Published:Updated:

பக்திப் பரவசம்; கோலாகலம்; பிரமாண்டம்! மெய்சிலிர்க்க வைத்த திருவாரூர் தேர்த் திருவிழா!

திருவாரூர் தேர்த் திருவிழா

இங்கு நடைபெறக்கூடிய தேர்த் திருவிழா, உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற இத்தேர் திருவிழா, வெகு விமர்சையாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்ததால் திருவாரூர் மக்கள் மிகுந்த மனநிறைவும் பெருமிதமும் அடைந்தார்கள்.

பக்திப் பரவசம்; கோலாகலம்; பிரமாண்டம்! மெய்சிலிர்க்க வைத்த திருவாரூர் தேர்த் திருவிழா!

இங்கு நடைபெறக்கூடிய தேர்த் திருவிழா, உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு நடைபெற்ற இத்தேர் திருவிழா, வெகு விமர்சையாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்ததால் திருவாரூர் மக்கள் மிகுந்த மனநிறைவும் பெருமிதமும் அடைந்தார்கள்.

Published:Updated:
திருவாரூர் தேர்த் திருவிழா

திருவாரூர் தியாகராஜர் சுவாமி திருக்கோயிலின் பிரமாண்ட தேர்த் திருவிழா, பக்திப் பரவசத்துடனும் மிகுந்த கோலாகலத்துடனும் நடைபெற்றது. இவ்விழாவில் திருவாரூர் மக்கள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்தும் வெளிமாநிலங்களிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

திருவாரூர் தேர்த் திருவிழா
திருவாரூர் தேர்த் திருவிழா

ஆசியாவிலேயே மிகப் பெரிய தேர் எனப் போற்றப்படக்கூடிய திருவாரூர் தேரின் சிறப்பம்சங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதன் மொத்த உயரம் 96 அடி. இதன் மரக்கட்டுமானம் மட்டுமே 350 எடை கொண்டது. தேர் திருவிழாவின் போது அலங்கரிக்கப்படும், மலர், காகிதம் உள்ளிட்டவைகளின் எடை 50 டன். இது மட்டுமல்ல, திருவாரூர் ஆழித்தேரின் சிறப்புகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய தேர்த் திருவிழாவை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பக்திகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். இங்கு நடைபெறக்கூடிய தேர்த் திருவிழா, உலக அளவில் பிரசித்தி் பெற்றது.

இந்த ஆண்டு பங்குனி உத்திர விழாவின் ஒரு பகுதியாக நேற்று இக்கோயிலின் ஆழித்தேரோட்ட விழா, நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகாலையில் தேரடி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 5 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், தேர்களை பக்தர்கள் வடம் பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக, தியாகராஜர் சுவாமியின் ஆழித்தேர் சக்கரத்துக்கு தேங்காய் உடைத்து பூஜை நடைபெற்றது. காலை 8.10 மணிக்கு மங்கள இசையுடன் வாணவேடிக்கை முழங்க தேரோட்டம் தொடங்கியபோது ‘ஆரூரா..., தியாகேசா...’ என இங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர பக்தி கோஷங்கள் எழுப்பி, மெய் சிலிர்க்கச் செய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, வணிக வரித்துறை மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, இந்துசாமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபன், திருவாரூர் ஆட்சிர் காய்த்ரி கிருஷ்ணன், திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர். தேரின் பின்புறம் 2 புல்டோசர்கள் தேர் சக்கரங்களை முன்புறம் தள்ளி விட மெதுவாக சக்கரங்கள் சுழன்று நிலையை விட்டு ஆடி, அசைந்து புறப்பட்டது. கம்பீரமாகக் காட்சி அளித்த ஆழித்தேர், திருவாரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த காட்சி இங்கு குடியிருந்த மக்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

திருவாரூர் தேர்த் திருவிழா
திருவாரூர் தேர்த் திருவிழா

ஆழித்தேரின் பின்புறம் கமலாம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். ஆழித்தேர் நேற்று மாலை 5.30 மணி அளவில் வடக்கு வீதியில் வலம்வந்தது. அப்போது ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் தேரின் அலங்கார கூரை உரசி நின்றது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கட்டடத்தில் உரசித் தேரின் கூரை சிக்கிய இடத்தில் லேசாகக் கட்டிடத்தை உடைத்துத் தேரைப் பின்புறம் இழுத்து நேர் பாதையில் தேர் நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் தேரோட்டம் தொடர்ந்து நடந்தது. இதனால் தேரோட்டம் சுமார் அரை மணி நேரம் தடைப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டுப் பல்வேறு அமைப்பினர், ஆன்மிக அமைப்பினர் ஆங்காங்கே அன்னதானம் வழங்கினர். ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர். இத்தேர்த் திருவிழா, வெகு விமர்சையாகவும் வெற்றிகரமாகவும் நடைபெற்று முடிந்ததால் திருவாரூர் மக்கள் மிகுந்த மனநிறைவும் பெருமிதமும் அடைந்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism