Published:Updated:

காப்பாற்றி கரை சேர்ப்பார் விநாயகர்!

விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
விநாயகர்

திருக்கோடிக்காவல்

காப்பாற்றி கரை சேர்ப்பார் விநாயகர்!

திருக்கோடிக்காவல்

Published:Updated:
விநாயகர்
பிரீமியம் ஸ்டோரி
விநாயகர்

`கணபதியை வணங்கிட கவலைகள் நீங்கிடும்’ என்பது ஞானநூல்களின் வழிகாட் டல். சகல துன்பங்களையும் நீக்கியருளும் பிள்ளையார் பெருமான், ஒரு திருத்தலத்தில் அடியவர்தம் வினைகளைப் பொசுக்கி பிறவிப் பெருங்கடலிலிருந்து அவர்கள் கரையேற அருள்செய்து வருகிறார். ஆகவே, `கரையேற்று விநாயகர்’ என்ற விசேஷ திருப்பெயரையும் பெற்றுள்ளார்! அது எந்தத் தலம் தெரியுமா?

திருக்கோடிக்காவல்
திருக்கோடிக்காவல்
vimana gopuram
vimana gopuram
கரையேற்று விநாயகர்
கரையேற்று விநாயகர்
சிவபெருமான்
சிவபெருமான்
thiripura sundari amman
thiripura sundari amman
பிள்ளையார்
பிள்ளையார்


கும்பகோணம் அருகிலுள்ள திருக்கோடிக் காவல் தலம்தான் அது. இங்கே சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார் பிள்ளையார்.

திருக்கடவூரில் சிவபெருமான் அழித்த தண்டனையால் சக்திகளை இழந்து வீழ்ந்த யமதர்மன், `அனைத்தும் சிவத்துக்குள் அடக்கம்’ என்ற உண்மையை உணர்ந்து, பிரம்பு வனம் சூழ்ந்த திருக்கோடிக்காவல் ஈசனுக்குள் ஐக்கியமாகி அசைவற்று இருந்தார்.

காலன் இயக்கமற்றுப் போனதால், மரணம் நிகழ்வது தடைப்பட்டது. பூலோகம் பாரம் தாங்காமல் தவித்தது; உலகக் காரியங்கள் முரண்பட்டன. இந்த விபரீதத்தை உணர்ந்த இந்திராதி தேவர்கள், ஈசனிடம் முறையிட விரும்பி திருக்கோடிக் காவல் நோக்கி வந்தனர். வழியில், கங்கைக்குச் சமமான - உத்திரவாஹினியாய் பாயும் காவிரியைக் கடக்க முனைந்தனர்.

அப்போது ஆற்றில் சுழலில் சிக்கித் தவித்தனர். `புறப்படும் அவசரத்தில் விநாயகரைத் தொழாமல் வந்ததால் ஏற்பட்ட சோதனை இது’ என்பதை உணர்ந்தனர்.

பிழையைப் பொறுத்தருளும்படி கணபதியைக் கைதொழுது வணங்கினர். ஆற்று மணலில் விநாயர் திருவுருவை சிருஷ்டி செய்து வழிபட்டனர். விநாயகரும் அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார். அதுமுதல், இத்தலத்து விநாயகர் `கரையேற்று விநாயகர்’ என்ற நாமம் தாங்கி அருள்செய்கிறார் என்கிறது தலவரலாறு.

திருக்கோடிக்காவல் தலமானது ‘யம வாதனை’ இல்லாத பூமியாகக் கருதப்படுகிறது. இங்கு அருளும் கரையேற்று விநாயகர், ஜன்ம வினைகளைக் களைந்து அருளும் தெய்வம் என்கிறார்கள். ஆற்று மணலில் உருவான திருமேனியர் என்பதால், இந்தப் பிள்ளையாருக்கு விரிவான அபிஷேகங்கள் செய்யப் படுவதில்லை. சதுர்த்தி தினங்களில் இவரை தரிசித்து வழிபட்டால், நம் இன்னல்கள் யாவும் நீங்கும்; கஷ்டங் களிலிருந்து காப்பற்றி நம்மையும் கரை சேர்ப்பார் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism