Published:Updated:

களைகட்டிய சீர்காழி பாரம்பர்யத் திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

சீர்காழி பாரம்பர்யத் திருவிழா

அன்னை ஊட்டிய பால், அவர் இதழோரம் வழிய, அதைக் கண்ட அவர் தந்தை சிவபாதர், 'உனக்குப் பால் ஊட்டியது யார்?' என்று வினவினார். அதற்குப் பதிலுரைக்கும்விதமாக ஞானசம்பந்தர் `தோடுடைய செவியன்' என்ற ஈசனின் அடையாளங்களைச் சொல்லும் பாடலைப் பாடினார்.

Published:Updated:

களைகட்டிய சீர்காழி பாரம்பர்யத் திருவிழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

அன்னை ஊட்டிய பால், அவர் இதழோரம் வழிய, அதைக் கண்ட அவர் தந்தை சிவபாதர், 'உனக்குப் பால் ஊட்டியது யார்?' என்று வினவினார். அதற்குப் பதிலுரைக்கும்விதமாக ஞானசம்பந்தர் `தோடுடைய செவியன்' என்ற ஈசனின் அடையாளங்களைச் சொல்லும் பாடலைப் பாடினார்.

சீர்காழி பாரம்பர்யத் திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைமையான பிரசித்திப் பெற்ற பிரம்மபுரீஸ்வரர் உடனாகிய பெரியநாயகி அம்மன், சட்டநாதர் ஆலயம் அமைத்துள்ளது. இந்த சட்டநாதர்கோயில் பிரம்ம தீர்த்த குளக்கரையில், திருஞானசம்பந்தருக்கு அம்பாள் ஞானப்பால் வழங்கியதாக ஐதிகம்.

சீர்காழி பாரம்பர்யத் திருவிழா
சீர்காழி பாரம்பர்யத் திருவிழா

சீர்காழியில் அவதரித்த திருஞான சம்பந்தருக்கு, திருநிலைநாயகி அம்பாள், கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் ஞானப்பால் வழங்கினார். அம்மையே ஞானப்பால் ஊட்டியதால் ஞானம் எய்தினார் திருஞான சம்பந்தர். அன்னை ஊட்டிய பால், அவர் இதழோரம் வழிய, அதைக் கண்ட அவர் தந்தை சிவபாதர், 'உனக்குப் பால் ஊட்டியது யார்?' என்று வினவினார். அதற்குப் பதிலுரைக்கும்விதமாக ஞானசம்பந்தர் `தோடுடைய செவியன்' என்ற ஈசனின் அடையாளங்களைச் சொல்லும் பாடலைப் பாடினார். அது முதற்கொண்டு அவர் சிவனருள் பெற்று ஞானக் குழந்தையாய் வலம் வந்தார்.

அதன்படி ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று திருமுலைப்பால் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருமுலைப்பால் விழா நேற்று நடைபெற்றது.

வழக்கமாகப் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுடன் பிரம்ம தீர்த்தக் குளக்கரையில் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு அடுத்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு எளிமையாக நடைபெற்றது.

சீர்காழி பாரம்பர்யத் திருவிழா
சீர்காழி பாரம்பர்யத் திருவிழா

விழாவையொட்டி ஞானசம்பந்தர் உள்பிரகார மண்டபத்தில் எழுந்தருளினார். ஆலயத்தின் உள்ளே அமைந்துள்ள மலைக்கோயில் எனப்படும் தோனியப்பர் ஆலயத்தில் இருந்து வெள்ளி குடத்தில் ஞானப்பால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு தங்கப் பொற்கிணத்தில் திருஞான சம்பந்தருக்கு வழங்கப்பட்டது.