பிரீமியம் ஸ்டோரி

வரதன் அதிகம் படிக்காதவர். தினமும் நைவேத்தியம் தயாரித்து, பெருமாளுக்குப் படைத்து வழிபடுவது அவரது வழக்கம்.

ஒரு முறை, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்பிகை நள்ளிரவில் வரதன் முன் காட்சி அளித்தாள்: ‘‘என் அருளால் இன்று முதல் நீ பெரும் புலவனாவாய்!’’ என அருளி, வரதனின் நாவில் ஏதோ எழுதினாள். அதன்பின் வரதன் வாயைத் திறந்தால், மடைதிறந்த வெள்ளம் போல் கவிதைகள் வெளிப்பட்டன. வரதன் புகழ் பெற்ற புலவர் ஆனார்.

‘தியாகேசரின் பதக்கம்!’

ஒவ்வோர் ஊரிலும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் இறைவன்- இறைவியை மனமார தரிசித்து, அவர்கள் மீது பாடல் பாடி வழிபட்டு வந்தார் வரதன்.

அப்படி ஒரு நாள் அவர் திருவாரூர் சென்று, தியாகராஜரை தரிசித்தபோது, அவரை உசுப்பி விடுவது போல் அருகில் இருந்த சில சிவனடியார்கள், ‘‘நீர் பெரிய புலவராயிற்றே! அதனால் கவி பாடி இந்த தியாகேசனின் மார்பில் உள்ள வைரப் பதக்கத்தை அறுபட்டு விழ வைக்க முடியுமா?’’ என்று சவால் விட்டனர்.

புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்ட வரதன், ‘அன்ன வயல்கள் உன்னை சூழ்ந்திருக்கும்போது உன் நெஞ்சில் பழிவாங்கும்படியான வைர நெஞ்சம் இருக்கலாமோ? முன்பு ஒரு தொண்டன் (மனுநீதிச் சோழன்) தன் மகனைக் கொன்றும், வேறு ஒரு பக்தன் அவன் பிள்ளையைக் கொன்றும், இன்னொரு பக்தன்- சண்டன் மகனையும் கொன்று விட்ட நிலையில் உனக்கு வைரம் (வைராக்கியம்) தேவையா?’ என்று பொருள்படும்படி ஒரு பாடலை நயமாகப் பாடினார்.

அப்போது அனைவரும் ஆச்சரியப்படும் வகையில், தியாகேசனின் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்த வைரப் பதக்கம் சட்டென்று அறுந்து கீழே விழுந்தது! இத்தகைய சிறப்பு வாய்ந்த புலவர் வரதன் வேறு யாருமல்ல... புகழ் பெற்ற கவி காளமேகம்தான் அவர்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு