Published:Updated:

``கோயில்களில் பசுவிற்கு இணையாக எருமை மாடுகள் வளர்ப்பும் வேணும்" - திருவடிக்குடில் சுவாமிகள்!

திருவடிக்குடில் சுவாமிகள்

பசுவிற்கு இணையாக எருமை மாடுகள் வளர்ப்பு கோயில்களில் இருக்க வேண்டும் என்கிறார் திருவடிக்குடில் சுவாமிகள் கருத்து

Published:Updated:

``கோயில்களில் பசுவிற்கு இணையாக எருமை மாடுகள் வளர்ப்பும் வேணும்" - திருவடிக்குடில் சுவாமிகள்!

பசுவிற்கு இணையாக எருமை மாடுகள் வளர்ப்பு கோயில்களில் இருக்க வேண்டும் என்கிறார் திருவடிக்குடில் சுவாமிகள் கருத்து

திருவடிக்குடில் சுவாமிகள்
தமிழகத்தில் ஆலய வழிபாடுகள், பழக்க வழக்கங்களால் செய்ய படும் வழிபாடுகள், நாட்டார் வழிபாடுகள் எனப் பல விதமான தெய்வ வழிபாடுகள் உள்ளன. நம்முடைய வாழ்க்கை முறையே ஆலயத்தையும், வழிபாட்டையும் ஒட்டியதாக இருக்கிறது.

அதில் மிக முக்கியமானது கால்நடை வளர்ப்பு. அதிலும் நம்முடைய பாரம்பர்யம் பண்பாடு நிறைந்துள்ளது. அவற்றில் எருமை வளர்ப்பின் அவசியம் பற்றியும் எருமைக்கும் ஆன்மிகத்துக்கும் உள்ள தொடர்பு பற்றியும் விளக்கினார் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள்.

திருவடிக்குடில்  சுவாமிகள் கருத்து
திருவடிக்குடில் சுவாமிகள் கருத்து

"இன்று பல்வேறு கோயில்களில், 'கோபூஜை' என்பது மிகச் சிறப்பாக செய்யப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருவானைக்காவலில் அம்பிகையே வந்து கோபூஜையை செய்வதாக ஒரு ஐதிகம் இருக்கிறது. அதன்படி இன்றும் அங்கே அர்ச்சகரால் உச்சிக்காலத்தில் கோபூஜை நடந்து வருகிறது. இதையெல்லாம் வைத்து பார்த்தல் தொன்றுதொட்டு நாம் பசுவை தெய்வமாகப் பூஜை செய்து வருகிறோம். பசுவைத் தொட்டுக் கும்பிட்டால் புண்ணியம் என எண்ணுகிறோம். பௌர்ணமி, அமாவாசை நாள்களில் பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வணங்கி வருகிறோம்.

பசு மட்டுமல்லாது எருமைகளும் ஆடுகளும் அன்று சிறப்பாக வளர்க்கப்பட்டுள்ளன.

அவை தானமாக அன்று மன்னர்களால் வழங்கப்பட்டுள்ளன. கால்நடை வளர்ப்பு அன்றிலிருந்தே போற்றப்பட்ட ஒன்று. ஆனால் இன்று எருமை வளர்ப்பு குறைந்துள்ளது. எருமை குறித்த எதிர்மறை கருத்துக்களே மக்களிடம் உள்ளது. எனினும் வரலாறு எருமை வளர்ப்பைப் பற்றி சிறப்பாகவே கூறுகிறது.

குறிப்பாக பெரியபுராணத்தில், சிறுத்தொண்டநாயனார் வரலாற்றில் உத்ரபதியார் மகேஸ்வர பூஜைக்கு உணவு சமைக்கக் கேட்கும் பொழுது, அதற்கு சிறுத்தொண்டர் "என்னுடைய கோசாலையில் பசுக்களும் இருக்கின்றன. அதற்கு ஈடாக எருமைகளும் இருக்கின்றன" என்கிறார். சிறுத்தொண்டர் பசுவையும் எருமையையும் ஒன்றாக பாவித்தே தன்னுடைய கோசாலையில் வளர்த்துள்ளார்.

அதுமட்டுமல்ல திருஞானசம்பந்தர் எழுதிய திருவண்ணாமலை தேவாரத்தில் 'கனைத்த மேதி காணாது' என்று பாடுகிறார். இதில் 'மேதி' என்ற சொல் எருமை மாட்டைக் குறிக்கிறது. மேலும் ஆன்மிகம் சார்ந்த எருமை மீதான கருத்துக்களைக் கூறுகையில், ஆன்மிகத்தில் எருமை யமனுடைய வாகனம் என்று சொல்லப்படுவதாகும். யமதர்மனுடைய வாகனம் எருமை. அப்படியென்றால் எருமை தர்மத்தின் வாகனமாகும்.

திருவடிக்குடில்  சுவாமிகள் கருத்து
திருவடிக்குடில் சுவாமிகள் கருத்து

திருப்பாவையில் ஆண்டாள் பாடுகையில், 'கனைத்திளம் கற்றெருமை கன்றுக்கு இறங்கி' என்று குறிப்பிடுகிறார். அதிக செல்வம் தரும் எருமை என்றே திருப்பாவையும் குறிக்கிறது எருமை வளர்ப்பை.

சமீபத்தில் ஆவின் நிறுவனமும் கலப்பின மாடுகளான ஜெர்சி மாடுகளையே அதிகம் இறக்குமதி செய்து பால் விற்பனை செய்கிறது. வெளிநாட்டின் கலப்பினப் பசுக்களை விடுத்து நமது பாரம்பர்யமான எருமைப் பசுக்களின் பால் கொள்முதலை நாம் அதிகரிக்க வேண்டும். எருமைப் பாலுடைய டென்சிட்டி அதிகம். இனிப்புகள் செய்யவும் அது பயன்படும். எருமை வளர்ப்பை ஊக்கப்படுத்திப் பசும்பாலுக்கு சமமாக எருமைப் பாலையும் கொள்முதல் செய்யும் நிலை உருவாக வேண்டும்.

கும்பாபிஷேகத்துக்குத் தயார் செய்யும் அஷ்டபந்தன மருந்து எருமை பாலில் செய்த வெண்ணெய். அப்படி எருமைக்கும் ஆன்மிகத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. அதனால் இந்து அறநிலைத்துறை மூலமாக யமன் மட்டும் துர்கை அம்மன் ஆலயங்களில் கோசாலைக்கு சமமாக எருமை சாலைகளும் இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக பட்டீஸ்வரத்தில் துர்கை அம்மன் ஆலயத்தில் தேனுபுரீஸ்வரர் என்பது சுவாமியின் பெயர். அதனால் அங்கே கோசாலை வைத்துப் பசுக்கள் வளர்க்கப்படுகின்றன. ஆனால் அதே ஆலயத்தில் வடக்கு நோக்கி துர்கை அம்மனும் உள்ளார். துர்கையின் பாதத்தில் எருமை மாடு இருக்கும். அப்படியானால் அந்த எருமை எவ்வளவு புண்ணியம் செய்திருக்கும்...

எனவே பொதுமக்களிடம் என்னுடைய கோரிக்கையாக எருமை வளர்ப்பை வைக்கிறேன்" என்று கூறினார்.