திருமணஞ்சேரி அருள்மிகு கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ உத்வாகநாத சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகிலுள்ள திருமணஞ்சேரியில் திருமணத்தலம் என்று போற்றப்படும் ஸ்ரீ உத்வாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சிவன் - பார்வதி திருமணம் நடைபெற்றதாகக் கருதப்படுவதால், திருமணத் தடை அகற்றும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. கடந்த 6 -ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, சுவாமி படி இறங்குதல் நிகழ்ச்சியுடன் இந்தாண்டு சித்திரைத் திருவிழா தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கல்யாணசுந்தரர் சுவாமிக்கு மங்கள ஸ்நானம் செய்யப்பட்டு, உற்சவ தினமான நேற்று (8.5.2022) கல்யாணசுந்தரர் அருகிலுள்ள திருஎதிர்கொள்பாடி கோயிலில் எழுந்தருளல், காசி யாத்திரைக்குப் புறப்படுதல், மாலை மாற்றுதல், ஊஞ்சல் உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதன்பின் கோகிலாம்பாள் சமேத கல்யாணசுந்தரேஸ்வரர் சுவாமி திருமணக்கோலத்தில் மணவறையில் எழுந்தருளினார்.
பின்னர் பக்தர்கள் சீர்வரிசை எடுத்தவர, கோயில் தலைமை அர்ச்சகர் உமாபதி சிவாசார்யர் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார்.

திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர், அம்பாளுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. வருகிற 12 - ம் தேதி விடையாற்றியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது. திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.