திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

வாழ்த்துங்களேன்!

வாழ்த்துங்களேன்
பிரீமியம் ஸ்டோரி
News
வாழ்த்துங்களேன்

வாழ்த்துங்களேன்

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்... இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்.

வாழ்த்துங்களேன்
வாழ்த்துங்களேன்

அன்பார்ந்த வாசகர்களே!

உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது.

பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, பெயர்-நட்சத்திர விவரங்களை இனி உங்களின் மொபைல் போன் மூலமே பதிவு செய்யலாம். அவ்வகையில், இந்தப் பக்கத்தில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்திசெய்தால் போதும்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் விவரப்படி, இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான பிரார்த்தனைகள், அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், தமிழகத்தின் வழிபாட்டுச் சிறப்புமிக்க ஆலயங்களில் சமர்ப்பிக்கப்படும்.

30.5.23 முதல் 12.6.23 வரை பிரார்த்தனைக்குப் பதிவு செய்ய வேண்டிய கடைசித் தேதி: 26.5.23

தோரணமலை முருகன் சந்நிதியில் சிறப்புப் பிரார்த்தனை!

30.5.23 முதல் 12.6.23 வரையிலும் சுப நிகழ்வுகள், இனிய தருணங்களைக் கொண்டாடும் அன்பர்களுக்கான சிறப்புப் பிரார்த்தனை, தென்காசியிலிருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் சமர்ப்பிக்கப்படுகிறது.

முருகன் குகைக்கோயிலில் அருளும் இந்தத் தலத்தில் அகத்தியர் பெரிய அளவில் மருத்துவச்சாலை நிறுவி, பலருக் கும் வைத்தியம் செய்த சான்றுகள் உண்டு. அவருடைய சீடரான தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரண மலையில்தான் என்பர். வரும் ஜூன்-2 வெள்ளிக்கிழமை முருகனின் அவதார நாளான வைகாசி விசாகம் வருகிறது.

இந்தத் திருநாளில், முருகன் அருளும் சித்தர்களின் சாந்நித்தி யமும் நிறைந்த தோரணமலை திருத்தலத்தில், வாசகர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெறவும் அவர்களின் வேண்டுதல்கள் யாவும் நிறைவேறவும் வேண்டி வாழ்த்துப் பிரார்த்தனைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன!