திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

திருமந்திரம் சொல்லும் 'கரு' ரகசியம்

திருமந்திரம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருமந்திரம்

மா.கி.இரமணன்

தாயும் தந்தையும் மனம் ஒன்றி, உடல் ஒன்றி, இசைவுடன், இருவரும் இன்புற்று புதிய உயிரை உருவாக்குகின்றனர். இன்பத்தில் உருவான, துன்ப மண் குடத்தில் ஆன்மா உருவாகிறது. கரு வளர்ந்து ஒன்பது ஓட்டைகளுடன் மனிதனாக உருவாகிறது. பச்சைமண் சூளையில் வைத்து செங்கல் ஆக தீமூட்டுவர். அது போல் தாயின் வயிற்றுச் சூளையின் சூட்டில் 300 நாள்கள் இருந்து மனிதனாகப் பிறக்கிறது மேற்காணும் திருமந்திரப் பாடலின் கருத்து இதுதான்.

திருமந்திரம் இரண்டாம் தந்திரத்தில் ‘கரு உற்பத்தி’ எனும் தலைப்பில் உள்ள 41 பாடல்களும், இன்றைய மகப்பேறு மருத்துவ அறிவியலுக்கு முன்னோட்டமாக, பல வியத்தகு அறிவியல் அற்புதங்களை விளக்குவதாக உள்ளன. அவற்றிலிருந்து சில தகவல்களைக் காண்போம்.

சேர்க்கையின்போது, பெண் வயிற்றில் மலம் மிகுந்திருந்தால் குழந்தை மந்தனாகப் பிறக்கும். சிறுநீர் தேங்கியிருந்தால், ஊமைக் குழந்தையும், இரண்டுமே இருந்தால் குழந்தை குருடாகவும் பிறக்கும் என்று 481-ம் பாடலில் சொல்கிறார் திருமூலர். எனவே சேர்க்கைபோது தூய்மையுடனும், உயர் எண்ணங்களுடனும் தம்பதிகள் இருந்தால் நல்ல பிள்ளை உருவாகும்.

திருமந்திரம் சொல்லும் 'கரு' ரகசியம்

சிவன் அருளால் சீவன் உதிக்கிறது. எனவே தெய்வ அருள் இருந்தால்தான் மக்கட் செல்வம் வாய்க்கும்.

ஆக்குகின்றான் கர்ப்பக் கோளகை உள் இருந்து

ஆக்குகின்றான் அவன் ஆவது அறிந்தே - திருமந்திரம் 3451

சிவன் அருள் கூடினால் மகப்பேறு வாய்க்கும். திருச்சி அருள்மிகு தாயுமானவ ஸ்வாமி திருக்கோயில் தலபுராணத்தில், சிவபெருமானே தாயாக வந்து பிரசவம் பார்த்துச் சென்ற கருணை வரலாறு உண்டு.

ஆக, பிள்ளைப்பேறு வாய்க்கா மல் வருந்தும் தம்பதிகள், தினமும் ‘கரு உற்பத்தி’ திருமந்திரப் பாடல்களைப் பாடி தென்னாடுடைய சிவபெருமானை மனதார வழிபட்டு வாருங்கள். சிவனருள், உங்கள் அகமகிழ கருவைத் தந்து அருளும்!

- மா.கி.இரமணன்