Published:Updated:

விஸ்வரூப தரிசனம்!

திருவொற்றியூர்
பிரீமியம் ஸ்டோரி
திருவொற்றியூர்

மூலவர் சுயம்பு என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது.

விஸ்வரூப தரிசனம்!

மூலவர் சுயம்பு என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது.

Published:Updated:
திருவொற்றியூர்
பிரீமியம் ஸ்டோரி
திருவொற்றியூர்

உலகம் உருவாகும் முன் ஈசன் இருந்து அருளிய தலம் ஆதிபுரி. இத்தலத்து இறைவனை வழிபட்டே, பிரம்மன் படைக்கும் தொழிலைத் தொடங்கினார் என்பது ஐதிகம். இத்தலத்தின் தற்காலப் பெயர் திருவொற்றியூர். இங்கு பிரம்மன் செய்த யாகத்திலிருந்து அக்னி ரூபமாக எழுந்தருளி அருள்பாலித்த ஈசன், அப்படியே லிங்கமாக மாறி கோயில்கொண்டாராம்.

இத்தலத்தில் ஆதிசேஷன் இறைவனை வழிபட்டார் என்றும், வாசுகி எனும் பாம்பு சிவபெருமானின் அருள்பெற்று அவரின் திருமேனியைத் தவழும் பேறுபெற்றது என்றும் சொல்கிறது தலபுராணம். படமெடுத்து நிற்கும் பாம்புடன் அருள்வதால் இத்தல ஈசனுக்குப் ‘படம்பக்கநாதர்’ என்று திருநாமம். ராமனின் மகனான லவன் இங்கு வந்து பிரதோஷ காலத்தில் யாகம் செய்து, சிவபெருமானிடம் பல வரங்கள் பெற்றதாக வரலாறு கூறுகிறது. அதேபோல் 27 நட்சத்திரங்களும் இங்கு வந்து ஈசனை வழிபட்டு அருள்பெற்றார்களாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘வணங்கும் அடியார்கள் பாவங்களை ஒற்றியூர் இறைவன் நீக்குவார்’ என்று ஞானசம்பந்தப் பெருமான் இத்தலத்து இறைவனைப் போற்றுகிறார். `கருவில் இருந்த நாள் முதலாக உன் பாதம் காண உள்ளம் உருகுகிறது. திருவெற்றியூர் இறைவா... எனக்கு இறங்குவாய்’ என்று திருநாவுக்கரசர் பாடிய தலம் இது.பட்டினத்தடிகள் இந்த உலக ஆசைகள் அனைத்தையும் துறந்து இந்தத் தலம் வந்து இறைவனுடன் கலந்தார். ராமலிங்க அடிகளுக்கோ இத்தலத்து அம்மை சாதம் ஊட்டி அவரை ஞானப் பாதையில் நடத்தினார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்பாளுக்கு இத்தலத்தில் அருள்மிகு வடிவுடையம்மன் என்று பெயர். எழில்கொஞ்சும் திருவுருவோடு திகழும் அன்னை இங்கு ஞான சக்தியாகக் கோயில்கொண்டுள்ளாள். அதனால்தான் ஞானிகளும் சித்தர்களும் இந்த அன்னையை நாடிவந்து வழிபடுகின்றனர். அப்படி, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு காரிய ஸித்தியை அருள்கிறாள் அம்பிகை.

விஸ்வரூப தரிசனம்!
விஸ்வரூப தரிசனம்!

இத்தகைய பெருமைகளோடு பூலோகக் கயிலாயமாகப் போற்றப்படும் இந்தத் திருத்தலத்தில் திருக்கார்த்திகை திருவிழா மிகச் சிறப்புடன் நடைபெறும். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று மாலை 6 மணி அளவில் ஸ்வாமி மீது சாத்தப்பட்டிருக்கும் தங்கக் கவசம் விலக்கப்பட்டு, ஸ்வாமியின் விஸ்வரூப தரிசனம் காண்பிக்கப்படும். அன்று முதல் தொடர்ந்து மூன்று நாள்கள் லிங்கத் திருமேனிக்குப் புனுகு, சாம்பிராணித் தைலம் ஆகியவை காப்பிடப்படும். மூன்று நாள்களுக்குப் பிறகு மறுபடியும் ஸ்வாமிமீது தங்கக் கவசம் அணிவிக்கப்படும்.

மூலவர் சுயம்பு என்பதால் அவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆதியும் அந்தமும் இல்லாத அருட் பெருஞ்ஜோதியான இந்த ஈசனைத் தொட்டு வழிபடுவதற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் பேராவல் கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால், தான் சுயம்புவாகத் தோன்றியவர்’ என்றும் தன்னைத் தொட்டுப் பூஜிக்க யாருக்கும் உரிமை இல்லை எனவும் ஈசன் மறுத்துவிட்டார். இருப்பினும் ஈசனை வழிபடும் ஆசையில் பிரம்மா, விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் கடுந்தவம் மேற்கொண்டனர்.

கருணைக் கடலான ஈசன் மனமிரங்கி அந்த மூவரும் திருக் கார்த்திகையை ஒட்டிய மூன்று நாள்கள் மட்டும் தன்னை பூஜிக்கலாம் என்று அனுமதி அளித்தார். இன்றும் அந்த மூன்று நாள்களும் பிரம்மன், விஷ்ணு, வாசுகி ஆகிய மூவரும் ஈசனை வழிபடுவதாக ஐதிகம்.

விஸ்வரூப தரிசனம்!

இந்த வருடம் திருக் கார்த்தி கைத் திருநாள் கார்த்திகை 24-ம் தெதி, செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர்-10) வருகிறது. அன்றிலிருந்து மூன்று நாள்கள் அதாவது டிசம்பர் 10, 11, 12 ஆகிய மூன்று நாள்களும் ஈசனின் சுயம்பு லிங்கத் திருமேனியை தரிசிக்க இயலும்.

ஸ்வாமியின் சுயம்புத் திருமேனியைக் கண்டு வழிபட, பிறவிப் பிணி தீரும். ஸ்வாமிக்குச் சாத்தப்படும் தைலக்காப்பும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதை பிரசாதமாகப் பெற்று பூஜை அறையில் வைத்து வழிபட சகல துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை.

நீங்களும் இந்தத் தினங்களில் திருவொற்றியூர் இறைவனை தரிசித்து வழிபட்டு, சகல வரங்களும் பெற்று வாருங்களேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism