Published:Updated:

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்
பிரீமியம் ஸ்டோரி
News
திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

நவராத்திரி தரிசனம்

ஓவியம்: ம.செ

தி ருமாலின் திருமார்பில் வாசம் செய்பவள் மகாலட்சுமித் தாயார். அதனால் ஆழ்வார்கள் பெருமாளை ‘திருவாழ்மார்பன்’ என்ற திருநாமம் சொல்லி போற்றுவார்கள். அவ்வாறு திருவாழ்மார்பனாக ஸ்ரீநிவாசனாக பெருமாள் எழுந்தருளியிருக்கும் தலம் திருப்பதிசாரம்.

மகாலட்சுமி தேவி, பெருமாளின் மார்பில் சேர்ந்த திருத்தலம் இது என்பதால் இதற்குத் `திரு பதி சாரம்' என்று பெயர் வந்தது. இந்தத் தலத்தில் தாயார் திருமாலின் மார்பில் நித்தியவாசம் செய்யப் புகுந்தார் என்பதால், இங்கு தாயாருக்குத் தனிச் சந்நிதி இல்லை என்கிறது தலபுராணம். சப்தரிஷிகள் சூழ அமர்ந்த கோலத்தில் பிரமாண்டத் திருமேனியனாய் பெருமாள் அருள் தரும் இந்தத் திருத் தலத்தை தரிசனம் செய்வோம் வாருங்கள்.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

108 வைணவ திருத்தலங்களில் 75-வது திருத்தலம் திருப்பதிசாரம். 13 மலைநாட்டுத் திருப்பதிகளில் இரண்டு கோயில்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளன. ஒன்று திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில்; மற்றொன்று திருப்பதிசாரம். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலை அடுத்த ஒழுகினசேரி பழையாற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருக்கோயில். திருவட்டாறில் பெருமாள் சயனக்கோலத்தில் திருக்காட்சி கொடுக்க, திருப்பதிசாரத்திலோ வலது காலை மடக்கி, இடதுகாலைத் தொங்கவிட்டபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார் திருவாழ்மார்பன்.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

வெளிப் பிராகாரத்தில் கொடிமரமும் பலிபீடமும் அமைந் திருக்க, அவற்றை அடுத்து கொலு மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறைச் சுற்றுப் பிராகாரத்தில் கன்னிமூல விநாயகர் அருள்கிறார்.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

கருவறையில், சுமார் ஏழு அடி உயரத்தில், நான்கு கரங் களுடன் திருவாழ்மார்பன் திருக்காட்சி அருள்கிறார். கையில் சங்கு - சக்கரம் துலங்க, கழுத்தில் லட்சுமியின் திருவுருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்துடன் பக்கதர்களுக்கு அருள்பாலிக் கிறார். இந்தப் பெருமாளின் திருமேனி ‘கடுகு சர்க்கரை யோகம்’ என்ற மூலிகைகளால் செய்யப்பட்டது. அதனால் இங்கு பெருமாளுக்கு அபிஷேகங்கள் இல்லை. தண்ணீரில் நனைத்த ஈரமான பூமாலைகள்கூட மூலவருக் குச் சாத்தப்படுவதில்லை. கருவறையில் சப்த ரிஷிகளும் காட்சி தருகிறார்கள். மூலவருக்கு வலது புறத்தில் ராமர், சீதை, லட்சுமணன், விபீஷ்ணர், அனுமர், குலசேகர ஆழ்வார், அகஸ்தியர் ஆகியோர் ஒருசேர காட்சியளிக்கின்றனர். சந்நிதிக்கு எதிரில் கருடாழ்வார் காட்சி அளிக்கிறார்.

சுவாமியின் இடது புறத்தில் விஷ்வக்சேனர், நடராஜர், நம்மாழ்வார் ஆகியோருக்குத் தனித்தனிச் சந்நிதிகள் உள்ளன. கோயிலுக்கு எதிரில் சோமலட்சுமி தீர்த்தம் அமைந்துள்ளது. அதன் கரையில் அரசமரமும், வேப்பமரமும் ஒருசேர வளர்ந்து நிற்கின்றன. அரசமரத்தடியில் விநாயகர் மற்றும் நாகர் விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

‘வருவார் செல்வார் வண்பரிசாரத்து இருந்த என்

திருவாழ் மார்வற்கு என்திறம் சொல்லார் செய்வது என்

உருவார் சக்கரம் சங்கு சுமந்து இங்கு உம்மோடு

ஒருபாடுழல்வான் ஓரடியானும் உளனென்றே’

- என்று இக்கோயில் குறித்துப் பாடிய நம்மாழ்வாரின் அவதாரத் திருத்தலமும் இதுதான் என்கிறார்கள் இவ்வூர் பக்தர்கள். நம்மாழ்வாரின் தாய், நம்மாழ்வாரை ஈன்ற 41-ம் நாள் (வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் பிறந்தார்)குருகூரிலுள்ள ஆதிநாதன் சந்நிதியில் இட்டார். அந்த குழந்தை மெள்ள தவழ்ந்து சென்று அவ்வூர்க் கோயிலிலுள்ள புளியமரப் பொந்துக்குள் புகுந்தது என்பது திருக்கதை.

நம்மாழ்வாரின் தாயான உடையநங்கையார் வாழ்ந்த வீடு கோயிலுக்கு வெளியே வடக்குத் தெருவில் அமைந்துள்ளது. அங்கு நம்மாழ்வார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றன. திருவாழ்மார்பன் கோயிலில் நடக்கும் பூஜைகள் பற்றி கோயிலின் அர்ச்சகர் வீ.வாசுதேவன் போற்றியிடம் பேசினோம்.

“நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்த திருத் தலம் இது. இங்கு அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறந்து 10 மணிக்கு நடை சார்த்தப்படும். மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறந்து இரவு 7 மணிக்குச் சாத்தப்படும். இங்கு தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி, ஆவணித் திருவோணம், புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகிய தினங்களில் இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். சித்திரை மாதம் மிருகசீரிடத்தன்று கொடியேற்றப்பட்டு பத்து நாள்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஒன்பதாம்நாள் திருவிழாவில் தேரோட்டம் விசேஷம்” என்றார் வாசுதேவன்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“ஞானாரண்யம் என்கிற சுசீந்திரத்தில் சப்த ரிஷிகளுக்கு மும்மூர்த்திகளும் தாணுமாலையனாகக் காட்சி தந்தனர். அதே சப்த ரிஷிகளுக்குப் பெருமாள் இத்திருத்தலத்தில் நாராயணனாகக் காட்சி அளித்தார். சப்த ரிஷிகளும் நீராடின பெருமை உடையது இங்கு உள்ள சோமலட்சுமி தீர்த்தம். அதனால் இந்தக் குளத்தில் தண்ணீர் வற்றுவதே இல்லை.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துக்கு போய்விட்டு அயோத்தியிலிருந்து திரும்பும் வழியில், விபீஷணன் இங்குள்ள சோம தீர்த்தத்தில் நீராடினான் என்கின்றன புராணங்கள். மேலும், ராமரை மீண்டும் பட்டாபி ஷேகக் கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்ற விபீஷணனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக சீதா, லட்சு மணர் சமேதராக இந்தத் தலத்தில காட்சி அளித்தார் பகவான். குலசேகர ஆழ்வாரின் வெண் குதிரை இந்தப் பகுதியில் மேய்ந்ததால் இந்த இடத்திற்கு திருவண்பரிசாரம் என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். இந்தத் தலத்தின் பெருமாளை சேவித்தால் 108 திருப்பதிகளுக்கும் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.” என்றார் பெருமாளின் பக்தரும் ஓய்வுபெற்ற வங்கி மேலாளருமான ராமசுப்பிரமணியம். அடுத்து திருப்பதிசாரம் கோயிளின் பக்தர் செல்வம் என்பவரிடம் பேசினோம்.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

“ஐநூறு வருடங்களுக்குப் பிறகு , 20 ஆண்டுக்கு முன்புதான் இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு முன்பாக பிரச்னம் பார்த்தோம். அதில், இந்தக் கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் ஒருவர், சாமியை ஆராதனை செய்து சாமியுடன் ஐக்கியமாகிவிட்டார் என்பது தெரியவந்தது. அவரின் ஆன்மா இன்னும் சாமியோடு ஒட்டிகொண்டிருக்கிறது. அதனால் சாமிக்குச் செய்யும் எல்லா பூஜைகளும் அந்த அர்ச்சகரின் பிரம்ம சக்திக்கே போய்ச்சேர்கிறது என்றார்கள்.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

அதனால் கும்பாபிஷேகத்தின் போது அந்த பிரம்ம சக்தியை தெய்வத்திடமிருந்து பிரித்து வெளிப்பிராகாரத்தில கன்னி மூலையில் வைத்தார்கள். ஆனாலும், கோயில் மூலவருக்கு என்னென்ன நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப் படுகின்றனவோ, அவற்றை வெளிய இருக்கும் பிரம்ம சக்திக்கும் கொடுத்து வழிபடுகிறார்கள் என்பது விசேஷம். திருவிதாங்கூர் திருநாள் மகாராஜா இந்தக் கோயில் பெருமாள் மீது அளவுகடந்த பக்தி செலுத்தியதாகவும் சொல்கிறார்கள்” என்று சிலிர்ப்புடன் பகிர்ந்துகொண்டார் செல்வம்.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

நீங்களும் ஒருமுறை திருப்பதி சாரம் சென்று வாருங்கள்; உங்கள் வாழ்வில் நல்ல திருப்பங்கள் நிகழும்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

ஹரியும் ஹரனும் ஒருசேர உலா வரும் தலம்!

து நம்மாழ்வாரின் அவதாரத் தலம் என்பதால், ஆழ்வார் திருநகரியில் உள்ள நம்மாழ்வார் சந்நிதியில் கொடி ஏற்றுவதற்குமுன், மேளதாளத்துடன் திருப்பதிசாரம் வந்து இங்கிருந்து மண் எடுத்துக்கொண்டு போவது ஐதிகம்.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்
மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

அந்த மண்ணை ஆழ்வார் திருநகரி கோயில் கொடிமர மூட்டில் போட்டு, அதன் பிறகு கொடியேற்றுவதாகச் சொல்லப்படுகிறது.

மாலவனின் மார்பில் குடிகொண்டாள் மகாலட்சுமி! - திருப்பதிசாரம் திருவாழ்மார்பன்

மேலும் பெருமாள் கோயிலாக இருந்தாலும் இங்கு நடராஜர், சிவகாமி அம்மன் சந்நிதியும் உண்டு. சித்திரை மாதம் நடக்கும் திருவிழாவின் ஐந்தாவது நாள் திருவாழ்மார்பன் வெள்ளி கருட வாகனத்திலும் சிவன் - பார்வதி காளை வாகனத்திலும் எழுந்தருள்வர். மாலையில் நம்மாழ்வார் அன்ன வாகனத்தில் வீதியுலா வருவார்!

எப்படிச் செல்வது?:

நாகர்கோவிலிலிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்பதி சாரம். திருநெல்வேலி செல்லும் சாலையில் ஒழுகினசேரியைத் தாண்டியதும், பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரிந்து செல்லும் சாலையில் பயணித்தால், சுமார் 2 கி.மீ. தூரத்தில் திருவாழ்மார்பன் கோயில் அமைந்தள்ளது.