
`திருப்புகழ் அமுதன்' வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்
கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்க் கிழமைகளில் இந்தத் திருநாமப் போற்றி களைச் சொல்லி முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால் சகல நன்மைகளும் கைகூடும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.

தீபம் ஏற்றுவோம் முருகனைப் போற்றுவோம்!
தெய்வத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ‘சந்தம்’ எனும் பெருநதி யைப் பாயச்செய்து, ஓசையும் இசையுமாக அதை வளப்படுத்திய பெருமை அருணகிரிநாதருக்கே உரியது. அவர் அருளிய திருப்புகழ்ப் பாடல்களை, முருகப்பெருமான் தன் தாளிலும் தோளிலும் அணிந்து மகிழ்கிறான் என்று பெரியோர்கள் போற்றுவர்.
இத்தகு சிறப்புமிக்க திருப்புகழில் அர்ச்சனை ரூபமாக `நமோ நம’ என முருகனைப் போற்றும் ஆறு பாடல்கள் உண்டு. இதேபோல் வேறுசில திருப்புகழ் பாடல்களிலும் `நமோ நம’ எனும் போற்றுதல் இடம்பெற்றுள்ளது. இவற்றைத் தொகுத்து முருகனை வழிபட்டு அருள்பெறும் விதம் 126 திருநாமங்களை ஒருங்கே தந்துள்ளோம்.
இந்த நாமப்போற்றியை அடியார்கள் 8 முறை கூறி வழிபட்டால், 1008 எனும் எண்ணிக்கையாக நிறைவடையும். கார்த்திகை, சஷ்டி, செவ்வாய்க் கிழமைகளில் இந்தத் திருநாமப் போற்றி களைச் சொல்லி முருகப்பெருமானை அர்ச்சித்து வழிபட்டால் சகல நன்மைகளும் கைகூடும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.
வரும் தைப்பூசத் திருநாளிலும் (பிப்ரவரி-5) இல்லங்களில் தீபங்கள் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் படைத்து, இந்தத் திருப்புகழ் நாமப்போற்றிகளைச் சொல்லி, மலர்களால் கந்தனை அர்ச்சித்து வழிபட்டு, அவரின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று மகிழ்வோம்.

ஓம் அபிராம தருணக தீரா நமோ நம
ஓம் அரகர சேயே நமோ நம
ஓம் அரிதான வேத மந்த்ர ரூபா நமோ நம
ஓம் அரி மருகோனே நமோ நம
ஓம் அருண சொரூபா நமோ நம
ஓம் அழகான மேனி தங்கிய வேளே நமோ நம
ஓம் அறுதியிலானே நமோ நம
ஓம் ஆறுமுக வேளே நமோ நம
ஓம் ஆகம சார சொரூபா நமோ நம
ஓம் ஆடகத் திரிசூலா நமோ நம
ஓம் ஆதரித்தருள் பாலா நமோ நம
ஓம் ஆதிகாரண நமோ நம
ஓம் ஆதி சற்குண சீலா நமோ நம
ஓம் ஆரணத்தினார் வாழ்வே நமோநம
ஓம் ஆரணற்கரியானே நமோ நம
ஓம் ஆரணம் பயில்ஞான புங்கவே நமோ நம
ஓம் ஆர்யை பெற்ற சீராளா நமோ நம
ஓம் ஆறிரட்டி நீள் தோளா நமோ நம
ஓம் இகபர மூலா நமோ நம
ஓம் இமையவர் வாழ்வே நமோ நம (20)
ஓம் உமைகாளி பகவதிபாலா நமோ நம
ஓம் உம்பர்கள் சுவாமி நமோ நம
ஓம் எம்பெருமானே நமோ நம
ஓம் எமைப்பணி விதிக்கும் சாமி நமோ நம
ஓம் ஒண்டொடி மோகா நமோ நம
ஓம் கங்காள வேண்டி குருவானவ நமோ நம
ஓம் கதிதோயப் பாதக நீவுகுடார நமோ நம
ஓம் கந்தா குமார தேசிக நமோ நம
ஓம் கருணை யதீதா நமோ நம
ஓம் கிரிராஜ தீபமங்கள சோதீ நமோ நம
ஓம் கீத கிண்கிணி பாதா நமோ நம
ஓம் ஜகதீச பரம சொரூபா நமோ நம
ஓம் சக்திபாணி நமோ நம
ஓம் சங்கமேறும் மாதமிழ்த்ரய சேயே நமோ நம
ஓம் சததள பாதா நமோ நம
ஓம் சமதள வூரா நமோ நம
ஓம் சரவண ஜாதா நமோ நம
ஓம் சிங்காரருப மயில்வாகன நமோ நம
ஓம் சித்ரகோலாகலா நமோ நம
ஓம் சிந்தூர பார்வதி சுதாகர நமோ நம (40)

ஓம் சிவசிவ ஹரஹர தேவா நமோ நம
ஓம் சிவாகம தந்த்ரபோதா நமோ நம
ஓம் சீதள வாரிஜ பாதா நமோ நம
ஓம் சுரர் உக்ர சேனாபதி நமோ நம
ஓம் சுரர்பதி பூபா நமோ நம
ஓம் சூரை அட்டு நீள் பேரா நமோ நம
ஓம் சேவல மாமயில் ப்ரீதா நமோ நம
ஓம் சோதி கதிர்வேலவ நமோ நம
ஓம் சோபமற்றவர் சாமீ நமோ நம
ஓம் ஜெய ஜெய ஹரஹர தேவா நமோ நம
ஓம் ஜோதியிற் ஜகஜோதி மஹாதேவ நமோ நம
ஓம் ஞான தீக்ஷித சேயே நமோ நம
ஓம் ஞான பண்டித நாதா நமோ நம
ஓம் ஞான பண்டித சாமீ நமோ நம
ஓன் ஞான முத்தமிழ் தேனே நமோ நம
ஓம் தத்வவாதீ நமோ நம
ஓம் தருணக தீரா நமோ நம
ஓம் தரிசன பரகதி ஆனாய் நமோ நம
ஓம் தற்ப்ரதாபா நமோ நம
ஓம் திசையினும் இசையினும்
வாழ்வே நமோ நம (60)

ஓம் திரிபுரம் எரிசெய்த கோவே நமோ நம
ஓம் தீர சம்ப்ரம வீரா நமோ நம
ஓம் துங்கமேவும் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோ நம
ஓம் தூய அம்பல லீலா நமோ நம
ஓம் தெரிசன பரகதி யானாய் நமோ நம
ஓம் தேவகுஞ்சரி பாகா நமோ நம
ஓம் தேவர்கள் சேனை மகீபா நமோ நம
ஓம் நாகபந்த மயூரா நமோ நம
ஓம் நாதசற்குரு நாதா நமோ நம
ஓம் நாத நிஷ்கள நாதா நமோ நம
ஓம் நாதவிந்து கலாதீ நமோ நம
ஓம் நாதா குமரா நமோ நம
ஓம் நாரத கீத விநோதா நமோ நம
ஓம் நாவல ஞான மனோலா நமோ நம
ஓம் நிருபமர் வீரா நமோ நம
ஓம் நீதி தங்கிய தேவா நமோ நம
ஓம் நீப புஷ்பக தாளா நமோ நம
ஓம் நீல மிக்க கூதாளா நமோ நம
ஓம் பகவதி பாலா நமோ நம
ஓம் பத்மசீர் பாதா நமோ நம (80)
ஓம் பஞ்சபாண பூபன்மைத்துன பூபா நமோ நம
ஓம் பணியாவும் பூணுகின்ற பிரானே நமோ நம
ஓம் பரசூரர் சேததண்ட விநாதா நமோ நம
ஓம் பரம சொரூபா நமோ நம
ஓம் பரிமள நீபா நமோ நம
ஓம் பவுருஷ சீலா நமோ நம
ஓம் பாதகநீவுகுடாரா நமோ நம
ஓம் பாரினிலே ஜெயவீரா நமோ நம
ஓம் பாலகுமார சுவாமி நமோ நம
ஓம் புய அக்ஷமாலா தரா நமோ நம
ஓம் பூதமற்றுமே ஆனாய் நமோ நம
ஓம் பூதரத்தெலாம் வாழ்வாய் நமோ நம
ஓம் பூதலந்தனை ஆள்வாய் நமோ நம
ஓம் பூரணக்கலை சாரா நமோ நம
ஓம் பூரணத்துளே வாழ்வாய் நமோ நம
ஓம் பூஷணத்து மா மார்பா நமோ நம
ஓம் போக அந்தரி பாலா நமோ நம
ஓம் போக சொர்க்க புபாலா நமோ நம
ஓம் போதகந்தரு கோவே நமோ நம
ஓம் போத நிற்குண போதா நமோ நம (100)
ஓம் போதவன் புகழ் சாமீ நமோ நம
ஓம் மன்றுளாடும் தோதிதித்திமி தீதா நமோ நம
ஓம் மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோ நம
ஓம் மறைதேடும் சேகரமான ப்ரதாபா நமோ நம
ஓம் மாவசுரேசர் கடோரா நமோ நம
ஓம் முத்திஞானீ நமோ நம
ஓம் மேகமொத்த மாயூரா நமோ நம
ஓம் ரத்ன தீபா நமோ நம
ஓம் வாழ் ஜகத்ரய வாழ்வே நமோ நம
ஓம் வான பைந்தொடி வாழ்வே நமோ நம
ஓம் விண்டிடாத போத மொத்தபேர் போதா நமோ நம
ஓம் விந்துநாத வீரபத்ம சீர்பாதா நமோ நம
ஓம் விந்துநாத சத்துரூபா நமோ நம
ஓம் விருதோதைச் சிந்தான சோதிகதிர்வேலவ நமோ நம
ஓம் வீரகண்டைகொள் தாளா நமோ நம
ஓம் வீரவேற் ப்ரதாபா நமோ நம
ஓம் வீம சக்ர யூகாளா நமோ நம
ஓம் வீறு கொண்ட விசாகா நமோ நம
ஓம் வெகுகோடி நாமசம்பு குமாரா நமோ நம
ஓம் வேடர் தங்கொடி மாலா நமோ நம
ஓம் வேதசித்ர ரூபா நமோ நம
ஓம் வேத மந்த்ர சொரூபா நமோ நம
ஓம் வேதவித்தகா சாமீ நமோ நம
ஓம் வேதனத்ரய வேளே நமோ நம
ஓம் வேல்மிகுத்த மாசூரா நமோ நம
ஓம் வேலா பாலா வீரா நமோ நம (126)