Published:Updated:

திருமகள் திருவருள்

திருமகள்
பிரீமியம் ஸ்டோரி
திருமகள்

ஏ.பி.என்.சுவாமி; ஓவியம்: ம.செ - ஆன்மிகம்

திருமகள் திருவருள்

ஏ.பி.என்.சுவாமி; ஓவியம்: ம.செ - ஆன்மிகம்

Published:Updated:
திருமகள்
பிரீமியம் ஸ்டோரி
திருமகள்

ஸ்ரீவிஷ்ணு புராணம் என்பது பதினெட்டு புராணங்களுள் ரத்தினமாக ஜொலிப்பது. எனவே, இதை `புராண ரத்னம்' என்பர் பெரியோர்.

மைத்ரேய முனிவருக்கு, பராசர மஹரிஷி இந்தப் புராணத்தை உபதேசம் செய்திருக்கிறார். பராசரரின் பெருமை அளவிடற் கரியது. மேலும், அரும்பெரும் தத்துவங்களை விளக்கவந்த இந்நூலின் அமைப்பு, அழகிய கதைக் கோவையாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இதில் மொத்தம் ஆறு அம்சங்கள் உள்ளன. அதாவது காண்டம், அத்தியாயம் எனும் பிரிவுகள் போன்று `அம்சம்' என்பதும் ஒரு பிரிவாகும். அது தவிர, உட்பிரிவுகளும் இதில் நிறைய உள்ளன. மகாலக்ஷ்மியின் மகிமையை அற்புதமான இந்தப் புராணம் விவரிக்கிறது.

திருமகள் திருவருள்

தன்னிடம் நெருங்கி வந்து பல சந்தேகங்களைக் கேட்கும் சிஷ்யருக்குத் தெளிவான பல உபதேசங்களைச் செய்பவர் பராசரர். அவரிடம் பல சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்த மைத்ரேயர், மீண்டும் ஒரு கேள்வியை எழுப்பினார்...

``சுவாமி! மகாலக்ஷ்மித் தாயாரைக் குறித்த செய்திகளை அறிய ஆவல் உண்டாகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மகாலக்ஷ்மி அவதரித்தாள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். பிருகு எனும் மகரிஷிக்கு லக்ஷ்மிதேவி மகளாகப் பிறந்தாள் என்று தாங்கள் சொல்கிறீர்கள். இது பற்றி விரிவாக விளக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

பராசரர் அவரிடம், ``நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறாய் சீடனே. பகவான் மகாவிஷ்ணுவின் உயர்ந்த பெருமைதனை அறிவது போன்றே மகா லக்ஷ்மியின் பெருமை களையும் கூறுகிறேன், கேள். இதைக் கேட்பதும், படிப்ப தும், சொல்வதும் பெரும் பாக்கியம்'' என்றதுடன், மகாலக்ஷ்மியின் மகிமை களை விவரித்தார்.

``சீடனே! உலகின் தனிப்பெரும் நாயகனாக திருமாலை எவ்விதம் சொல்கிறோமோ, அப்படியே பிராட்டியும் சர்வலோக ஈஸ்வரி என்பதை அறிந்திடு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமகள் திருவருள்

ஒரு குடும்பத்துக்கு கணவன், மனைவி இருவரும் சேர்ந்தே அன்றோ தலைமை வகிக்கின்றனர். அப்படித்தான் பெருமாளும் பெருமாட்டியும்!

நாராயணன் என்னென்ன அவதாரங்கள் செய்கிறானோ, அவை எல்லாவற் றிலும் பிராட்டியும் உடன் அவதாரம் செய்கிறாள். அவன் ராமன் என்றால் இவள் சீதை. அவன் கிருஷ்ணன் என்றால் இவள் ருக்மிணி.

இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்கிறேன் கேள்... `திரு'வாகிய இவள் இல்லையென்றால் அவனே இல்லை எனலாம். ஆம்! உலகைக் காக்கும் நாராயணனுக்கே இவள்தான் மங்கலங் களை அளிப்பவள். எனில், மற்றவர்களுக்கு இவளின் அருள் என்னதான் செய்யாது!

மைத்ரேயா! ஓர் உதாரணம் சொல்கிறேன்... நாம் பேசும்போது ஒரு சொல்லைச் சொல்கிறோம் எனில், அதற் கென்று ஒரு பொருள் - அர்த்தம் உண்டு அல்லவா? அப்படித்தான் `திரு' எனும் மகாலக்ஷ்மி சொல்லாகத் திகழ்கிறாள் எனில், அவளின் சம்பந்தம் பெற்ற மகாவிஷ்ணு பொருளாகத் திகழ்கிறார். சொல்லையும் பொருளையும் பிரிக்க இயலுமா? அது போன்றே மங்கல தேவதையான மகா லக்ஷ்மியையும் மகா விஷ்ணுவையும் பிரிக்க முடியாது.'' என்று விளக் கினார் பராசரர்.

சுவாமி தேசிகனும் அழ காக விளக்குகிறார்.

`திரு உரையாய் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்' என்கிறார் அவர்.

திருவுரை - பிராட்டி சப்தம். பொருள் - எம்பெரு மான் - அர்த்தம்.' அழகான விளக்கம்!

சீடன் மட்டுமல்ல, நாமும் சுலபமாக அறியும்விதம் அன்னை மகாலக்ஷ்மியின் மேன்மையை விளக்கிய பராசரர், பாற்கடல் கடைந்த கதையை விரிவாகக் கூறி, `பிராட்டியின் திவ்ய கடாட்சம் பெற்றதால்தான் மூவுலகமும் மங்கலம் நிறைந்ததாகின' என்று முடிக்கிறார்.

திருமகள் திருவருள்

புஷ்பம், கண்ணாடி, பசுவின் பின்புறம், யானை, குதிரையின் முன்புறம், தங்கம், பசுஞ்சாணம், கோலம், சுத்தமான இடம், பக்தியுள்ளவர்கள் வசிக்கும் இடம்... இங்கெல்லாம் மகாலக்ஷ்மியின் கடாட்சம் உண்டு. வெறும் காசு பணமா கிய செல்வத்துக்கு மட்டுமின்றி தனம், தான்யம், வீரம், சந்தானம், வித்யை என அனைத்துக்கும் லக்ஷ்மி கடாட்சம் அவசியம் என்று உணர வேண்டும்.

இந்தத் தீபாவளித் திருநாளில் எண்ணெய், சீயக்காய் முதலிய மங்கலப் பொருள்களில் தாயார் வசிக்கிறாள். நாமும் அவற்றை உபயோகித்து நல்லருள் பெறலாம். நம் மனதிலுள்ள அறியாமை எனும் இருள் நீங்கி, ஞானம் பெற்று உள்ளொளி பெருகிட, அன்னையை வணங்கி தீபமேற்றிக் கொண்டாடுவோம் இந்தத் தீபாவளியை!