாடகம் அரங்கேற்றப் பட்டது. அந்த நாடகத்தின் சிறப்பு அம்சம் அதில் நடித்தவர்கள் அனைவரும் 5 வயதுமுதல் 14 வயதுவரையிலான 18 குழந்தைகள்.

சிறு குழந்தையாக அப்பாவின் கரம்பிடித்துத் தானும் நீராடும் கரைக்கு வருவேன் என ஆளுடைப்பிள்ளை அடம்பிடிக்கும் காட்சியோடு நாடகம் தொடங்கியது. மழலை மாறாத அந்தக் குழந்தையின் தோற்றமும் சிவபாதஹிருதயரின் அனுஷ்டான பாவனைகளுமே நம்மை அரங்கிலிருந்து சீர்காழியின் குளக்கரைக்குக் கொண்டுசென்று விடுகின்றன.

அழும் குழந்தைக்கு அம்பாள் வந்து ஞானப்பால் புகட்டுகிறாள். ‘உனக்குப் பாலூட்டியவர் எவர்...’ என்று சிவபாதர் கேட்க, ‘தோடுடைய செவியன்...’ என்று குழந்தை தன் சிறுவாய் மலர்ந்துபாடுகிறது.

அன்று ஆளுடைப் பிள்ளையாய் அவதரித்த ஞானசம்பந்தர் இப்படித்தான் தன் மழலைக் குரலெடுத்துப் பாடியிருப்பார் என்று தோன்றும் வண்ணம் அந்தக் குழந்தை பாடியது. ‘இப்படி ஒரு ஞானக்குழந்தையைப் பெற நான் என்ன தவம் செய்தேன்...’ என்று சிவபாதர் சிலிர்க்க, இப்படி ஒரு காட்சியைக் காணும் பாக்கியம் இன்று வாய்த்ததே என்று சிலிர்த்தனர் அரங்கில் கூடியிருந்த அடியவர்கள். நாடகத்தில் ஞானசம்பந்தராய் தோன்றிய சிறுவர்கள் மொத்தம் 7 பேர். ஞானசம்பந்தரின் வயதுக்கு ஏற்ப ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு ஞானசம்பந்தர் தோன்றினார். ஏழு சம்பந்தர்களும் பாடிக்காட்டிய பதிகங்கள் அந்த அரங்கையே கயிலாயமாக மாற்றின.

சிறுகுழந்தைகள் வசனத்தை மறக்காமல் பேசியும் ஸ்ருதி பிசகாமல் பாடியும் நடித்தது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது!

குறிப்பாக ஞானசம்பந்தர் மதுரைக்குப் புறப்படும் காட்சி. திருநாவுக்கரசர் நாளும் கோளும் சரியில்லை, மோசமான அந்த அவுணர்கள் சூழ்ச்சி செய்யலாம் என்று சொல்கிறார். ஆனால் சிவ வடிவான சம்பந்தப் பெருமான் ‘வேயுறு தோளி பங்கன் விடம் உண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி...’ என்று கோளறுபதிகம் பாட அதைக்கண்ட பக்தர்களும் சிலிர்ப்போடு பாடத்தொடங்கினர். ஒரு கட்டத்தில் அந்த அரங்கமே நாடக மேடை யாக மாறிவிட்டதுபோன்று தோன்றியது.

இந்த அருமையான நாடகத்தை வலையப் பேட்டை ரா.கிருஷ்ணன் எழுத, பவ்யா ஹரிசங்கர் இசை ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இந்த நாடகத்தை சென்னை திருப்புகழ்ச் சங்கம் சிறுநூலாகவும் வெளியிட்டு வந்திருந்த அன்பர் களுக்கு விநியோகித்தது, குறிப்பிடத்தக்கது. பலருக்கும் பயனுள்ள நூல் அது.

அடுத்த தலைமுறைக்குத் திருமுறைகளைக் கொண்டு செல்லவேண்டும் எனும் அரனருள் அமைப்பின் புனிதமான நோக்கம் நிச்சயம் நிறைவேறும் என்பதற்குக் கட்டியம் கூறுவதுபோல அமைந்தது இந்த நாடகம்.