Published:Updated:

சிவமே குரு, குருவே சிவம்... ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் 152வது ஜயந்தி விழா!

ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகள்

கலியுகத்தின் மிக சிறந்த ஞான குரு என்று போற்றப்படும் சேஷாத்ரி சுவாமிகளின் 152-வது ஜனன தினம் இன்று.

சிவமே குரு, குருவே சிவம்... ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் 152வது ஜயந்தி விழா!

கலியுகத்தின் மிக சிறந்த ஞான குரு என்று போற்றப்படும் சேஷாத்ரி சுவாமிகளின் 152-வது ஜனன தினம் இன்று.

Published:Updated:
ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகள்
திருவண்ணாமலையின் அற்புதங்கள் பலவற்றில் 3 முக்கியமானது என்பார்கள். அது அண்ணாமலையார், ரமண மகரிஷி, சேஷாத்ரி சுவாமிகள் என்று ஆன்றோர்கள் கூறுவார். திருவண்ணாமலையை மேலும் ஜொலிக்கச் செய்த ரத்தினம் சேஷாத்ரி சுவாமிகள். இவர் காஞ்சிபுரத்தில் 22.1.1870 அன்று அஸ்த நட்சத்திரத்தில் வரதராஜன் - மரகதம் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சிறுவயது முதலே பக்தியும் ஆன்ம விசாரணையுமாக வாழ்ந்தவர் இவர்.
சேஷாத்ரி சுவாமிகள்
சேஷாத்ரி சுவாமிகள்

இவரது தாயார் மரணப்படுக்கையில் 'அருணாசல.. அருணாசல..அருணாசல..' என்று மும்முறை கூறிவிட்டு உயிர் துறந்தார். யார் அந்த அருணாசலம் என்று பார்க்க கிளம்பினார் சேஷாத்ரி. தனது 19 - ம் வயதில் திருவண்ணாமலைக்குச் சென்று அங்கே அடைக்கலமானவர், மாபெரும் சித்து விளையாட்டுகள் புரிந்து தங்கக்கை சுவாமி என்ற பெயர் பெற்றார். ஆம், இவர் யாரை ஆசிர்வதித்தாலும் அவர்களின் வேண்டுதல் யாவும் நிறைவேறும் என்பது உண்மை என்கிறார்கள் பக்தர்கள். ரமணரைக் கண்டறிந்து அவருக்கு பல உதவிகள் புரிந்தவர் சேஷாத்ரி சுவாமிகள். இவருக்கு பரமேஸ்வரனே குருவாக வந்து தீட்சைகள் அளித்தார் எனப்படுகிறது.

தனது தபோபலத்தால் பல அதிசயங்களைச் செய்தவர் இந்த மகான். அதனால்தான் இவரை வியந்து மகா பெரியவர் எப்போதும் பேசுவார். குறிப்பாக தனது பக்தர்களிடம் 'ஜய ஜய ஜய ஜய காமாக்ஷி, ஜய ஜய ஜய ஜய காமகோடி, ஜய ஜய ஜய ஜய சேஷாத்ரி!' என்று அடிக்கடி கூறுவாராம். இப்படிப்பட்ட தங்கக்கை சேஷாத்ரி சுவாமிகள் செய்த அற்புதத்தில் ஒன்றை இங்கே காண்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திருவண்ணாமலையின் பெருமையாம் சேஷாத்திரி சுவாமிகளின் பக்தர் சிவபிரகாச முதலியார் என்பவர். ஒருமுறை சின்ன பிரச்னையால் சிவபிரகாசருக்கு அலுவலகத்தில் வேலை பறிபோய்விடும் சூழல் உருவானது. இதனால் மன வருத்தத்துடன் சேஷாத்ரி சுவாமிகளை தரிசிக்க வந்திருந்தார். அவரைப் பார்த்த சேஷாத்ரி சுவாமிகள், 'வாரும் அன்பரே, இன்று உனக்கு வேலையில் ஊதிய உயர்வு வாங்கித் தருகிறேன். வாங்கிக்கோ' என்று புன்னகை ததும்பக் கூறினார். சிவபிரகாசரோ, 'சுவாமி, என் வேலைக்கே ஆபத்து என்ற நிலையில் ஆறுதல் பெறவே இங்கு வந்தேன். என்னை சோதிக்காதீர்கள்' என்றார்.

சேஷாத்ரி சுவாமிகள்
சேஷாத்ரி சுவாமிகள்

பலமாக சிரித்த சுவாமிகள், தன் திருக்கரங்களால் அவர் தலையில் அடித்து ஆசிர்வதித்தார். மேலும் 'எல்லாம் தெரிஞ்சிகிட்டியா நீ, போ, போ, நல்லதே நடக்கும் பார்!' என்று விரட்டிவிட்டார். சுவாமிகள் இப்படி சொல்லியும் மன வருத்தத்தை விடாது தயங்கியபடியே மிகுந்த சோகத்துடன் வீட்டுக்கு வந்தார். அவர் முன்பே அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்து காத்துக்கொண்டு இருந்தது. அந்த கடிதத்தைப் பிரிக்கவே தயங்கினார், இந்த நிலையில் வேலையும் போய்விட்டால் குடும்ப நிலை என்னவாகுமோ என்று கலங்கினார். அந்தக் கடிதம் வேலை நீக்கத்துக்கான உத்தரவாக இருக்குமோ என்ற அச்சத்தால் அண்ணாமலையாரையும் சேஷாத்ரி சுவாமிகளையும் வணங்கிக் கொண்டார். பிறகு கொஞ்சம் தைரியம் கொண்டு அந்த கடிதத்தைப் பிரித்தார். ஆச்சர்யம்! அதிசயம்! அந்த கடிதத்தில் அவருக்கு 20 ரூபாய் சம்பள உயர்வும் கூடவே பதவி உயர்வும் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டு இருந்தது. சுவாமி சொல்லியும் நம்பவில்லையே என்று வெட்கத்தில் தழுதழுத்த சிவப்பிரகாசர் அந்த கணமே சுவாமியை தரிசிக்க ஓடினார். இப்படி சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம் ஏராளம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கலியுகத்தின் மிக சிறந்த ஞான குரு என்று போற்றப்படும் சேஷாத்ரி சுவாமிகளின் 152-வது ஜனன தினம் இன்று. தை மாத அஸ்தத்தில் பிறந்த இந்த ஞானியை இன்று வேண்டிக்கொண்டாலும் நினைத்தது நிறைவேறுகிறது என்கிறார்கள் அவர் பக்தர்கள். எனவே இந்நாளில் அவரைத் துதித்து நலமும் வளமும் பெறுவோம்!
ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகள்
ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகள்

ஞான குரு சேஷாத்ரி சுவாமிகளின் பொன்மொழிகளில் சில...

* நல்லவரும் அவரது புண்ணியம் பயன் அளிக்காதவரை துன்பத்தையே அனுபவிக்கிறார்கள். அதனால் புண்ணியத்தை விடாது சேருங்கள். அது பயன் அளிக்கும்போது அளப்பரிய ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள்.

* பகவத் நாமா ஒன்றே துன்பத்தைக் களையும் வழி!

* சத்சங்கம் ஒன்றே ஞானத்தை அடையவும் துக்கத்தைக் களையவும் சிறப்பான வழி.

* பகவானையும் ஞானிகளையும் அடிபணிந்து வாழுங்கள். அது உங்களை ஆனந்த நிலைக்குக் கொண்டு செல்லும்.

* ராமாயணம் உள்ளிட்ட ஞான நூல்களைப் பற்றிக் கொள்ளுங்கள். அதுவே உங்களை நல்லவனாக வாழ வழி கூறும்.

* சிவமே குரு. குருவே சிவம்.

* விபூதி, குங்குமம் இரண்டும் சிவ-சக்தி ஸ்வரூபம். எனவே, இரண்டையும் நெற்றியில் அணிய வேண்டும்.

* மண், பெண், பொன் இவை நிலையற்றவை. ஞானம், மோட்சம் இவை மட்டுமே நிலையானது. பிறவிப் பிணியிலிருந்து தப்புவதற்கு இதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

* கிடைப்பதைக் கொண்டு திருப்திப்பட வேண்டும். இதுவே ஆசையை ஒழிக்கச் சிறந்த வழி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism