Published:Updated:

பகைவரைக் கொல்ல அல்ல, வெல்லவே விரும்புபவன் அந்த கோவிந்தன்! திருப்பாவை 27

ஆண்டாள்
ஆண்டாள்

அனைத்தையும் அருள வல்லவனான அந்த கோவிந்தனை நாடியிருந்தால் மகிழ்ச்சிக்கும் குறைவு ஏற்படுமா என்ன?

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே

பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்

ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

கண்ணன்
கண்ணன்

பஜனை சம்பிரதாயத்தில் கல்யாண உற்சவம் உண்டு. பரமாத்மாவான அந்தக் கண்ணனை ஜீவாத்மாவான ராதை அடைந்ததைப் போற்றுவது. பாவனையில் நம்மை ராதையாக நினைத்துக்கொண்டு கண்ணனிடம் பக்தி செய்வது அதன் நோக்கம். அந்தப் பரமாத்மாவைப் பாடிப் போற்றி அவனோடு நம் சிந்தனையை ஐக்கியமாக்கிக் கொள்ளவேண்டும். அதே வேளையில் உலக மயமான நன்மைகள் கிடைக்காது என்று இல்லை.

கிருஷ்ணன் அவதரித்த முதல்நாள் நிகழ்ந்தவை உணர்த்தும் தத்துவங்கள் என்ன? -திருப்பாவை 25

பல காலமாகத் திருமணம் கைகூடாதவர்களை இதுபோன்ற கல்யாண உற்சவங்களில் கலந்துகொள்ளவும் அவர்கள் இல்லத்தில் நடத்தவும் வழிகாட்டுவர். ஒரு சுப நிகழ்ச்சி நடந்தால் தொடர்ந்து சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஒரு வீட்டில் கல்யாணம் நிச்சயமானால் அந்த வீடே மகிழ்ச்சியில் திளைக்கத் தொடங்கிவிடும்.

ஆண்டாள்
ஆண்டாள்

சாதாரணமான மனிதர்கள் திருமணமே அளவில்லாத மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்றால் கல்யாண குணங்களையே தன் வடிவமாகக் கொண்ட அந்தப் பரந்தாமன் அருகிலே, நம் இல்லத்திலே இருத்திவைக்கும் கல்யாண உற்சவங்கள் எல்லையில்லா மகிழ்ச்சியை நமக்குக் கொண்டுவரும். அனைத்தையும் அருள வல்லவனான அந்த கோவிந்தனை நாடியிருந்தால் மகிழ்ச்சிக்கும் குறைவு ஏற்படுமா என்ன...

கண்ணன் கூட இருந்தபோது கோபியர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியை அடைந்தனர். அப்படி ஒரு மகிழ்ச்சியோடு ஆண்டாள் கண்ணனின் சந்நிதானத்தில் தன் தோழியரோடு குழுமியிருக்கிறாள். நோன்பு நோற்று அதன் பலனாக அந்தக் கண்ணனின் தரிசனத்தைப் பெற்றுவிட்டாள் ஆண்டாள். அந்தக் கண்ணனும் இவர்கள் வேண்டும் வரங்கள் அருள சித்தமாயிருக்கிறான். நோன்பு முடிந்த மகிழ்வில் ஆண்டாள் விண்ணப்பிக்கத் தொடங்கினாள்.

வென்று பகைகெடுக்கும் வேல்கொண்ட கோபாலனைப் பாட அழைக்கும் கோதை... திருப்பாவை - 24
ஆண்டாள் கோயில்
ஆண்டாள் கோயில்

கோவிந்தனை அவள் கூடாரை வெல்பவன் என்று போற்றுகிறாள். கூடார் என்றால் தன்னோடு கூடியிறாதவர்களை அதாவது தன்னிடம் மாற்றுக்கருத்துள்ளவர்களை வெல்பவன் என்கிறாள். அவனோடு கூடாதவரைக் கொல்பவன் அல்ல வெல்பவன். பகைமையை அழிக்க விரும்புகிறவனே அன்றி பகைவரையல்ல. கண்ணனோடு இருந்தால் மகிழ்ச்சி. அப்படியில்லாமல் அவனிடம் கூடியிறாமல் இருப்பவர்கள் அந்த மகிழ்ச்சி என்ன என்பதை அறியாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தன் கல்யாண குணங்களாலும் கருணா சிந்தனையாலும் ரட்சித்து அவர்களை வெல்பவன் கோவிந்தன் என்கிறாள் ஆண்டாள். வெல்லும் இறைவனின் சித்தத்துக்கு இடமளிக்காத போதுதான் அசுர சம்ஹாரங்களை அவன் அவதரித்துச் செய்யவேண்டி வந்தது.

சீரிய சிங்கம்போல் தோன்றி எம் குறைதீர்ப்பாய் கோவிந்தா... கோதையின் திருப்பாவை 23!

``பகைவர்களை வெல்லும் கோவிந்தா, உன்னைப் பறைகொண்டு பாடியதால் நாங்கள் பெறப்போகும் சன்மானங்கள் அளவற்றவை. அவற்றில் சிலவற்றைச் சொல்கிறேன். இந்த நாடு அந்தப் பரிசில்களைக் கண்டு புகழும். இதுநாள்வரை நாங்கள் நோன்பில் இருந்தோம். அதனால் மையிட்டு எழுதாது மலரிட்டு முடியாது நெய்யுண்ணாது பாலுண்ணாது விரத முறைகளை அனுஷ்டித்து வாழ்ந்தோம். இன்றோ உன் தரிசனத்தால் எங்களுக்கு விரதம் பூர்த்தியானது. எனவே நாங்கள் எங்களை அழகு படுத்திக்கொள்ளப் போகிறோம்.

கண்ணன்
கண்ணன்

நாங்கள் அணிந்துகொள்ள கை அணியான சூடகமும், தோடும், செவியில் அணியும் பூப்போன்ற அணிகலனும் பாதத்தில் அணிந்துகொள்ளும் கொலுசு போன்ற பல்வேறு அணிகலன்களையும் அணிந்துகொள்வோம். புதிய ஆடை உடுத்திக்கொள்வோம்.

அதன்பின் இதுநாள்வரை பாலும் நெய்யும் தவிர்த்து உணவு உண்டுவந்தோம். இன்றோ நாங்கள் உன் தரிசனம் கண்ட மகிழ்வில் மகிழ்ந்து உனக்குப் பால்சோறை நிவேதனம் செய்து அதில் அதிகமாய் நெய் ஊற்றி, அவ்வாறு ஊற்றிய நெய் எங்கள் முழங்கைகளில் வழிந்து ஓடுமாறு ஆக மன மகிழ்ச்சியோடு இந்த நோன்பை நாங்கள் கொண்டாடுவோம். நீயும் எங்களுடன் இருந்து மகிழ்ச்சி பெருக குளிர்ந்து எமக்கு அருள்வாய்" என்றாள் ஆண்டாள்.

பகைவர்களுக்கு நெருப்பாக விளங்கும் விமலனைத் துயில் எழுப்பும் ஆண்டாள்... திருப்பாவை - 20
ஆண்டாள்
ஆண்டாள்

இந்தப் பாசுரம் ஏறக்குறைய ஒரு கல்யாணப் பாசுரம் போலவே கருதத்தக்கது. வாழ்வில் நல்ல பலன்களை வேண்டுபவர்கள் இந்தப் பாசுரத்தைப் பாடி அந்த நாராயணனை வணங்க, கெடுபலன்கள் மாறி நற்பலன்கள் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு