Published:Updated:

பேரண்டத்தில் சுழலும் கோள்கள் எத்தனை? - திருவண்டப் பகுதி விளக்கும் வானியல்! #Video

நடராஜர்
நடராஜர்

வள்ளல் பெருமான் ஓர் ஓலையில் திருவண்டப்பகுதியை எழுதி அதைத் தன் தலையில் சிலகாலம் செருகி வைத்திருந்தார் என்று வாய்மொழித் தகவல் ஒன்று உண்டு.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இந்த லிங்க் மூலம் இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் பல் வேறு சிறப்புகளை உடையது. அதில் ஒன்று அதை சிவபெருமான் அதைத் தன் திருக்கைப்பட எழுதினார் என்பது. இதுகுறித்து மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சொல்கிறபோது இதுவரை தான் இன்னார் எனத் தன் பெயர் சொல்லாமல் போக்குக் காட்டிவந்த பெருமான் தற்போது தன் பெயரினை, 'அழகிய சிற்றம்பலமுடையான்' என்று எழுதிவிட்டான் என்று சொல்லுவார்.

ஒருவருக்கு ஊரார் ஆயிரம் பேர் வைத்து அழைக்கலாம். ஆனால் அந்த நபர் தன் பெயர் இதுதான் என்று சொல்வதுதானே இறுதியானது. அதுதானே அலுவல்பூர்வமானது. அவ்வாறு இறைவன் தன் பெயரைப் பதிவு செய்துவைத்திருக்கும் ஆவணம் திருவாசகம்.

சிவபெருமான்
சிவபெருமான்

இந்தத் திருவாசகத்தில் முதல் நான்கு நீண்ட பாடல்களில் ஒன்று திருவண்டப் பகுதி.

இதற்கு ஒரு சிறப்பு உண்டு என்கிறார் வள்ளல் பெருமான். அவர் மாணிக்கவாசகப் பெருமான் மீது ‘ஆளுடை அடிகள் அருள்மாலை’ என்னும் பத்துப்பாடல்கள் பாடினார். அதில் நான்காவது பாடல் திருவண்டப் பகுதியைக் கொண்டாடும்பாடல். அதில்தான் அவர் அதை ’உலகப் பொதுமறை’ என்கிறார்.

உருவண்டப் பெருமறையென் றுலகமெலாம் புகழ்கின்ற

திருவண்டப் பகுதியெனுந் திருவகவல் வாய்மலர்ந்த

குருவென்றெப் பெருந்தவருங் கூறுகின்ற கோவேநீ

இருவென்ற தனியகவ லெண்ணமெனக் கியம்புதியே.

இந்த உலகில் பலவேறு சமயங்கள் உள்ளன. அந்த சமயங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மறை அதாவது வேதம் உள்ளது. அது 'திருவண்டப்பகுதி என்கிறார்.

வள்ளல் பெருமான் ஓர் ஓலையில் திருவண்டப்பகுதியை எழுதி அதைத் தன் தலையில் சிலகாலம் செருகி வைத்திருந்தார் என்று வாய்மொழித் தகவல் ஒன்று உண்டு. இது அவர் திருவண்டப்பகுதியின் மீது கொண்டிருந்த ஆர்வம் மற்றும் ஈடுபாட்டின் காரணமாகத் தோன்றியிருக்கலாம்.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச்

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

இந்த வரிகளில் பல சொற்கள் மிகவும் நுணுகி ஆராயத் தக்கவை. உண்டை, அணு ஆகிய சொற்கள் முற்றிலும் அறிவியல் தொடர்புடையன. எனவே இந்த ஆறுவரிகளையும் அறிவியல் பாடமாகவே கொள்ள இயலும்.

நம் தேசத்து ஞானிகள் மெய்ஞ்ஞானிகள் என்பதற்கு உதாரணம் அவர்களின் வாக்கு. அவர்கள் அறிந்து சொல்லிவைத்திருப்பவற்றுள் பல இன்றும் அறிவியல் விடைதேட முயலும் விஷயங்களே. அப்படித்தான் மாணிக்க வாசகரின் திருவண்டப்பகுதியும். 19 - ம் நூற்றாண்டுக்கு மேல் 20 - ம் நூற்றாண்டில் உலக வானியல் அறிஞர்கள் அடைந்த பல்வேறு முடிவுகளை எட்டாம் நூற்றாண்டிலேயே தன் ஞானத்தினால் அடைந்து சொல்லிவைத்திருக்கும் பகுதியே ‘திருவண்டப் பகுதி.’ கலிலியோவும் கோபர்நிக்கஸும் இந்த உலகம் உருண்டை என்று சொன்னபோது மேலை மார்க்கம் அவர்களை தண்டித்தது. அதுவும் 17 - ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த அண்டம் படர்ந்து விரிந்து உள்ளது. அதன் தன்மையை நம்மால் அளவிட முடியாது. இதில் கிடக்கும் கோள்களின் எண்ணிக்கை நூற்றி ஒரு கோடியைத் தாண்டும். ஒரு வீட்டில் துளை ஒன்று இருக்கிறது. அதன் வழியாக சூரியக்கதிர் வெளிப்படுகிறது. அந்தக் கதை உற்று நோக்கினால் அதில் துகள்கள் மிதப்பதைக் காணலாம். அவை மிகச் சிறியன. இந்த அண்டமோ மிகப்பெரியது. ஆனால் இறைவன் அதைவிடவும் பெரியவன்.

இதை அறிஞர் அ.ச.ஞா இப்படி விளக்குவார்.

மாணிக்க வாசகர் எழுதிய திருவண்டப் பகுதி
மாணிக்க வாசகர் எழுதிய திருவண்டப் பகுதி

கடுகு சிறியது. ஆனால் பூசணிக்காய் அதைவிடப் பெரியது. நீங்கள் இமயமலையோடு பூசணிக்காயை ஒப்பிட்டால் பூசணிக்காய் கடுகைவிட சிறியது. பூசணிக்காயை அண்டம் என்று கொண்டால் இறைவன் இமயமலை போன்றவன் இறைவன். அவனே பெரியவன் என்பார்.

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

அந்தப் பெரியோனின் இயல்பையும் திருவண்டப் பகுதியின் ரகசியத்தையும் விரிவாகப் பேசுகிறார் மாணிக்கவாசகர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு