திருவாரூர் மாவட்டம், திருக்களர் எனும் கிராமத்தில் அமுதவல்லி அம்பாள் உடனுறை பாரிஜாதவனேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இது, காவிரி தென்கரைத் திருத்தலங்களில் 105-வது தலமாகும். திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றதும்கூட. நாவுக்கரசர் இவ்வூரைக் குறித்து பாடிய திருத்தாண்டகப் பாடலும் உள்ளது. இத்தலத்தில் சோழர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகரத்தார் காலத்தைச் சேர்ந்த 13 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. மாசி மாத பெளர்ணமி திதியில் சிவபெருமான் துர்வாச முனிவருக்காக பிரம்ம தாண்டவ திருநடனம் செய்தருளினார். அதனால், இங்குள்ள சபைக்கு ‘பேரம்பலம்’ என்று பெயர். இது உபவிடங்கத் தலமாகும். திருப்புகழ் வைப்புத் தலமாகவும் விளங்குகிறது.

`களர்' என்றால் அம்பலம் என்று பொருள். களர் நிலத்தில் உள்ள கோயிலாததால், இப்பெயர் பெற்றது என்றும் சொல்வர். இங்குள்ள துர்வாசர் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், ருத்ர தீர்த்தம், ஞான தீர்த்தம் ஆகியவை விசேஷமானவை. பவளமல்லிகை மரம் ஸ்தலவிருட்சமாக விளங்குகிறது.

சிவபெருமானின் கட்டளைப்படி முருகப் பெருமான் முனிவர்கள் பலருக்கும் பஞ்சாட்சர உபதேசம் செய்த தலம் இது. மார்கழி மாதம் பூர்வபட்ச சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் திருக்களர், அருள்மிகு சபாநாயகர் திருச்சந்நிதியில் எழுந்தருளிய முருகன், கந்தமாதன பருவதவாசிகளாகிய அறுபதினாயிரம் முனிவர்களுக்கும் துருவாசர், வியாசர், காலவர், பராசரர் முதலிய முனிவர்களுக்கும் பஞ்சாட்சர உபதேசம் (திருஐந்தெழுத்து) செய்தருளினார். பஞ்சாட்சர மந்திரத்தை வேதங்கள் புகழ்ந்துரைக்கும்படியான திருக் களர் தலத்தில் ஒருமுறை ஜபித்தால் கோடிமுறை ஜபித்த பலனைத் தருமாம்.

இத்தலத்தில் சண்முகப் பெருமான் தேவியருடன் இல்லாமல், குரு வடிவாக தனிச் சந்நிதியில் அருள்கிறார். ஆகவே, மாணவர்கள் தங்களின் படிப்பு சிறக்க வியாழக்கிழமைகளில் இவரை வழிபடுவது சிறப்பு. இங்கு வந்து தன்னை வணங்குப வர்களுக்கு முருகப்பெருமான் கல்வி செல்வம், மகப்பேறு, ஞானம் ஆகியவற்றை அளித்து, நிறைவில் சுப்ரமண்ய லோகத்தை அடையும் பேற்றினையும் அளிப்பதாக முருகப்பெருமான் திருவாக்கு அளித்துள் ளாராம். இது, கேது பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது.

இந்த வருடம் பஞ்சாட்சர உபதேசப் பெருவிழா மார்கழி 15 செவ்வாய்க்கிழமை (31.12.19) அன்று இரவு நடைபெறுகிறது. பக்தர்கள் கலந்துகொண்டு திருவருள் பெற்று வரலாம். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழித்தடத்தில், திருப்பத்தூர் என்ற ஊர் வரும். இந்த ஊரிலிருந்து களப்பாள் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் திருக்களர் உள்ளது. காலை 6 முதல் 12 மணி வரையிலும்; மாலை 4 முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.