Published:Updated:

ஆழித்தேர்...அழகுத்தேர்!

ஆழித்தேர்
பிரீமியம் ஸ்டோரி
ஆழித்தேர்

ஆழித்தேர்

ஆழித்தேர்...அழகுத்தேர்!

ஆழித்தேர்

Published:Updated:
ஆழித்தேர்
பிரீமியம் ஸ்டோரி
ஆழித்தேர்

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் எல்லாமே பிரமாண்டம்தான். 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக் கிணறுகள், 3 நந்த வனங்கள், 3 பெரிய பிராகாரங்கள், 150-க்கும் மேற்பட்ட சந்நிதிகள், 365 லிங்கங்கள், 3 தேவியர், 86 விநாயகர்கள், 24-க்கும் மேற்பட்ட உள் கோயில்கள்... என 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருப்பது திருவாரூர் கோயில். இங்குள்ள கமலாலயக் குளமும் பிரமாண்டமானது.

ஆரூரா... தியாகேசா
ஆரூரா... தியாகேசா


அதேபோல் திருவாரூரின் திருத்தேரும் மிக மிக பிரமாண்டமானதாக உலகப் புகழ்கொண்டு விளங்குகிறது. பசுவுக்கு நீதி வழங்க, தன் சொந்த மகனையே தேரை ஏற்றிக் கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த ஊர் இது. அதனாலேயே இங்கு ஓடும் ஆழித்தேர் `சத்தியத் தேர்' என்றும் போற்றப்படுகிறது.

முசுகுந்த சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பட்ட ஏழு விடங்க மூர்த்தங்களைக் கொண்டுவர, தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர் என்கின்றன ஞான நூல்கள். பன்னிரு திருமுறைகளில் அதிகம் பாடப் பட்டதும் இந்தத் தேர்தான்.

`ஆழித்தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே' என திருநாவுக்கரசரும், `தேராரூம் நெடுவீதி திரு வாரூர்' என சேக்கிழாரும் போற்றுகிறார்கள்.

`ஆரூரா... தியாகேசா...' என்ற பக்திகோஷம் விண்ணைப் பிளக்க, மக்கள்வெள்ளத்தின் நடுவே அசைந்து ஆடி, வரும் ஆழித் தேரோட்டத்தைக் காண இரண்டு கண்கள் போதாது என்பார்கள். தேரோட்டம் அன்று திருவார் மக்கள் தங்கள் வீடுகளின் வாசலில் மோர்ப் பந்தல் அமைத்தும், அன்னதானம் வழங்கியும், வெளியூர்ப் பக்தர்களை சிறப்பாக விருந்தோம்பல் செய்வார்கள்.

கமலாம்பிகை
கமலாம்பிகை


ஆழித்தேரினை பிரம்மா ஓட்டிவர, இந்திரன் முதலான தேவர்கள் வான் நின்று வணங்கி மகிழ்வதாக ஐதீகம்.

ஆழித்தேர் வைபவத்தின் முதல் நிகழ்வான பந்தக்கால் முகூர்த்தத்தை திருஞான சம்பந்தர் தொடங்கி வைக்க. திருநாவுக்கரசர் நடத்தி வைக்கிறார் என்பதும் ஐதீகம். இன்றும் அதன்படியே விழா நடைபெறுகிறது.

கொடியேற்றத்துக்குப் பிறகு, தியாகராஜ பெருமானே தமது ஆழித்தேர் விழாவுக்குத் தேவர்களையும் அடியவர்களையும் அழைக் கும் விதமாகவே `திருமுகம்' எனும் அழைப்பு மடலும் எழுதப்படும். இதை ஆலய நிர்வாகி யான சண்டிகேஸ்வரர் ஆரூர் வீதிகளில் அறிவிக்கும் வைபவமும் நடைபெறும்.

ஆழித்தேர்
ஆழித்தேர்


ஆதியான ஆழித் தேர் 1926-ம் ஆண்டு தீ விபத்தில் முழுதும் எரிந்துவிட்டது. பிறகு, 1930-ம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப் பட்டு 1948-ம் ஆண்டு வரை ஓடியது என்று வரலாறு கூறுகிறது. அந்த அழகிய தேரில் 400-க்கும் மேற்பட்ட மரச் சிற்பங்கள் இருந்தன என்கிறார்கள். பின்னர், 1970-ம் ஆண்டு தமிழக அரசும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியாரும் இணைந்து திருப்பணி செய்ய - ஆழித்தேர் உருவாகி தேரோட்டம் நடைபெறத் தொடங் கியது.

`திருவாரூர் தேரழகு' எனும் சிறப்புக்கு ஏற்ப, உலகம் புகழும் ஆழித்தேர் விழா, இந்த வருடம் 15.3.2022 அன்று நடைபெற உள்ளது. இந்த இனிய வைபவத்தில் கலந்துகொண்டு இறைதரிசனம் செய்யும் அன்பர்களுக்குச் சகல வரங்களையும் தந்து மகிழ்விப்பார் ஆரூர் தியாகேசப் பெருமான்!