Published:Updated:

அட்சர பீடங்கள்... சங்க பதும நிதிகள்!

கமலாம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
கமலாம்பிகை

கமலாம்பிகை

அட்சர பீடங்கள்... சங்க பதும நிதிகள்!

கமலாம்பிகை

Published:Updated:
கமலாம்பிகை
பிரீமியம் ஸ்டோரி
கமலாம்பிகை

திருவாரூர் சப்தவிடங்க தலங்களில் ஒன்று. சிவபெருமானின் ஆணைப்படி விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்டது திருவாரூர் நகரமும் ஆலயமும் என்கின்றன புராணங்கள்.

கமலாம்பிகை
கமலாம்பிகை


வசந்த காலத்தில் பௌர்ணமி அன்று, குரு சந்திர யோகம் சேர்ந்த கடக லக்கினத்தில், புண்ணியபுரம் எனும் திருவாரூரின் நடுவில் தியாகபதியாகத் தோன்றினார் சிவபெருமான். அப்போது திருக்கோயிலின் நடுவே லிங்கமாகவும், தியாகராஜ வடிவமாகவும் தோன்றினாராம்.

திருவாரூர் ஈசனைப் போன்றே அருள்சாந்நித்தியத்தில் நிகரற்றுத் திகழ்கிறாள் கமலாம்பிகை. வடமேற்குத் திசையில் ஈசான்யத்தை நோக்கி கமலாம்பிகை கோயில் அமைந்துள்ளது.

இந்த அம்பிகை மூன்று தேவியரின் சங்கமம். க- கலைமகள், ம-மலைமகள், ல-அலைமகள். அம்பிகைக்குத் தனிக் கொடி மரம் உண்டு. சர்வேஸ்வரனைப் போன்று தன் சிரசில் கங்கை யையும் பிறையையும் சூடி, யோக வடிவில் அமர்ந்திருக்கிறாள்.

அம்பிகை கோயிலின் மேற்கு மூலையில் 51 அட்சரங்கள் எழுதப் பெற்ற அட்சர பீடமும், திருவாசியும் உள்ளன. கமலாம்பிகை கருவறையின் அணுக்க வாயிலின் இரு புறமும் சங்க- பதும நிதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தியாகராஜரின் அருகில் வீற்றிருக்கும் தேவிக்குப் பெயர் ‘கொண்டி’. இறைவனின் அருளை பக்தன் அடைந்து இன்புறச் செய்பவள் என்பதால் இந்தப் பெயர். கொண்டி என்பதற்கு ‘இணைப்பது’ என்று பொருள்.

இத்தலத்தின் ஆதி சக்தியான நீலோத்பலாம்பிகைக்கும் (அல்லியங்கோதை) தனிச் சந்நிதி உள்ளது.

நான்கு கரங்கள் கொண்ட இவளின் அருகே இடுப்பில் முருகனைத் தாங்கிய படி தோழி ஒருத்தி இருக்கிறாள். அம்பிகை, தன் இடக்கரங்களுள் ஒன்றால் முருகப் பெருமானின் தலையைத் தொட்டபடி காட்சியளிக்கிறாள். இது அபூர்வ தரிசனம்.

இந்தக் கோயிலில் எரிசினக் கொற்றவை (ரௌத்திர துர்கை) சந்நிதியும் உள்ளது. இவளை ராகு காலத்தில் வழிபட்டால் திருமணத் தடை அகலும் என்பது நம்பிக்கை.

- ஹ.லக்ஷ்மி, சேலம்