Published:Updated:

"ஸ்ரீ அபிராமி அருளாசி அனைவருக்கும் கிடைக்கணும்" - திருக்கடையூர் கோயிலில் நடந்த 108 திருவிளக்கு பூஜை

108 திருவிளக்கு பூஜை

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் அருட்கடாட்சம் பக்தர்கள் அனைவருக்கும் தடையின்றி கிடைக்க வேண்டி 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை ஸ்ரீ அபிராமி அம்பாள் சந்நதியில் நடைபெற்றது.

25 ஆண்டுகளுக்குப்பின் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. முன்னிட்டு இன்று (22.3.2022) 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

108 திருவிளக்கு பூஜை
108 திருவிளக்கு பூஜை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகிலுள்ள திருக்கடையூரில் உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. யமனை வதம் செய்த அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இத்தலத்தில் சுவாமி காலசம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இத்தகைய சிறப்புமிக்க கோயிலில் கும்பாபிஷேகம் வரும் 27-ம் தேதி ஞாயிறன்று காலை 10 மணி முதல் 11:30 மணிக்கு நடைபெறுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் அருட்கடாட்சம் பக்தர்கள் அனைவருக்கும் தடையின்றி கிடைக்க வேண்டி 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை ஸ்ரீ அபிராமி அம்பாள் சந்நதியில் நடைபெற்றது.

108 திருவிளக்கு பூஜை
108 திருவிளக்கு பூஜை

'திருப்பணிச் செம்மல்' சென்னை மகாலட்சுமி ஏற்பாடு செய்திருந்த இந்த விளக்குப் பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் கலந்துகொண்ட பெண்களுக்கு ஸ்வர்ண புஷ்பம், மற்றும் மங்கலப் பொருள்கள் அடங்கிய அருட் பிரசாதங்களை வழங்கினார். முன்னதாக குருமகாசந்நிதானம் கோ பூஜை, கஜ பூஜை செய்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism